Header Ads



யாழ்ப்பாணத்திற்கு 33 ஆயிரத்து 208 வீடுகள் தேவையாம்

யாழ். மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து 634 வீடுகள் மக்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும் இன்னும் 33 ஆயிரத்து 208 வீடுகள் தேவை என யாழ். மாவட்ட செயலகத்தின் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் போரின் பின்னர் வீட்டுத் தேவைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. இதில் 60 ஆயிரத்து 842 வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. இதில் அண்மையில் விடுவிக்கப்பட்ட உயர்பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கப்படவில்லை.

இந்திய அரசின் நிதியுதவியுடன் முன்னோடி வீட்டுத் திட்டத்தில் 150 வீடுகளும், இரண்டாம் கட்டத்தில் 9 ஆயிரம் வீடுகளும் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு வீடமைப்புத் திட்டத்தில் 13 ஆயிரத்து 350 வீடுகள் முற்றாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மீள்குடியேற்ற அமைச்சினால் 100 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினூடாக 585 வீடுகளும், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக 2 ஆயிரத்து 538 வீடுகளும், இலங்கை இராணுவத்தின் மூலம் ஆயிரத்து 700 வீடுகளும், வங்கிகள் ஊடாக 211 வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இன்னமும் 33 ஆயிரத்து 208 வீடுகள் தேவை என்று இனங்காணப்பட்டுள்ளது. இதனை விட உண்மையில் அதிகளவான வீடுகள் தேவையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

1 comment:

  1. வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம்களுக்கு உரிமை இல்லை போலத் தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.