Header Ads



தம்புள்ள பள்ளிவாசலை அகற்றினால்..? அரசாங்கத்திற்கு ரவூப் ஹக்கீம் முன்னெச்சரிக்கை

உதயன்

தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படக்கூடாது என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறது. பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றினால் அரசு சர்வதேச ரீதியாகவும், உள்நாட்டிலும் பெரும் விளைவுகளை, பாரதூரமான பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிவரும். தம்புள்ளை புனிதப் பிரதேசத்திற்குள் பள்ளிவாசல் இருக்கிறது எனக் கூறப்படுவதை நான் முற்றுமுழுதாக நிராகரிக்கிறேன். அப்படி எந்த இடத்திலும் எழுதப்படவில்லை, வரையறுக்கப்படவுமில்லை. தம்புள்ளவில் இவர்கள் கூறும் இடம் புனிதப் பிரதேசமே அல்ல''

இவ்வாறு "கருத்து வெளியிட்டு அரசுக்கு முன்னெச்சரிக்கை விடுத்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப்ஹக்கீம். தம்புள்ளை பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்பட வேண்டுமென எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து கருத்துவெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

தம்புள்ளையில் பள்ளிவாசல் அந்த இடத்திலிருந்து அகற்றப்படுவதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. இந்த விடயத்தில் நாம் எமது சமூகத்தின் உணர்வுகளை நிலைநிறுத்தி தெளிவுடன் பிரதிபலிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

60 வருடகால பள்ளிவாசலை எதுவித அடிப்படைக் காரணங்களுமின்றி அகற்ற வேண்டுமெனக் கூறுவது எந்தவிதத்திலும் ஏற்க முடியாது. இது விடயமாக நான் சற்றுமுன்னர் கூட அமைச்சர் பஸில் ராஜபக்ஷவைத் தொடர்புகொண்டு கேட்டேன். அவசரப்பட்டுத் தீர்மானங்களை எடுத்து தேவையற்ற சிக்கல்களில் விழுந்துவிடாதீர்கள் என்று நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன்.

தம்புள்ளையில் இந்தப் பள்ளிவாசல் இருக்கும் இடம் இவர்கள் கூறும் புனித பிரதேசமே அல்ல. அப்படி எங்கும் குறிப்பிடப்படவுமில்லை. எந்தப் புத்தகத்திலும் இந்தப் பிரதேசம் புனித பிரதேசம் என்று குறிப்பிடப்படவில்லை. இதை நான் பொறுப்புடன், ஆதாரத்துடன் கூறிவைக்க விரும்புகின்றேன்.

அமைச்சரவையில் எதிர்ப்பேன்
அமைச்சரவையில் நான் இதனை வன்மையாக எதிர்ப்பேன். தம்புள்ளையில் உள்ள சிங்கள மக்கள், மதகுருமார்கள் பலர் இந்தப் பள்ளிவாசல் அங்கு இருப்பதை ஆட்சேபிக்கவில்லை. ஆனால் ஒருசில பிக்குமார் வெளியிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்து இந்தக் கைங்கரியத்தில் ஈடுபடுகின்றனர்.

இதற்குச் சில துவேஷம் மிக்க சிங்கள வானொலி துணைபோகின்றது. அதற்கும் மேலாக எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் இதனை நியாயப்படுத்துவது மிகவும் கொடுமையான விடயமாக இருக்கின்றது.

அமைச்சரவையில் நான் இதனைக் கடுமையாக ஆட்சேபிப்பேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் எமது தனித்துவத்தை விட்டுக்கொடுக்கமுடியாது. அந்தப் பேச்சுக்கே இடமில்லை. என்ன நினைத்துக் கொண்டு இவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள்? இந்த அரசுக்காக ஜெனிவாவில் போய் வக்காளத்து வாங்கினீர்களே? அதற்கு ஆட்சியாளர்கள் செய்யும் கைம்மாறு இதுதானா என்று கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்கள் கேட்கும் கேள்வியில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது.

 எல்லாவற்றிற்கும் ஒரு எல்லையுண்டு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.

 விளைவு பாரதூரம்
பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படக்கூடாது; உடைக்கப்படக்கூடாது என்பதில் எமது நிலைப்பாடு மிகவும் உறுதியானது. இந்தச் சந்தர்ப்பத்தில் அனைத்து முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும் ஒன்றுபடவேண்டிய தேவையும், கட்டாயமும் இருக்கிறது. நாங்கள் எமது நிலைப்பாட்டை அரசுக்குத் தெளிவாகச் சொல்லிவிட்டோம். அதையும் மீறி அரசு செயற்படுமானால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்பதையும் சொல்லிவைக்க விரும்புகிறோம். அதனை அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.

 பலவீனமான சமுதாயத்தைப் பாதுகாக்க முடியாத அரசு பலமான அரசாக இருக்கமுடியாது. சமூகத்தின் நன்மை கருதி எந்தவிதமான தீர்மானத்திற்கும் செல்வதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம். அதில் வேறு பேச்சுக்கே இடமில்லை என்றும் குறிப்பிட்டார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

36 comments:

  1. wel done hakeem

    ReplyDelete
  2. சகோதரர் ரவூப் ரகீம் அவர்களே,

    தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் தங்களின் உரிமைக் குரலை மதிக்கிறோம்.

    சிங்கள மக்களுடன் பேசித் தீர்க்க வேண்டிய விடயங்களை, சமயோசிதமான முறையில் இணக்கம் காண்பதே நமது கடமை.

    அதை விட்டு விட்டு, தமிழ்த் தலைமைகள்போல் வீர வசனங்களை அள்ளி வீசுவதை முஸ்லிம்கள் விரும்ப மாட்டார்கள்.

    தமிழ்த் தலைமைகளுக்குப் பீடித்த பரம்பரை நோய் தங்களை அணுகுவதை நாம் விரும்பவில்லை.

    ஊடகங்களால் மாற்றின மக்கள் செய்யும் உசுப்பேற்றல், எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றல் போன்ற துரோகங்களை நாம் அசட்டை செய்து, பொறுப்புணர்வுடன் செயல்படுவதே சிறந்தது.

    திம்புவிலிருந்து ஜெனீவாவரை 30 வருடங்களாக நமது நாட்டை வெளிநாடுகளில் சீரழித்த பெருமை தமிழினத்தைச் சாரும். கண்ட பலன் ஒன்றும் இல்லை. இன்றுவரை ஓர் அங்குலம்கூட, அரசாங்கம் அசைந்து கொடுக்கவில்லை.

    தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றதுபோல், நீங்களும் ஆகிவிடக்கூடாது என்று பிரார்த்திக்கிறோம்.

    தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பில், சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி இணக்கத்தைக் காணுமாறு தங்களை வினயமாய் வேண்டுகிறேன்.

    அல்லாஹ் தங்களுக்கு அருள் பாலிப்பானாக!

    ReplyDelete
  3. சும்மா வெட்டி பேச்சு ....... பிறகு பாருங்க இவ்வனுகளுக்கஹவே .. சவுதி கட்டார் எல்லாம் பொய் பிச்ச எடுப்பான்..

    ReplyDelete
  4. Ihsan Reborn25/04/2012, 16:31

    Well said, Hakeem. You made your point well.

    ReplyDelete
  5. i think the Anonymous who advises to Mr.Rauf Hakeem might be the adviser of Mr Gampola Cader.

    ReplyDelete
  6. i agree with u sir further if government taking a decision gonna destroyed mosque or order to shift from their will u resign or refuse justice minister post ????

    ReplyDelete
  7. கண்டி மாவட்டத்தில் அமைச்சர் ரவுப் ஹகீம் இற்கு சிங்கள மக்களில் ஒரு சிலரும் தேர்தலில் வாக்கு அளித்ததை மறக்கக்
    கூடாது .நன்கு யோசித்து அறிவு ரீதி யாக பேசி முடிவு எடுக்கவும் அதிகமான சிங்களவர்கள் முஸ்லிம்களுடன் நல்ல மரியாதையுடன் பழகி வருகின்றனர். சிங்கள முஸ்லிம் உறவுக்கு விரிசல் இல்லாத வகையில்
    எந்த தீர்மானமும் எடுக்க வேண்டும் . நாம் குரான் ஹதீஸ் வழியில் செல்வதே நல்லது. நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அதைபார்த்து பின்னாளில் எத்தனைப் பேர் இஸ்லாத்தில் நுளைவர்களோ அல்லாஹ் அறிவான்-
    முகமது நவாஸ்
    .

    ReplyDelete
  8. sinhala makkalukku mathathila irukkum parru kooda nammadavanukku illaye comment s a paaru

    ReplyDelete
  9. Dear Nawas,

    I have a question with brutal Sinhalees that is this last holy land in Sri Lanka or some more available where mosque already built?

    ReplyDelete
  10. Mr. Navas,

    I have a question with this brutal sinhalees, Is this last holy land in Sri Lanka or still they are going to find where Mosque already built?

    ReplyDelete
  11. brother neenga solrathu sari bt intha prblm ku vere epdi theervu kanpathu.... vellam vanthathuku pirahu anai katti velai illainga.... neengathan minister maar ellam enga poitanga nu ketkuringa, easuringa... pirahu niyam kettu vantha avangale kurai solringa... unga nokkam enna? intha perinawathihale ipdiye vittal neenga solra mathiri tamil samuhathuku nadantha athe kodumai nam samuhathukum nadakum enpathil thooramille... purinchukonga...

    ReplyDelete
  12. anonmous neenga enna hisbulla pesina polave pesitu irukkeenga intha matter la ipdi pesama epdi pesa ok odahikonga nu solla sollureengala neenga ?

    ReplyDelete
  13. NAWAS(anonymous) you want leader like cader and hisbullah who shamelessly bow downd to that racist monk, u want keep our muslim umma keep under foot of these racists,you may watched how shamelessly hisbullah betrayed our muslims to achieving his credit from pre.mahinda, actually this is correct time to identityfy our leader real face

    ReplyDelete
  14. Gampola cader and hisbullah only telling remove the mosque.we hate cader & hisbullah

    ReplyDelete
  15. Well done sir,

    ReplyDelete
  16. we are going to correct way.......i proud of our leader

    ReplyDelete
  17. without shouting U better try to bring the situationt back to normal by holding hands with all the muslims and try to negotiate with the governmnet and make sure the Mosque is safe and to continue our activities in this mosque.

    Dont treat this issue for your politics credits coz this is the House of All mighty Allah.
    HMMR

    ReplyDelete
  18. arasukkaha wendi sampalathudan awarhalukku koolippadai anaal yemathu muslim samoohathai poruthawarai kulappangal neyridumpothu punitha maarkkam islaam... insha allah ottumotha samoohamum allahwaal arulappatta markkathai sampalamaha hontu inku naam ellorumey koolippadayinarey...

    ReplyDelete
  19. mulimgalukkaha nalla mudiwai edungal minister awarkale
    wassalam
    p.g.s.m.i.m

    ReplyDelete
  20. Masha Allah Rauff Hakeem Neengal pesuvadu 100% true... ALLAH Ungalukku ''ARUL PURIVANAAHA AAMEEN....''

    ReplyDelete
  21. we should save our mosque on behalf of the sake of the Dambulla muslims...

    ReplyDelete
  22. செய்னுலாபடீன்02/05/2012, 20:06

    உண்னையை உரத்துத்தான் கூறவேண்டும். Anonymous றஊப்ஹகீமை எச்சரிப்பது போல் இருக்கிறதே. ஒருவேளை அநொனிமசும் எண்ணை ஊற்றுகிறாரே தெரியவில்லை. அல்லாஹ்வின் நாட்டம் எதுவோ அது நடக்கும். அதற்காக நாம் சும்மா இருக்கவேண்டும் என்பது பொருளல்லவே. அல்லாஹ் நேர்வழியில் இருப்பவர்களைக் காப்பாற்றுவானாக.

    ReplyDelete
  23. maanpumihu rauff hakeem amaichar awar kale
    ALLAH UNGALUKKUM ENGALUKKUM POORA MUSLIM KALUKKUM
    NAL ARUL PURIWAAN ....UNGAL PANIYAI THODARUNGAL
    P.G.S.M.I.K.WATTA

    ReplyDelete
  24. rauf hakeem sir wall done sir well sabbase

    ReplyDelete
  25. weldone. but dont hurt innoccent budhists mind. there r some communalists like Inaamaluwe in the Budhist society.

    ReplyDelete
  26. wel done mr rauf hakeem i whish u all the best எனது நன்றிக்கடன் இதற்கு உவமையகது
    அதை விட மேலான கூலியை இறைவன்
    உமக்கு அளிப்பானாக

    ReplyDelete
  27. Pothunalvaathi
    அடேAnonymous உனககென்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? என்னடா நல்லவன் போல் கருத்துக்களை சொல்லிவிட்டு மடயனைப் போன்று நடந்துகொள்வது

    ReplyDelete
  28. kader & hisbulla sucks

    ReplyDelete
  29. Dear Muslim Brothers in forum!!
    Be serious The time has come to think act seriously in Lanka, we cannot dream anymore Ministers or Civilians have to have pain in forthcoming years.
    I do personally appreciate Mr. Rauf Hakeem's dare, we all knew the mongs and its horrible approaches, just assume that you are in his position; life threatening Job anytime anything can be happened, we shouldn't forget what was the end to MHM Ashraf.
    Writing a comment in a room is so easy but practically Mr. Rauf Hakeem has shown his brave words and responsibility on Muslim Community where there so many politicians keep silent or support extremist. This is the time we unity and to encourage the people whe have Eemaan, goodwill and human being.
    Almighty Allah knows what to do...,,, Allah Akbar.

    AbuBasim-KSA

    ReplyDelete
  30. இப்பொழுது ஹிக்கீம் அவர்களும் அரசாங்கத்தின் தாளத்துக்கு ஆட தொடக்கி விட்டார் என்பது  நிதர்சனமான உண்மை

    ReplyDelete
  31. இப்பொழுது ஹிக்கீம் அவர்களும் அரசாங்கத்தின் தாளத்துக்கு ஆட தொடக்கி விட்டார் என்பது  நிதர்சனமான உண்மை

    ReplyDelete
  32. As a representative of muslim community you should handle this issue stratagically and bravely, should not keep any room to break the relationship between two society,and also first make known to whole muslim world and human right commission via give preasure to the govenment, explain how they are wrong and prove the land belongs to us for the same we can take legal steps. as a minority we can't go against or fight against them as we know what happened to tamils. we should address every single issues to world community and prepare a documentary. insted of critisizing a persons's view pls give some valuable ideas, which help our leaders to select the best one out of millions alternative ideas.

    ReplyDelete
  33. கிளிச்சாரு

    ReplyDelete
  34. OTRUMAIP PATTAL VETRI NICHCHAYAM.

    ReplyDelete
  35. ELECTION ENBATHANAAL MAARKKATRU VANTHATHUPOLA VILANGUTHU ELECTION M,UDINTHAAL INTHA UNARVUKAL KAANAAMAL POKUM THIRUMBA ORU ELECTION VANTHAAL THIRUMBA VARUM ITHUTHAAN POLITICS DRAMAA

    ReplyDelete

Powered by Blogger.