Header Ads



முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் 16 திகதி வழங்கப்படும்

முஸ்லிம்களின் புனித ரமழான் பண்டிகையையொட்டி முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை இம்மாதம் 16 ஆம் திகதி முன்கூட்டியே வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை திறைசேரி மேற்கொண்டுள்ளதுடன் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான ஆகஸ்ட் மாத சம்பளத்தை 16 ஆம் திகதி வழங்குமாறு சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் திறைசேரி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

முஸ்லிம் மக்கள் இம்மாதம் 19 ஆம் திகதி புனித ரமழான் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர். பெருநாள் கொண்டாட்டங்களை மேற்கொள்ள வசதியாகவே அவர்களுக்கான ஆகஸ்ட் மாத சம்பளம் முன்கூட்டியே வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.