கண்டியில் பிரமாண்டமான சுற்றுலா விடுதி (படங்கள் இணைப்பு)
மொஹமட் ஹபீஸ்
'சைனோ ஹொஸ்பிட்டலிடி' குழுமத்துடன், கண்டி ஹொடெல்ஸ் கம்பணி இணைந்து 'ஓசோ கெண்டி' என்ற பிமாண்டமான சுற்றுலா விடுதி ஒன்றின் அடித்தளப்பணிகளை பொருளாதார அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (10.8.2012)கண்டியில் ஆரம்பித்து வைத்தார்.
கண்டி வாவிக் கரையில் அமையவுள்ள இச் சுற்றுலா விடுதி 128 அறைகளையும் நீச்சற்தடாகம் உற்பட இலங்கையில் இதுவரை அமைக்கப்படாத பல வசதிகளைக் கொண்ட இலங்கையின் முதற்தர விடுதியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆமைச்சர் பசில் ராஜபக்ஷ,மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, சைலோ லங்கா நிறுவனத்தலைவ,பணிப்பாளர் சபை யைச் சேர்ந்த சிபான் புர்கான், சைமன் எலிசன் உற்பட அதிதிகள் விடுதி அமைப்பிற்கான பணிகளை ஆரம்பிப்பதை மேலே காணலாம்.




Sino Lanka Hotel Holdings நிறுவன பணிப்பாளரின் பெயர் சிபான் புர்கான் அல்ல, ஸ்டெபான் fபேர்கன் (Stefan Furkhan) என்பதாகும்.
ReplyDeleteஇவருடைய தந்தை பிறப்பால் முஸ்லிம் ஆன, பேருவளையைச் சேர்ந்தவரும், கொன்பிபி (Confifi) ஹோடேல்ஸ் நிறுவன முன்னாள் பணிப்பாளருமான தேசமான்ய M .T .M .Furkhan ஆவார். (தன்னை fபேர்கன் என்றே அறிமுகம் செய்து கொள்வர்.)
ஸ்டெபான் fபேர்கன் உடைய தாயார் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர். இவரது மனைவி ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். இவர்களில் யாருக்கும் இஸ்லாத்துடன் எத்தகைய தொடர்பும் இல்லை என்பதனை பேருவளை மக்கள் உறுதி செய்கின்றார்கள்.
ஆகவே, இப்பாரிய முதலீட்டு முயற்சியில் முஸ்லிம்கள் சம்மந்தப் பட்டிருப்பதாக எண்ணி நாம் மகிழ்ச்சியடைய எதுவுமில்லை.