உயர் கல்வி தொடர்பாக ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு
பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வி துறையில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய வேலைத்திட்டத்தின் கீழ், புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் 2010 மற்றும் 2011 ஆகிய வருட பட்டதாரிகள் பணிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர பட்டதாரி சங்க பிரதிநிதிகளுக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது தொடர்பாக ஆராயப்பட்டது.
இதனிடையே, 1994ஆம் ஆண்டு முதல் இதுவரை இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு நிர்வாக சேவை பரீட்சைக்காக முன்னிலையாவதற்கும் அனுமதி அளிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதனிடையே, பட்டதாரிகளின் சேவை மற்றும் தரங்களை உயர்த்துவதற்காக விசேட வேலைத் திட்டங்களும் அறிமுகப்படுத்தபடவுள்ளது.
இதன் போது உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொருளாதார கட்டமைப்பிற்கு ஏற்ப பட்டதாரிகள் உருவாக வேண்டும் என குறிப்பிட்டார்.
Post a Comment