Header Ads



ஒரு பூனைக்காக..! ஒருவர் மரணம் - 5 பேர் மயக்கம் - இலங்கையில் சம்பவம்

AD

25 அடி குழியொன்றில் விழுந்த பூனை ஒன்றை காப்பாற்ற முயன்ற ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று அலவ்வ - டிரிகெலிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

2012-08-09ம் திகதி நேற்று மாலை 7 மணியளவில் டிரிகெலிய பிரதேசத்தில் 25 அடி குழியில் பூனை ஒன்று விழுந்து மேலே வருவதற்கு தவித்துக் கொண்டிருந்தது.

அந்தப் பக்கமாகச் சென்ற நபரொருவர் பூனையை காப்பாற்றவென குழிக்குள் இறங்கியுள்ளார்.  குழிக்குள் இறங்கிய அவர் மூச்சு எடுக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

இதனை அறிந்த நான்கு இளைஞர்கள் குழிக்குள் இருக்கும் பூனையைும் இளைஞனையும் மீட்க அதனுள் இறங்கியுள்ளனர்.  துரதிஸ்டவசமாக குழிக்குள் இறங்கிய பூனையை தவிர அனைவரும் மூச்சு எடுக்க முடியாமல் மயக்கமடைந்தனர்.

சம்பவத்தை கேள்வியுற்ற பிரதேசவாசிகள் உடன் சென்று குழிக்குள் இருந்த பூனையையும் 5 நபர்களையும் மீட்டு அலவ்வ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதன்போது சிகிச்சை பலனின்றி 45 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். ஏனையோர் உயிர்பிழைத்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

2 comments:

  1. ‎"ஒரு மனிதர் ஒரு பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றைவிட்டு) அவர் வெüயே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) "எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்' என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தமது வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவருடைய பாவங்களை) மன்னித்தான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைச் செவியேற்ற) மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்'' என்று சொன்னார்கள்.
    அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி 2363, 6009

    ReplyDelete
  2. வருத்தமில்லா வாலிபர், அல்லாஹ் உங்களுக்கு நல்லருல் புரிவானாக.

    ReplyDelete

Powered by Blogger.