Header Ads



முஸ்லிம்களின் நோன்பு மிகப் பயன்மிக்கது - கம்புறுகமுவே வஜிர தேரர்

சிங்களப் பஜரதேசங்களில் பௌத்த விகாரைகளின் அபிவிருத்திக்கு முஸ்லிம்கள் உதவி வருகிறார்கள். விகாரைகளின் நிர்வாக கட்டமைப்பிலும் அவர்கள் அங்கம் வகிக்கிறார்கள். சகோதரத்துவத்துடனும் அவர்கள் பழகி வருகிறார்கள் என பேராசிரியர் கம்புறுகமுவே வஜிர தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்றுள்ள நிகழ்வொன்றில் உரையாற்றியுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை வாழம் முஸ்லிம்கள் நாட்டுக்கு எதிராக உருபோதும் செயற்பட்டதில்லை. எல்லாப் பிரதேசங்களிலும் வாழும் அவர்கள் ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள். பௌத்த விகாரையில் இப்தார் நடாத்தியதை சிலர் விமர்சிக்ககலாம். அந்த விமர்சனங்களை எதிர்கொள்ள நாம் தயாரகவுள்ளோம்.

முஸ்லிம்களின் நோன்பு மிகவும் பயன்மிக்கது. இன்று பல அமைப்புக்களில் விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அது முஸ்லிம்களின் நோன்பிலிருந்து வேறுபட்டது. தம் தேவைகளை கோரிக்கைகளை நிறைவேற்ற சிலர் விரதம் அனுஷ்டிக்கிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் தம் ஆசைகளைக் கட்டுப்படுத்துவதற்காக நோன்பிருக்கிறார்கள். ஆசைகளை கைவிடுவதால்தான் வாழ்வின் சுகத்தைக் காணலாம். முஸ்லிம்களது நோன்பு அதனையே பிரதிபிலக்கிறது என்றார்.

No comments

Powered by Blogger.