Header Ads



ஜாமிய்யா நளீமிய்யாவை இஸ்லாமிய தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும்படி கோரிக்கை

இலங்கை முஸ்லிம்களின் கலங்கரையாக விளங்கும் ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடத்தை தனியார் இஸ்லாமிய பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நளீமிய்யாவின் முகாமைத்துவ சபையிடம் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையிலேயே இது பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

முஸ்லிம் சமூகத்தின் கல்வித்துறைக்கு உயிருட்டியவர்களில் ஜாமிய்யாவின் ஸ்தாபகர் நளீம் ஹாஜியார் முதன்மையானவர். அவரால் உருவாக்கப்பட்ட நளீமியா கலாபீடம் உலகின் பல பாகங்களிலும் தமது திறமைசாலிகளை விதைத்துள்ளது. இத்தொடரின் ஒரு அங்கமாக இஸ்லாமியப் பல்கலைக்கழகமாக ஜாமிய்யாவை மாற்ற வேண்டுமென்ற சிந்தனையை நாம் வைக்கிறோம். இச்சிந்தனைக்கு இன்றுள்ள சூழலில் மிகப் பொருத்தமானது நளீமிய்யா மட்டுமே.

கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற புத்தசிரவாக பிக்கு பல்கலைக்கழக திருத்தச்சட்டமூல விவாதத்தின் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, இஸ்லாமிய பல்கலைக்கழகமொன்றின் தேவையை வலியுறுத்தியமையை எடுகோளாகக் கொண்டு அதற்கான சூழல்கொண்ட பேருவளை ஜாமிய்யா நளீமிய்யாவை ஓர் இஸ்லாமியப் பல்கலைக்கழகமாக மாற்ற அரசியல் மற்றும் சூழ்நிலைகளை மறந்து முன்வரவேண்டும்.

இன்று முஸ்லிம் கல்வி வீதம் அதிகரித்துக்கொண்டுவரும் சூழ்நிலையில் பல்கலைக்கழக ஒழுக்க விழுமியங்களை கேள்விக்குறியாகியுள்ளன. இதனைச் சீராக்க வேண்டுமாயின் தனியான இஸ்லாமியப் பல்கலைக்கழகம் என்ற எண்ணக்கருவை நோக்கி முஸ்லிம் சமூகுத்தினர் நகர வேண்டியுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
    அஸ்ஸலாமு அலைக்கும்
    பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் மேற்படி முயற்சிக்கு இறைவன் அருள்பாளிப்பானாக.

    ReplyDelete
  2. நல்ல முயற்சி என்று பாராட்டும் அதே வேளை சில விடையங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

    முஸ்லிம் பாடசாலைகள் என்று நமக்கென தனியான பாசாலைகள் இருப்பதை காரணம் காட்டி, நாட்டின் பிரபல பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்களை அனுமதிப்பதில் புறக்கணிப்பு மேற்கொள்ளப் படுகின்றது.

    முஸ்லிம் மாணவிகளை தமது இஸ்லாமிய ஆடைகளை நீக்கும்படி வற்புறுத்தப் படுகின்றது. எதிர்ப்புத் தெரிவித்தல், 'முஸ்லிம் பாடசாலைக்கு போகவும்' என்று பதில் சொல்லப் படுகின்றது.

    பல்கலைக்கழக விடையத்தில், இவ்வாறான நிலைமைகள் ஏற்படாது என்பதை உறிய துறை சார்ந்தவர்கள் ஆராய்ந்து உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. நல்ல செய்தி, இதற்கான முயற்சிகளை செய்கின்றவர்களுக்கு இறைவன் அருள்புரிவானாக முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற சூழலில் அவதானமாக காய் நகர்த்த வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.சகல விடயங்களையும் அனைவரின் புரிந்துணர்வோடும் செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை.

    ReplyDelete
  4. we appreciate the attempt we try our best for advancement of Jamiah Naleemiah forever almighty Allah will give the reward who try in this corner sadick na

    ReplyDelete

Powered by Blogger.