February 22, 2018

அல்லாஹ்வின் இல்லத்தில் கனடா பிரதமர், பள்ளிவாசலின் புனிதமும் காத்தார் - (படங்கள்)


குடும்பத்தினருடன் இந்தியா வருகை தந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டெல்லியிலுள்ள ஜுமுஆ மசூதியை ஆன்மீக உணர்வோடு பார்வையிட்டார்.

பள்ளியில் நுழையும்போதே பள்ளியின் புனிதம் காக்கும் விதமாக அவருடைய ஷூவையும், மனைவி மற்றும் குழந்தைகளின் ஷூக்களையும் வெளியில் கழட்டி வைத்து விட்டே உள்ளே நுழைந்தனர்.

மேலும் அவருடைய மனைவி மற்றும் மகள் முஸ்லிம் பெண்கள் அணியும் (ஸ்கர்ப்) தலைப்பாகை அணிந்திருந்தனர்.

இறைவன் அவருடைய குடும்பத்தினருக்கு நிறைந்த ஆரோக்கியத்தை தருவானாக...

நபி யூசுஃப் (அலைஹி) அழகிய வரலாற்றிலிருந்து சில படிப்பினைகள்

o பொறாமை எண்ணம் கொண்டவர்களிடம் தன்னுடைய நல்ல கனவைக் கூட சொல்லிக் காட்டக் கூடாது என்கிற படிப்பினை *அல்குர்ஆன் (12: 4, 5)*

o தனிமையிலும் அல்லாஹ்வை நினைத்து அஞ்சி நடந்துக் கொள்ளும் முன்மாதிரி. *அல்குர்ஆன் (12: 23 & 33-34)*

o எப்படிப்பட்ட சோதனையான நிலையிலும் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த ஈமான் உறுதி நமக்கோர் படிப்பினை *அல்குர்ஆன் (12: 37-40)*

o தன்னை கண்ணியமாகவும், நேர்மையாகவும் நடத்தும் தன் முதலாளியிடம் துரோகம் செய்வது அநீதியென்பதை உணர்த்தும் பாடம். *அல்குர்ஆன் (12: 23)*

o நமக்கு கவலை ஏற்படுத்தும் சில விஷயங்கள் நடக்கும்போது, நமக்கு தெரியாமலே அல்லாஹ் அதில் பல நன்மைகளை வைத்திருப்பான் என்ற படிப்பினை. *அல்குர்ஆன் (12: 15)* *மற்றும் ஸூராவின் கடைசி பகுதி ஆயத்கள்)*

o சோதனைகள் வரும்போது அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து அழகிய பொறுமையை மேற்கொண்டால், அதற்காக அல்லாஹ் நமக்கு நல்ல பிரதிபலன்களைத் தருவான் என்று உணர்த்தும் பாடம் *அல்குர்ஆன் (12: 18, 21, 90 & 99-100)*

o நம்முடைய எல்லா கஷ்டங்களையும் அல்லாஹ்விடத்தில், அவனே நீக்கி வைப்பான் என்ற நம்பிக்கையோடு முறையிட வேண்டும் என்பதற்கான படிப்பினை. *அல்குர்ஆன் (12: 86)*

o அல்லாஹ் மீது உறுதியான நம்பிக்கை வைத்தவர்களை அல்லாஹ் கைவிடமாட்டான் என்ற உண்மைக்கான முன்மாதிரி. *அல்குர்ஆன் (12: 83,90)*

o பொறாமை எண்ணம் ஒருவருக்கு மேலோங்கும்போது அது பிறருக்கு தீய விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும் என்பதை எச்சரிக்கும் பாடம். *அல்குர்ஆன் (12: 8-15)*

o அடுத்தவர்களுக்கு தீங்கு செய்து சந்தோஷப்பட்டவர்கள், பின்னாட்களில் அந்த தீங்கின் விளைவுகளை தானும் அதிகளவில் அனுபவிக்க வேண்டிவரும் என்ற படிப்பினை. *அல்குர்ஆன் (12: 88-91)*

முட்டையிடும் அதிசய சிறுவன், நம்பமுடியாமல் மருத்துவர்கள் அதிர்ச்சி


இந்தோனேசியாவில் சிறுவன் ஒருவன்  கடந்த இரண்டு ஆண்டுகளாக 20 முட்டை போட்டுள்ள சம்பவம் மருத்துவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் குவாபகுதியைச் சேர்ந்தவர் அக்மல்  14 வயதுடைய இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் முட்டையிட்டு வருவதாக பெற்றோர்கள் கூறிவருகின்றனர். இது குறித்து அக்மலின்  தந்தை கூறுகையில், அக்மல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து முட்டையிட்டு வருகிறான், இதுகுறித்து நாங்கள் பலமுறை மருத்துவமனைக்கு சென்றுள்ளோம். 

தற்போது கூட மருத்துவமனைக்கு வந்த பின் அவன் இரண்டு முட்டைகள் போட்டான். கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 முட்டையிட்டிருக்கிறான், அதை நான் உடைத்து பார்த்த போது மஞ்சள் நிறத்தில் இருப்பதாக கூறினார், மாணவன் தொடர்பான  எக்ஸ்-ரே புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

ஆனால் மருத்துவர்களோ இது நிச்சயமாக இருக்க முடியாது, மனிதன் உடலில் முட்டை இருப்பதற்கு வாய்ப்பே இல்லை, மருத்துவமனையில் முட்டை போட்டதாக கூறுகின்றனர். நாங்கள் அதை நேரடியாக பார்க்கவே இல்லை என்று கூறுகின்றனர். மேலும் மருத்துவர்கள் மாணவனை முழுமையாக பரிசோதித்து வருவதாக அங்கிருக்கும் தனியார் மருத்துவமனை  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் - டிரம்ப்

பள்ளிகளில் துப்பாக்கி சூடு சம்பவம் நடக்காமல் இருக்க இனி ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை அடுத்து துப்பாக்கி நடமாட்டத்தை கட்டுபடுத்துவது தொடர்பாக டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சாதாரண தானியங்கி துப்பாக்கியை எந்திர துப்பாக்கியாக மாற்றக்கூடிய பம்ப்ஸ்டாக் என்ற கருவியை பயன்படுத்த டிரம்ப் தடை விதித்துள்ளார்.

இந்த நிலையில் பள்ளி துப்பாக்கி சூடு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசினார். அதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் துப்பாக்கி சூட்டில் பலியான மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்களிடம் பேசிய டிரம்ப் பள்ளிகளில் துப்பாக்கி சூடு சம்பவம் நடக்காமல் இருக்க இனி ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் இனி துப்பாக்கி வாங்குபவர்கள் பின்னணி பற்றியும் தீவிரமாக விசாரிக்கப்படும். அவர்களுடைய மனநிலைப் பள்ளி ஆய்வு செய்யப்படும் என்றும் அவர்களிடம் டிரம்ப் கூறினார்.

அப்போது ஒரு மாணவரின் பெற்றோர் நீங்கள் தேர்தல் பிரசாரத்தின்போது, துப்பாக்கி வைத்திருப்பதற்கு ஆதரவாக பேசியதாக குற்றம் சாட்டினார். அதற்கு டிரம்ப் நான் அவ்வாறு ஆதரவாக செயல்படவில்லை என்று கூறினார்.

மற்றொரு மாணவரின் பெற்றோர் துப்பாக்கி சூடு நடப்பதை தடுக்க உரிய சட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று கூறினார். அதற்கு இதுபற்றி ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி அளித்தார்.

5 நாட்களில் 400 பேர் வபாத் - சிரியாவில் ஆசாத் வெறியாட்டம்


சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலுக்கு கடந்த 5 நாட்களில்  400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு ஆதரவுப் படையினர் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஓர் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவிகளை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் வீழ்ந்து வருகின்றனர்.

இந்த சூழலை சாதகமாக கொண்டு விரைவில் போராளிகளை அழிக்கும் நோக்கில் அரசுத்தரப்பு கூட்டுப்படையினர் கிழக்கு கூத்தா பகுதிகளில் ஓயாது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலுக்கு கடந்த 5 நாட்களில்  400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக போர் மனித உரிமை கண்காணிப்பகம் அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஐந்து தினங்களாக அரசு படையினர் நடத்திய தாக்குதலில் சிக்கி இதுவரை 403 பேர்  பலியாகி உள்ளனர். இதில் 95 குழந்தைகளும் அடங்குவர் என தெரிவித்துள்ளது.

பக்கீர் முஹம்மது அல்தாபி சம்பந்தமாக...!


-Nazeer Ahamed-

நான் இன்றும் மதிக்கும் பல பேச்சாளர்களில் ஒருவர். இரண்டு முறை சந்தித்துள்ளேன். பல வருடங்கள் முன்பு ரியாத்திலிருந்து சென்னை செல்ல கொழும்பு மார்க்கமாக டிக்கெட் எடுத்திருந்தேன். அப்போது கொழும்பு விமான நிலையத்தில் தனியாக ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அருகில் சென்று சலாம் சொல்லி விட்டு....

'என்ன... தனியாக அமர்ந்துள்ளீர்கள்?' என்று கேட்டேன்.

'இலங்கையில் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' நிகழ்ச்சிக்காக வந்தேன். நிகழ்ச்சி முடிந்தது. சென்னைக்கு திரும்பிக் கொண்டுள்ளேன்.' என்றார்.

அழைப்பு வரும்வரை அவரோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். பிறகு இருவருமே ஒன்றாக விமானத்தை நோக்கி சென்றோம். நாடறிந்த பேச்சாளர் என்ற பந்தா எல்லாம் இல்லாமல் மிக எளிமையாக என்னோடு பேசிக் கொண்டிருந்தார். பிஜேக்கு பிறகு ஒரு சிறந்த ஆளுமை கிடைத்துள்ளார் என்று நாங்கள் எல்லாம் சந்தோஷப்பட்டோம்.

தற்போது தவ்ஹீத் ஜமாத் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டு தாய்லாந்தில் பணி புரிந்து வருவதாக கேள்விப்பட்டேன். என்னவோ தெரியவில்லை. மனது கனத்தது. பல லட்சம் உறுப்பினர் உள்ள ஒரு அமைப்பின் தலைவராக இருந்து விட்டு இவ்வாறு பணியில் அமர்வது என்பது எல்லோராலும் முடியாது. ஏகத்துவத்தை நெஞ்சில் சுமந்த ஒருவரால் தான் முடியும். இள வயதில் மிக உயர்ந்த பதவியை இறைவன் அவருக்கு கொடுத்தான். தற்போது அந்த பதவியை இழந்தாலும் அதே கம்பீரத்தோடு உழைத்து உண்கிறார். இறைவன் அவருக்கு மீண்டும் அது போன்ற பதவியை அளிப்பான்.

பொருளாதாரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இவரது தொழில் மேலும் செழித்து விளங்க இறைவனிடம் பிராரத்திக்கிறேன். பிஜே அவர்களும் அல்தாஃபியை திரும்பவும் அழைப்புப் பணிக்கு அமர்த்திக் கொள்ள இந்த பதிவின் மூலம்  கோரிக்கை  வைக்கிறேன்.

Nazeer Ahamed

இறந்துபோன தனது நண்பரை, பாராளுமன்றத்தில் புகழ்ந்துபேசிய ஜனாதிபதி


எந்தவொரு மோசடியுமற்ற ஒருவராகவே விஷ்வ வர்ணபால காணப்பட்டார். எனினும் தற்போது அரசியல் வாதிகளின் பெயர் வெளிப்பட்டவுடன் அவர்களின் ஊழல் மோசடிகளும் சேர்ந்தே வெளிவருதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் விஷ்வ வர்ணபால மீதான அனுதாப பிரேரணையின்  கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

விஷ்வ வர்ணபால எனது சிறந்த நண்பராகும். அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார். அத்துடன் முன்னாள் பிரதமர்  எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்க தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அதேபோன்று இலக்கியம் சார் நூல்களையும் எழுதியுள்ளார். 

சுதந்திரக் கட்சியின் அனைத்து தலைவர்களுடன் இணைந்து செயலாற்றியுள்ளார். இருந்த போதிலும் எந்தவொரு ஊழல் மோசடிகளுக்கும் உள்ளாகவில்லை. பரிசுத்தமான முறையிலேயே தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தார். அனைத்து சேவைகளையும் நேர்மையாகவும் பரிசுத்தமாகவும் முன்னெடுத்து முன்னுதாரணமாக செயற்பட்டார்.

ஊழல் மோசடிகளில் அவர் ஒருபோதும் ஈடுப்படவில்லை. அவ்வாறு குற்றச்சாட்டுகளுக்கு அவர் உள்ளாகவும் இல்லை. எனினும் தற்போதைய அரசியலைவாதிகளை குறிப்பிட்டவுடன் ஊழல் மோசடி பட்டியலே வெளிவரும்.

எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிககு அவர் பல்வேறு சேவைகளை முன்னெடுத்தார். அதனை மறக்க முடியாது என்றார்.


குண்டை எடுத்துவந்த இரானுவ, வீரரின் நிலைமை கவலைக்கிடம்


(எம்.எப்.எம்.பஸீர்)

பண்டாரவளையிலிருந்து தியத்தலாவை சென்று அங்கிருந்து  மஹியங்கனை - ஹிராதுருகோட்டை நோக்கி பயணிக்க சென்றுகொண்டிருந்த  தனியார் பயணிகள் பஸ் வண்டியில் கைக்குண்டொன்று வெடித்து பரவிய தீயினால் 19 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்ப்ட்டுள்ளன.

அதன்படி சம்பவம் தொடர்பில் இன்று மாலை வரை 25 பேரின் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் அதில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மையபப்டுத்தி பதுளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஆர்.ஜி.எம்.பி. எல்லபொலவின் நேரடி மேற்பார்வையில் பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சர் சுதத் மாசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தியதலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த குன்டுவெடிப்பு, அதனால் பரவிய தீ பரவலால் காயமடைந்து ஒரு கால் அகற்றப்பட்ட இராணுவ வீரர் தியதலாவை ஆரம்ப வைத்தியசாலையின் 6 ஆம் இலக்க வாட்டில் சிகிச்சை பெறும் நிலையில், குண்டை எடுத்து வந்ததாக கூறப்படும் இராணுவ வீரர்  ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

அந்த இரானுவ வீரரின் இரு கால்கள், இரு கைகளும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 19 பேரில் நேற்று மாலையாகும் போதும் 6 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியிருந்ததுடன் 13 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக அறிய முடிகின்றது.

இந் நிலையில் கைக்குண்டை எடுத்து வந்ததாக கூறப்படும் இராணுவ வீரர் ஆபத்தான நிலையில் உள்ள நிலையில் இன்று மாலை வரை அவரின் வாக்கு மூலங்கள் பெறப்பட்டிருக்கவில்லை.

"அமைச்சரவை மாற்றம், தாமதத்திற்கு இதுதான் காரணம்"

அமைச்சரவை மாற்றம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியான போதும் அவ்வாறான எந்த செயற்பாடும் இதுவரை இடம்பெறவில்லை.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியவற்றுக்கிடையே அமைச்சரவை மாற்றம் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாமையே தாமதத்திற்கான காரணம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது சில முக்கிய அமைச்சர்களின் அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

முஸ்லிம்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்பு...!

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி சட்டத்தின் 17ஆவது திருத்தச்சட்டப்படி மாகாண சபைகளின் எல்லைகளை வகுப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த எல்லை நிர்ணயக் குழு அதன் அறிக்கையை மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு திங்களன்று கையளித்தது. 

மாகாண சபைத் தேர்தல் முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றுப்படி நாட்டில் 222 தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 222 தொகுதிகளுக்கு 50சதவீதம் தொகுதி முறைப்படியும் 50 சதவீதம் விகிதாசார முறைப்படியும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. 

கலாநிதி தவலிங்கம் தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த ஐவர் கொண்ட குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பாக சர்வகட்சி மகாநாடொன்றைக் கூட்டி ஆராயப்பட்ட பின்பே அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 

எல்லை நிர்ணய ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் அக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லா புறம்பாக ஓர் அறிக்கையை சமர்ப்பித்து இந்த அறிக்கையின் சிபாரிசுகளினால் முஸ்லிம்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்பு பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 

எல்லை நிர்ணய ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி நாட்டில் தொகுதி மட்டத்தில் 13 முஸ்லிம்களே தெரிவாகும் வாய்ப்பு இருப்பதாக பேராசிரியர் ஹஸ்புல்லா சுட்டிக்காட்டியுள்ளார். 

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க கூடிய வகையில் பேராசிரியர் ஹஸ்புல்லா பல சிபாரிசுகளை முன்வைத்த போதும் எல்லை நிர்ணயக்குழுவின் பெரும்பான்மையினர் அதற்கு ஆதரவு வழங்காததன் காரணமாகவே அவர் தனியாக STRONG RESERVATION என்ற தலைப்பில் புறம்பான அறிக்கை ஒன்றை அறிக்கையுடன் இணைத்து வழங்கியுள்ளார். 

இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட முன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த அறிக்கையை விரிவாக ஆராய்ந்து முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உள்ளூராட்சித் தேர்தல் முறையில் இடம்பெற்ற தவறு போன்று மாகாணசபை தேர்தல் முறையிலும் தவறு ஏற்பட இடமளித்தால் மாகாண சபைகளில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைய இடமுண்டு. 

விகிதாசாரத் தேர்தல் முறையில் கடந்த காலத்தில் மாகாண சபையில் முஸ்லிம்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப நாட்டின் அநேக மாகாண சபைகளில் பிரதிநிதித்துவம் கிடைத்திருந்தது. 

தவலிங்கம் அறிக்கை அப்படியே அமுல்நடத்தப்பட்டால் முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம். 

எனவே இது குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி ஒன்றாக செயற்பட்டு மாகாண சபைகளில் முஸ்லிம்களது விகிதாசாரத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைப்பதனை உறுதி செய்ய முன்வர வேண்டும்.

நவமணி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்

இலங்கையில் முதலிடம் பிடித்தது "Jaffna Muslim" இணையம்


இலங்கை வாழ் முஸ்லிம்களினதும், வெளிநாட்டு வாழ் முஸ்லிம்களினதும் நம்பிக்கையை வென்ற முதற்தர செய்திச் வேவையான www.jaffnamuslim.com இணையம், இலங்கை முஸ்லிம்கள் அதிகளவு பார்வையிடும், முஸ்லிம் சார்பு இணையங்களின் வரிசையில் உலகளாவிய இணையத் தரப்படுத்தலில் முதலிடம் பிடித்துள்ளது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே..!

இலங்கை முஸ்லிம்கள் அதிகளவு பார்வையிடும், முஸ்லிம் சார்பு இணையங்களின் வரிசையிலேயே இவ்வாறு முதலிடம் பிடித்துள்ளது.

இவ்வேளையில் jaffna muslim இணைய வாசகர்களாகிய, அனைத்து தமிழ் பேசும் வாசகர்களுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

உலகளாவிய அலஸ்கா இணையத்தரப்படுத்தலில் இலங்கை முஸ்லிம்கள் மிக அதிகளவு பார்வையிடும் இணையங்களின் வரிசையில் கடந்த காலங்களிலும் jaffna muslim இணையம் முதலிடத்தை பிடித்திருக்கின்றது.

எனினும் இந்த இணையத் தரப்படுத்தலானது அடிக்கடி மாற்றமடையும் என்பது கவனிக்கத்தக்கது. தற்போதைய 22.02.2018 நிலவரமே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


தேசிய அரசு தொடர்ந்தால் 25 எம்.பிக்கள் பல்டி அடிப்பர்

தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால், சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -22- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கைப்பற்றியுள்ள ஐக்கிய தேசியக்கட்சி தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளதால், அரசியலமைப்புச் சட்டத்தின் 46(4) பந்திக்கு அமைய அமைச்சர்களின் எண்ணிக்கை 48 ஆகவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 ஆக அதிகரிக்கவும் நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய யோசனையில் கூறியுள்ளார்.

பிரதமர் ஆங்கிலத்தில் முன்வைத்த யோசனையின் சிங்கள அர்த்தம் இதுதான். யாருடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தோம் என்பதை பிரதமர் கூறவில்லை.

யாருடன் தேசிய அரசாங்கத்தை அமைத்தோம் என்பதை கூறாதது மட்டுமல்ல, எழுத்து மூலமான உடன்படிக்கையை முன்வைக்காமல் அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க இடமளிப்பதாக சபாநாயகர் தீர்மானித்தார்.

இது நாடாளுமன்றத்தின் எதிர்காலத்திற்கு செய்த தவறான முன்னுதாரணம். நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு போதுமான பெரும்பான்மை இருக்க வேண்டும்.

போதுமான பெரும்பான்மை பலம் இல்லாமல் அவருக்கு பிரதமர் பதவியை வகிக்க முடியாது எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வர, வெளியேறிய பிரதமர் - மோதல் முற்றுகிறதா..?


உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் முதல் முறையாக இன்று பாராளுமன்றத்திற்கு சென்ற ஜனாதிபதியின் வருகையை புறக்கணிக்கும் வகையில் பிரதமர், சபையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான மோதல் உச்ச நிலையை அடைந்துள்ளமை இன்று நாடாளுமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் வெளியேறியதைத் தொடர்ந்து அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரும் உயரிய சபையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

பாராளுமன்றத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி, மறைந்த முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான விஷ்வ வர்ணபால மீதான அனுதாப பிரேரணையின் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக

ஆனால், ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்கு முன்னரே பிரதமர் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி வரும் வேளைகளில் பிரதமர் அவரை வரவேற்கும் முகமாக சபையில் அமர்ந்திருப்பது சம்பிரதாயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பல பிரச்சினைகளே, அரசாங்கத்தின் தோல்விக்கு காரணம்

சய்டம் பிரச்சினை உள்ளிட்ட தீர்வு வழங்கப்படாத பல பிரச்சினைகளே அரசாங்கத்தின் தோல்விக்கு காரணம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசெகர கூறியுள்ளார். 

இன்று -22-  கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 

அமைச்சரவையை மாற்றியமைப்பது சம்பந்தமாக நடப்பது என்வென்பது பற்றி முழுமையாக எவருக்கும் தெரியாது என்றும் அவர் கூறினார். 

அது சம்பந்தமான அனைத்து தீர்மானங்களும் ஜனாதிபதியால் எடுக்கப்படுவதாக அவர் கூறினார். 

அதேநேரம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தான் எப்போதுமே கட்சித் தலைவருடனேயே இருந்துள்ளதாகவும், நாளை வேறொரு தலைவர் நியமிக்கப்பட்டால் அவருக்கும் தனது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தயாசிறி ஜயசெகர கூறியுள்ளார்.

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர், இராஜினாமா செய்யவில்லை

ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் அமரி விஜேவர்தன பதவியை இராஜினாமா செய்யவில்லை என்றும் அவரின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. 

அமரி விஜேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருடன் தொடர்புபடுத்தி ஊடகங்களில் வௌியாகியுள்ள செய்து தவறானது என்று வௌிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் அமரி விஜேவர்தனவின் பதவி ஒப்பந்தக் காலம் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. 

அதன்படி அமரி விஜேவர்தன அவரது விருப்பின் பேரில் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியன்று அவரது ஒப்பந்த காலத்தை முடிவுறுத்த உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றும் பாராளுமன்றத்தில் வாக்குவாதம்

தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை வெளிபடுத்தக்கூறி இன்றும் பாராளுமன்றத்தில் ஆளும் எதிர் தரப்பினரிடையே வாக்குவாதம் நிலவியது. ஒப்பந்தத்தை பிரசித்திபடுத்த  முடியாவிடின் இரகசியமாகவேணும் வெளிப்படுத்துங்கள் என  கூட்டு எதிர்க்கட்சி குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன சபையில் கோரிக்கை விடுத்தார். 

பாராளுமன்றத்தில் இன்று -22- ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றும் போதே கூட்டு எதிர்க்கட்சி குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது பல கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்த முன்னணியாகும். அவ்வாறு இருக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கத்தை  முன்னெடுப்பதில் ஐக்கிய  தேசிய கட்சியுடன் ஒப்பந்தம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது என கூறியுள்ளது. அரசியல் அமைப்பின் 46/4 உறுப்புரிமையின் பிரகாரம் இரண்டு தரப்பினரும் உடன்படிக்கையினை முன்னெடுத்து செல்வதாக இன்றும் சபையில் தெரிவித்தனர். எனினும் இந்த விடயத்தில் மேலும் குழப்பங்கள் உள்ளன. 

இதில் பிரதான கட்சியுடன் ஏனைய கட்சிகள் இணைந்து செயற்படுமாயின் பாராளுமன்றத்தில் உடன்படிக்கை குறித்து வெளிப்படுத்த வேண்டும். அதேபோல் சபை அனுமதியினை பெற வேண்டும். எனினும் இவ்வாறு தேசிய அரசாங்கம் ஒன்றினை முன்னெடுப்பது குறித்து எந்தவொரு எழுத்துரு ஆவணமும் சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை. அவ்வாறான ஒப்பந்தம் ஒன்று இருக்கும் பட்சத்தில் மட்டுமே தேசிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்படும். ஆகவே அவ்வாறான  ஆவணம் ஒன்று இருக்குமாயின் அதனை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும். சட்ட விரோதமாக அமைச்சரவையை நடத்த முடியாது. இவ்வாறு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இரகசியத்தன்மை இருக்குமாயின் சபாநாயகரிடம்  ஒப்படைத்து ஆவணத்தை பார்க்க கோரிக்கைவிடும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் வெளிபடுத்துவது சபாநாயகரின் கடமையாகும். அவ்வாறு இல்லாவிட்டால் இது அரசியல் அமைப்பினை முழுமையாக மீறி செயற்படும் வகையில் அமைச்சரவையினை கொண்டு நடத்தும் அரசியல் அமைப்புக்கு முரண்பட்ட செயற்பாடாக நாம் கருதுகின்றோம். எமது கோரிக்கைக்கு தெளிவான தீர்வு ஒன்றினை சபாநாயகர் பெற்றுத்தர வேண்டும். அரசியல்வாதிகளின் தீர்மானம் அல்ல எமக்கு அவசியமானது சபாநாயகரின் தீர்மானமாகும். அதனையே நாம் எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்தார்.

"எம்மால் ஒன்றும் செய்ய முடியாது” - மகிந்த

வடக்கு, கிழக்கில் உள்ள குறைந்தது 10 உள்ளூராட்சி சபைகளில், பெண்களுக்கான 25 வீத பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தில் உள்ள குறைபாடுகளினால், குறைந்தது 10 உள்ளூராட்சி சபைகளில், பெண்களுக்கான 25 வீத இடங்களை ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டத்தின்படி, உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கு 25 வீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இந்த 10 உள்ளூராட்சி சபைகளிலும், பெண் வேட்பாளர்களை நியமிப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

வட்டார முறையில் ஒரு அரசியல் கட்சியின் சார்பில் ஆண் வேட்பாளர்கள் மாத்திரம் வெற்றி பெற்றிருந்தால், அந்தக் கட்சிக்குக் கிடைத்த விகிதாசார  அடிப்படையிலான ஆசனங்களை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்.

எனினும், 3 ஆசனங்களுக்குக் குறைவான ஆசனங்களைப் பெற்ற கட்சிகள், பெண்களை விகிதாசார முறையில் நியமிக்க வேண்டியதில்லை.

பெண்களுக்கு 25 வீத இடங்களை ஒதுக்க முடியாத நிலையில் உள்ள 10 உள்ளூராட்சி சபைகளுமே, வடக்கு கிழக்கில் தான் உள்ளன.

சாத்தியமானளவுக்கு பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த முயற்சிப்போம். இல்லா விட்டால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் கூட்டா பகுதியை 'பூமியிலுள்ள நரகம்' என ஐ.நா. வர்ணிப்பு


சிரியாவில் கூட்டா பகுதியிலுள்ள கிளர்ச்சியாளர்களின் குடியிருப்பு பகுதியை "பூமியிலுள்ள நரகம்" என்று வர்ணித்து, அங்கு நடைபெற்று வருகின்ற மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மாமன்றத்தின் பொது செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"கிழக்கு கூட்டா பகுதியில் சண்டை முடியும் என்று காத்திருக்க முடியாது என நான் நம்புகிறேன்" என்று அன்றோணியோ குட்டிரஸ் புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

சமீப நாட்களாக ரஷ்யாவின் வான்வழி தாக்குதலின் ஆதரவோடு, சிரியா அரசு படைப்பிரிவுகள் கிழக்கு கூட்டா பகுதி கடும் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் அருகிலுள்ள கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி முக்கிய பகுதி இதுவாகும்.

முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இலங்கை - சர்வதேச மன்னிப்புச் சபை பிரகடனம்


முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அண்மையில் சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கையில் பௌத்த தேசியவாத கொள்கைகள் கடந்த ஆண்டில் வலுப்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்ட்டுள்ளது.

கடந்த ஆண்டில் உலக நாடுகளில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுபான்மை இனத்தவர்களுக்கு மிகவும் ஆபத்தான பிராந்தியங்களில் ஒன்றாக தெற்காசியா கருதப்படுகின்றது. 

அரசாங்கங்கள் உரிய வகையில் சிறுபான்மை மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பூசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரோஹினிய முஸ்லிம்கள் மீது பௌத்த கடும்போக்காளர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

48 நொடிகளில் இலங்கையரின் உலக சாதனை


இலங்கையர் ஒருவர் 48 நொடியில் உலக சாதனை படைத்துள்ளார்.

12 மில்லிமீற்றர் அடர்த்தியான 22 சுருள் கம்பிகளை 48 நொடிகளில் தலையில் வைத்து மடக்கியே அவர் இந்த உலக சாதனை படைத்துள்ளார்.

ஜானக காஞ்சன முதுன்னாயக என்பவர் நேற்று மாலை கண்டி பிரதேசத்தில் வைத்து இந்த உலக சாதனையை படைத்துள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உட்பட பலர் இணைந்திருந்தனர்.

அமெரிக்க நாட்டவரான ஆனேமியன் எடோல்ப் ஒரு வினாடியில் 18 கம்பிகளை மடக்கிய சாதனையை முறியடிப்பதே ஜானக காஞ்சனவின் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தொடரும் ஊழல் - ட்ரான்பரன்சி கவலை

இலங்கை ஊழல் கருத்துச் சுட்டி (CPI) 2017ல் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைக் காட்டுவதற்கு தவறியுள்ளது என உலக ஊழலுக்கெதிரான கூட்டணி ட்ரான்பரன்சி இன்டர்நெஷனல் கூறியுள்ளது. 

இது தொடர்பாக ட்ரான்பரன்சி இன்டர்நெஷனல் வௌியிட்டுள்ள அறிக்கையில், 

180 நாடுகளை கொண்ட தரவரிசையில் இலங்கை 95வது இடத்திலிருந்து 91வது இடத்திற்கு, அதாவது 4 இடத்திற்கு முன்னேறியிருந்த போதும் மிகக் குறைந்த முன்னேற்ற வீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 36 லிருந்து 38 இற்கு, அதாவது 2புள்ளிகள் மாத்திரமே அதிகரித்துள்ளது. 

உலகலாவிய இயக்கத்தின் உள்ளூர் அமைப்பான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) இலங்கையின் தற்போதைய CPI (Corruption Perception Index) சுட்டியான 38 ஆனது 2014 ல் பெற்ற அதே புள்ளி என்ற உண்மையினைக் கருத்திலெடுக்கின்றது. 

இலங்கையின் 2017 CPI செயற்றிறன் பற்றி TISL ன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேகர கருத்துத் தெரிவிக்கையில், “2012 – 2017 வரையான காலப்பகுதியில் இலங்கையின் CPI இடங்களை மிக உன்னிப்பாக ஆராய்ந்தால் 19வது திருத்தத்தின் பிரகாரம் ஊழலுக்கெதிரான அமைப்புக்களின் நிறுவன ரீதியான பலப்படுத்தல் இருந்த போதும் நடைமுறைப்படுத்தலில் தொடர்ச்சியாகத் தவறியதால் மிகக் குறைந்த பெறுபேற்றை ஏற்படுத்தியுள்ளது”. 

கடந்த 5 வருடங்களாக ஒவ்வொரு ஆண்டிலும் CPI ல் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தை ஏற்படுத்த இலங்கை தவறியுள்ளது. குறிப்பிடத்தக்க மாற்றம் என்பது 6 அல்லது அதற்கு அதிகமான புள்ளிகள் கூடுவது அல்லது குறைவதாகும். “ஊழலுக்கெதிரான இயக்கி மிகக் குறைவான வேகத்தைக் கொண்டிருப்பதை காணமுடிகின்றது. 

கழிவகற்றல் தொடக்கம் பாடசாலையில் சேர்ப்பது வரை அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு குடிமக்கள் ஊழலுக்கு முகம் கொடுக்கின்றனர். எனவே பொதுமக்களின் பார்வையில் பொதுச் சேவையின் CPI யில் மிகக்குறைந்த மாற்றமானது பொதுமக்களின் நாளாந்த வாழ்வில் அரசுடனான சேவைகளைப் பெறுவதில் அனுபவிப்பதில் மிகக் குறைந்த மாற்றத்தையே காட்டுகின்றது” என ஒபேசேகர மேலும் தெரிவித்தார். 

பொதுப் பிரதிநிதிகளின் சொத்து வெளிவிடுகையை இலகுவாக அணுகுவதற்கு குடிமக்களிற்கான உரிமை மற்றும் அத்தியாவசிய தேசிய கணக்காய்வு சட்டவரைவு அமைச்சரவையில் முடங்கியிருத்தல் போன்ற முற்போக்கான சட்டத்திருத்தங்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் விருப்பின்மையைக் காட்டுகின்றது. 

உலகளாவிய ரீதியில் நியூசிலாந்து மற்றும் டென்மார்க் 89, 88 புள்ளிகளைப் பெற்று முறையே முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களைப் பிடித்துள்ளது. இந்த சுட்டியானது பூச்சியத்திலிருந்து 100 வரையான அளவீட்டில் வல்லுனர்கள் மற்றும் வர்த்தகத் துறையினரின் பார்வையில் பொதுச்சேவையில் காணப்படும் 180 நாடுகளின் ஊழல் நிலைமைகளை அளவிடுகின்றது. இங்கு 0 என்பது மிக அதிகளவு ஊழலையும் 100 என்பது மிகத் தூய்மையான நிலையையும் குறிக்கின்றது. 

இந்த வருடம் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான நாடுகள் 50ற்குக் குறைவான புள்ளிகளையே பெற்றிருந்தன. சராசரி 43 புள்ளிகள் ஆகும். இலங்கையின் சுட்டியான 38ஆனது ஆசிய பசிபிக் நாடுகளின் சராசரியான 44ஐ விட மிகக்குறைவாகும். சார்க் அங்கத்துவ நாடுகளில் பூட்டான் 67 பெற்று முன்னிலை வகிக்கின்றது தொடர்ந்து இந்தியா (40), இலங்கை (38), மாலைதீவுகள் (33), பாகிஸ்தான் (32),நேபால் (31), பங்களாதேஷ் (28) ஆப்கானிஸ்தான் (15) ஆகியவை உள்ளன. 

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தனது CPI 2017 ஊடக வெளியீட்டில் பெறுபேற்றின் ஆய்வு ஊழல் நிலை, ஊடகச் சுதந்திரம் மற்றும் சிவில் சமூகத்தினரின் ஈடுபாடு ஆகியவற்றிற்கிடையிலான தொடர்பை எடுத்துக்காட்டுகின்றது. 

2012லிருந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட அனைத்து நாடுகளும் மிக அதிகளவில் ஊழல் இடம் பெறுவதாக கருதப்பட்ட நாடுகளாகும். கடந்த 6 ஆண்டுகால ஆய்வின்படி 45 அல்லது அதற்குக் குறைவான ஊழல் சுட்டி பெற்றுள்ள நாடுகளில் பத்தில் ஒன்பதற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

அதாவது அதிகளவான ஊழல் இடம்பெறும் நாடுகளில் சராசரியாக ஒவ்வொரு கிழமையும் ஒரு ஊடகவியலாளர் கொல்லப்படுகின்றனர். மேலும் கொல்லப்பட்ட ஐந்தில் ஒரு ஊடகவியலாளர் ஊழல் பற்றி கதைத்தவர்களாவர். அனேகமான சம்பவங்களில் நீதி கிடைக்கவில்லை என்பது கவலையான விடயமாகும். 

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனலின் முதன்மை வெளியீடாகிய CPI ஆனது இது ஆரம்பித்த 1995ம் ஆண்டிலிருந்து பொதுத் துறையின் ஊழலுக்கான அளவீட்டில் உலகலாவிய ரீதியில் முதன்மையான சுட்டியாகும். இச் சுட்டியானது உலக முழுமையும் உள்ள நாடுகளின் ஊழல் சார் நிலைகளின் வருடாந்த படத்தை தருகின்றது. மேலதிக தகவலுக்கு, www.transparency.org/research/cpi இணையத்தளத்தை நாடவும்.

றிசாத் - கபீரின் அமைச்சு மாற்றப்படுமா..?

அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர்களான றிசாத் பதியுதீன் மற்றும் கபீர் காசிம் ஆகியோரின் அமைச்சுக்களின் மாற்றங்கள் ஏற்படுமெனசில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எனினும் எந்தெந்த அமைச்சுக்களின் மாற்றம் வருமென்ற தகவல் வெளியாகவில்லை

இலங்கையின் கிரிக்கட், ஐந்தாவது மதம் - மனோ

நல்லிணக்க தமிழ் தொலைக்காட்சி, தெற்கில் இருந்து வடக்கிற்கு மாத்திரம் நல்லிணக்க பிரச்சாரங்களை கொண்டு செல்லும் ஒருவழி பாதை ஊடகமாக இருக்கக் கூடாது. இருக்கவும் முடியாதென முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தால் ஆரம்பிக்கப்படும் நேத்ரா நல்லிணக்க தமிழ் தொலைக்காட்சியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நடைபெற்றது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அமைச்சர்கள் மங்கள சமரவீர, மனோ கணேசன், பெளசி, சுமந்திரன் எம்பி,  ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் ரவி ஜெயவர்தன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர் மனோகணேசன், 

இந்த நல்லிணக்க அலைவரிசையை பயன்படுத்தி தெற்கில் இருந்து வடக்குக்கு மட்டும் உங்கள் நல்லிணக்க செய்திகளை அனுப்பாதீர்கள். அங்கிருந்தும் தமிழ் மக்களின் துயரங்களை, துன்பங்களை, அபிலாசைகளை ஏன் கோபங்களை கூட  செய்திகளாக  இங்கு கொண்டு வந்து சிங்களத்தில் மொழி பெயர்த்து சிங்கள மக்களுக்கும் சொல்லுங்கள். அதை ரூபவாஹினி சிங்கள அலைவரிசையில் நேரம் எடுத்து காண்பியுங்கள். இது அரச ஊடகம். இலாபம் சம்பாதிப்பதை மாத்திரம் நோக்காகக் கொண்டு நீங்கள் செயல்பட முடியாது. அதை இங்கே இந்நிகழ்வில் கலந்துக்கொண்டிருக்கும் நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் என் நண்பர் மங்கள சமரவீர கவனத்தில் கொள்வார் என நம்புகிறேன்.

இது இன்னமும் ஒரு முழுமையான தொலைக்காட்சி அலைவரிசை அல்ல என அறிகிறேன். இது இன்னும் நிறைய தொழிநுட்பரீதியாக வளம் பெற வேண்டும். நாடு முழுக்க ஒளிபரப்பாக வேண்டும். இந்நாட்டில் தமிழ் பேசும் மக்களின் சனத்தொகை ஐம்பது இலட்சமாகும். 

தமிழர் வடக்கில் மட்டும் வாழவில்லை. கிழக்கில், மலையகத்தில், இங்கே மேற்கிலும்  வாழ்கிறார்கள். தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் சனத்தொகையில் அறுபது விகித விழுக்காட்டினரும், தமிழர்களில் ஐம்பது விகித  விழுக்காட்டினரும்  வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்கிறார்கள்.   

வடக்கில் யுத்த துன்ப வடுக்கள்  அதிகம். ஆகவே வடக்குக்குதான் நல்லிணக்க அலைவரிசை தொடர்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.  வடக்கின்  துன்ப வரலாற்றை இங்கே கொண்டு வந்து சிங்கள மக்களுக்கு சொல்லுங்கள். தமிழ் மக்களுக்கு மாத்திரம் அறிவுரை கூறும் ஒருவழிப்பாதை தொலைக்காட்சி அலைவரிசையாக இது இருக்க கூடாது. வடக்கில் ஒரு நிகழ்ச்சி தயாரிப்பு கலையகம் கட்டப்படுவது நல்ல விடயம். அடுத்த கலையகத்தை நுவரேலியா, பதுளை பகுதியில் அமையுங்கள். அது மலைநாட்டு மற்றும்  கிழக்கு மாகாண கலைஞர்களுக்கு பயன்தரும்.

இதற்கு முன் நேத்ரா அலைவரிசையில் கிரிக்கெட் விளையாட்டு வர்ணனைகளை காட்டிக்கொண்டு இருந்தீர்கள். தமிழ் செய்திகளை கூட நிறுத்தி விட்டு  விளையாட்டு வர்ணனைகளை காட்டியமை பற்றி இங்கே குறை கூறப்பட்டது. அது தவறுதான். அது இனி இந்த அலைவரிசையில் நிகழக்கூடாது. அதற்கு இன்னொரு  பக்கமும் இருக்கிறது.

இந்நாட்டில் அரசியல்வாதிகள், மத தலைவர்கள் தோற்றுப்போன வேளைகளில் கூட இந்நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதில் கிரிக்கட் பாரிய பங்காற்றியுள்ளது என்பதை நாம் மறக்க முடியாது.  என்னை பொறுத்தவரையில், கிரிக்கட் இலங்கையின் ஐந்தாவது மதம். ஆகவே அந்த கிரிக்கட் கொண்டு வந்து விட்ட  இடத்தில் இருந்து தேசிய நல்லிணக்கத்தை இந்த நேத்ரா நல்லிணக்க தமிழ் தொலைக்காட்சி மூலம் மென்மேலும் கட்டி எழுப்ப  ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் ரவி ஜெயவர்த்தன முயல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்துக்கு ஒப்பந்தம் அவசியமில்லை - சபாநாயகர் அறிவிப்பு


தேசிய அரசாங்கத்துக்கு ஒப்பந்தம் அவசியமில்லையென சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (22) ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுதொடர்பில், தான் சட்ட பிரிவிடம் விசாரித்ததாகவும்,  அவர்களின் கருத்திற்கமைய, ஒப்பந்தம் தேவையில்லை என்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம் UNP + SLFP பலசுற்று பேச்சு

அமைச்சரவை மாற்றம், அதற்கான அடிப்படை நடவடிக்கைகள் தற்சமயம் நிறைவு பெற்றுள்ளதாக அரசாங்கம் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையே பலசுற்று பேச்சு வார்த்தைகள் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளன.

இந்த முறை இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் பிரதான அமைச்சு பதவிகளில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இளைய பிரதிநிதிகள் பலருக்கு பொறுப்புகள் அளிக்கப்படும் என அரசியல் தகவல்கள் தெரிவிகின்றன.

அடுத்துவரும் சில நாட்களில், அரசாங்கத்தில் பாரிய மாற்றங்கள்

தற்போதைய அரசாங்கத்தில் பாரிய மாற்றங்கள் பல அடுத்து வரும் சில நாட்களில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் கூறியுள்ளார். 

மக்களுக்கு அதிக நிவாரணம் கிடைக்கின்ற வகையில் அந்த மாற்றங்களை செய்யவுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் சுட்டிக்காட்டியுள்ளார். 

கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

150 உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரம் பெற்று ஆட்சியமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கபீர் இதன்போது கூறினார்.

தீவிரவாத செயலாக இருந்தால், சேதம் அதிகமாக இருந்திருக்கும் – இராணுவப் பேச்சாளர்

தியத்தலாவவில் நேற்று நிகழ்ந்த பேருந்து குண்டு வெடிப்பு தீவிரவாத செயலாக இருந்தால், சேதமும், வெடிப்பும் மிகப் பெரியதாக இருந்திருக்கும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

தியத்தலாவவில் நேற்று அதிகாலை பேருந்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், 12 சிறிலங்கா படையினர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்தனர். இவர்களில் 11 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

படுகாயமடைந்த படையினரின் 2 பேரின் நிலை ஆபத்தாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையிலேயே, இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் தீவிரவாதச் செயல் அல்ல என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், “ இது தீவிரவாதச் செயலாக இருந்திருந்தால், ஏற்பட்ட சேதமும் வெடிப்புத் திறனும் இன்னும் பெரியதாக இருந்திருக்கும்.

காவல்துறை மற்றும் இராணுவத்தின் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் முடிவில், குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவரும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குழப்பத்திற்கு முயன்று தோல்வியடைந்த மகிந்த, இப்போது பிரதமர் பதவியில் ஆர்வமில்லை என்கிறார்

அமைச்சரவை மாற்றம் இந்த வாரம் இடம்பெறும் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,

“எந்தக் குழப்பங்களும் இன்றி கூட்டு அரசாங்கம் தொடர்ந்து செயற்படும். அமைச்சரவையில் இந்த வாரம் மாற்றங்கள் செய்யப்படும்.

இதன்போது, புதிதாக அறிமுகப்படுத்தப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பெறப்பட்ட மக்கள் ஆணையை நிறைவேற்றவும் சில புதிய முகங்களை அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிமுகம் செய்வார்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, கூட்டு அரசாங்கத்துக்குள் மகிந்த ராஜபக்ச குழப்பத்தை விளைவிக்க முயன்றார். அது தோல்வியில் முடிந்துள்ளது.

இப்போது அவர் பிரதமர் பதவியில் தனக்கு ஆர்வமில்லை  என்று கூறுகிறார்.

ஏனென்றால், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில்  அதிக வட்டிக்குப் பெறப்பட்ட வணிக டொலர் கடன்களை திருப்பிச்செலுத்த வேண்டிய காலப்பகுதி, 2019 தொடக்கம் 2020 வரையாகும்.

அண்மைய தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது உண்மையே என்றாலும், ஐதேகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், தமது தவறுகளைத் திருத்திக் கொண்டு அடுத்த தேர்தலில் சிறந்த வெற்றியைப் பெறும்” என்றும் அவர் கூறினார்.

சமந்திரன் வாங்கிக் கட்டினார், சபாநாயகரும் எச்சரிக்கை

2018ஆம் ஆண்டு, வரவு - செலவுத் திட்டத்துக்கு, ஆதரவு வழங்குவதற்காக, 20 மில்லியன் ரூபாயை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம், நாடாளுமன்றத்தில் நேற்று சூடுபிடித்திருந்தது.

இந்தச் சலசலப்பையடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அமருமாறும், இல்லையேல் சபை நடவடிக்கையிலிருந்து வெளியேற்றிவிடுவதாகவும் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்தார்.

 “வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கு, 20 மில்லியன் ரூபாயை, இலஞ்சமாக நாங்கள் பெற்றதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவசக்தி ஆனந்தன், எம்மீது குற்றம் சுமத்தியுள்ளார். இது, எமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது” என சுமந்திரன் எம்.பி குற்றம்சாட்டினார்.

இதன்போது எழுந்த, சரவணபவன் எம்.பி, “இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

இதனிடையே எழுந்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி, “வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு எமக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதற்கு நாம் மறுப்புத் தெரிவித்தோம். பொருளாதார அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படும் என்ற காரணத்தைக் காட்டியே, இதற்கு ஆதரவு வழங்குமாறு கோரப்பட்டது” என்றார்.

சிவசக்தி ஆனந்தனின் கூற்றைக்கு கடுமையான எதிர்ப்பை சுமந்திரன் எம்.பி வெளிப்படுத்தினார். இதன்போது, அக்கிராசனத்தில் இருந்த சபாநாயகர், சுமந்திரன் எம்.பிக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்து, அமருமாறு கூறினார்.

எனினும், சிவசக்தி ஆனந்தன் எம்.பி தெரிவித்த கருத்தை ஹன்சாட்டிலிருந்து இருந்து நீக்க வேண்டுமென, சுமந்திரன் எம்.பி கோரிக்கை விடுத்தார்.

சாகலவை கைவிட ரணில் மறுப்பு, யானைக்குள் மீண்டும் பனிப்போர்

கண்டி மாவட்டத்தைச் ​சேர்ந்த அமைச்சரொருவரின், அமைச்சுப் பதவியைப் பறித்து, மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரொருவருக்குக் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் செயற்பாட்டுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளாரெனவும்,  அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால், அந்தக் கட்சிக்குள் பனிப்போர் மூண்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கண்டி மற்றும் மாத்தறை ஆகிய இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவரில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரின் விடயதானத்தையே இவ்வாறு மாற்றிக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அறியமுடிகின்றது.

அதில், மாத்தறையைச் சேர்ந்த சட்டம், ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர், தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளாரென, கடந்த14ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார்.

அவருக்கே, கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த, உயர்க்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்லவிடமிருந்து, நெடுஞ்சாலைகள் அமைச்சை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்தச் செயற்பாடுகளுக்கே, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனரென, அறியமுடிகின்றது.

February 21, 2018

எதுவும் செய்ய முடியாது - கைகழுவினார் சபாநாயகர்

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தொடர்ந்து பயணிப்பதாக இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கு அப்பால் எனக்கு எதுவும் செய்ய முடியாது. எனினும் இது தொடர்பில் காணப்படும் முரண்பாடுகள் குறித்து தான் அவதானம் செலுத்துவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை தேசிய அரசாங்கம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

தேசிய அரசாங்கம் தொடர்பில் எனது முடிவினை அறிவிப்பதாக கூறினேன். இதன்படி இரு பிரதான கட்சிகளும் தமது நிலைப்பாட்டை அறிவிக்க  வேண்டும் என கோரினர். இதன்படி அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கினேன். 

இந்நிலையில் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியும் தொடர்ந்து பயணிப்பதாக இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கு அப்பால் எனக்கு எதுவும் செய்ய முடியாது. எனினும் இது தொடர்பில் காணப்படும் முரண்பாடுகள் குறித்து தான் அவதானம் செலுத்துவேன் என்றார்.

தூக்கம் குறைந்தால், ஆண்மைக்கு பாதிப்பு - ஆய்வில் கண்டுபிடிப்பு

குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் பல காரணங்கள் உள்ளன.

இதில் புதிதாக விந்தணுவிலுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை நிர்ணயம் செய்வதில் ஆண்களின் தூக்கமும் முக்கிய பங்கு வகிக்கிறது என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.

‘மேற்கத்திய நாடுகளில் ஆண்களுடைய விந்தணுக்களின் எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. அதோடு விந்தகத்தில் கட்டிகள் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்த காரணிகள் அவர்கள் தந்தையாகும் தகுதியை குறைக்கிறது’ என்கிறார் டென்மார்க்கிலுள்ள பேராசிரியர் நீல்ஸ் ஷாகிபேக்.

சீனாவின் சாங்சிங் மாநிலத்திலுள்ள 3-வது ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 796 ஆண்களிடமிருந்து இந்த ஆய்வுக்காக விந்தணுக்கள் பெறப்பட்டது.

அவர்களின் தூங்கும் நேரமும் அதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் ஆறரை மணி நேரத்துக்கு குறைவாக தூங்குபவர்களின் விந்தணுக்களில் டி.என்.ஏ.வின் தரம் 30 சதவிகிதம் குறைந்திருந்தது.

தூக்கம் குறைந்தவர்களுக்கு இனப்பெருக்கத்தைத் தூண்டும் டெஸ்டோஸ்ட்டீரான் ஹார்மோன் அதிகம் உருவாவதில்லை என்பது இதற்கு முந்தைய ஆய்வு
களிலும் கூறப்பட்டுள்ளது. அது மீண்டும் இந்த ஆய்வின் மூலம் உறுதியாகி உள்ளது. ஒரு நாளைக்கு 7 மணி முதல் ஏழரை மணி நேரம் வரை தூங்குபவர்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, வாழ்க்கை முறை மாற்றங்களால் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிற இன்றைய இளைஞர்கள், எதிர்கால நலன் கருதி 7 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம் என்று பரிந்துரைத்திருக்கிறது இந்த ஆய்வு.

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்தவருக்கு சிறைத்தண்டனை

மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்து வருகிறார். இவரை கோமாளி போல சித்தரித்து பிரபல ஓவியர் பாஹ்மி ரேசா கேலிச்சித்திரம் தீட்டி இணையதளத்தில் வெளியிட்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக அவர் மீது அங்கு உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையின்போது, பாஹ்மி ரேசா மீது ஆபாசமான, தவறான, அச்சுறுத்தலை ஏற்படுத்துகிற, ஒரு நபரை தொல்லை செய்ய விரும்புகிற ஆன்லைன் உள்ளடக்கத்தை பரப்பியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.விசாரணை முடிந்து உள்ள நிலையில், அவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனையும், 7 ஆயிரத்து 700 டாலர் (சுமார் ரூ.5 லட்சம்) அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.இது தொடர்பாக பாஹ்மி ரேசாவின் வக்கீல் சியாரெத்சான் ஜோஹன் கூறும்போது, “இந்த தண்டனை எதன் அடிப்படையில் விதிக்கப்படுகிறது என்பது குறித்து நீதிபதி எதுவும் குறிப்பிடவில்லை. இதை எதிர்த்து அப்பீல் செய்வோம்” என குறிப்பிட்டார்.

இதே போன்று மற்றொரு கோர்ட்டிலும் பாஹ்மி ரேசா இன்னொரு வழக்கை சந்தித்து வருகிறார்.மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், அரசு பணத்தில் பல கோடி ஊழல் செய்ததாக எழுந்து உள்ள குற்றச்சாட்டு தொடர்பாக அரசுக்கு எதிராக செயல்படுகிற எதிர்க்கட்சி  தலைவர்கள், ஆர்வலர்களுடன் இணைந்து, பாஹ்மி ரேசா செயல்பட்டு வருகிறார். போராட்டங்களிலும் பங்கு எடுத்து வருகிறார். இந்த ஊழல் தொடர்பான தகவல்களை வெளியிடுகிற இணைய தளங்களை மலேசிய அரசு முடக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் முற்றுகை: துருக்கி அறிவிப்பு

சிரியாவில் குர்து படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அஃப்ரின் நகரை முற்றுகையிடவிருப்பதாக துருக்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ''இனி வரும் நாள்களில், சிரியாவிலுள்ள அஃப்ரின் நகரை எங்களது படைகள் முற்றுகையிடும்'' என்று கூறினார்.

சிரியாவில் உள்ள குர்து படையினர் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நிகழ்த்தத் தொடங்கிய ஒரு மாதம் ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் அவர் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்களது நாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் குர்து அமைப்பினருக்கு, சிரியாவிலுள்ள ஒய்பிஜி குர்துப் படையினர் ஆதரவளிப்பதாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது.

இதன் காரணமாக, சிரியாவிலுள்ள குர்துப் படையினர் மீது அந்த நாட்டுக் கிளர்ச்சியாளர்களின் உதவியுடன் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களை துருக்கி நடத்தி வருகிறது.

இந்த விவகாரம், அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், துருக்கி அதிபர் எர்டோகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘‘இலங்கை வீரர்­க­ளி­ட­மி­ருந்து, இன்னும் அதி­க­மாக எதிர்­பார்க்­கின்றேன்"

பங்­க­ளா­தே­ஷுக்­கான கிரிக்கெட் சுற்றுப் பய­ணத்­தின்­போது மூவ­கை­யான சர்­வ­தேச கிரிக்கெட் தொடர்­களில் பங்­கு­பற்­றிய இலங்கை, அவை அனைத்­திலும் வெற்­றி­பெற்­றது. இந்த வெற்­றி­யா­னது இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­று­ந­ராக பத­வி­யேற்ற சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­க­வுக்கு வெற்­றி­க­ர­மான ஆரம்­ப­மாக அமைந்­தது.

எனினும் இலங்கை கிரிக்கெட் வீரர்­க­ளிடம் இருந்து இன்னும் அதி­க­மாக எதிர்­பார்ப்­ப­தா­கவும் இதனை விட சிறந்த ஆற்­றல்­களை அவர்­களால் வெளிப்­ப­டுத்த முடியும் என நம்­பு­வ­தா­கவும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் பேசிய சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க தெரி­வித்தார்.

ஏஞ்­சலோ மெத்யூஸ் உபா­தைக்­குள்­ளா­னதன் கார­ண­மாக மூவகை சர்­வ­தேச தொடர்­க­ளிலும் தினேஷ் சந்­திமால் அணித் தலை­வ­ராக செயற்­பட்­ட­துடன் அவ­ரது தலை­மையில் இலங்கை அணி அபார வெற்­றி­யீட்­டி­யது.

பங்­க­ளாதேஷ், ஸிம்­பாப்வே ஆகிய நாடு­களும் பங்­கு­பற்­றிய மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் தொடரில் இலங்கை சம்­பி­ய­னா­ன­துடன் பங்­க­ளா­தே­ஷு­ட­னான இரு­த­ரப்பு டெஸ்ட் தொடரில் 1 க்கு 0 எனவும் சர்­வ­தேச இரு­பது 20 தொடரில் 2 க்கு 0 எனவும் வெற்­றி­யீட்­டி­யது.

இந்த வெற்­றி­க­ளுடன் திங்­க­ளன்று நாடு திரும்­பிய இலங்கை அணி­யி­ன­ருக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தில் சிறந்த வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

இந்த வர­வேற்­பின்­போது ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் பேசிய தலைமைப் பயிற்­றுநர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க, ‘‘இலங்கை வீரர்­க­ளி­ட­மி­ருந்து இன்னும் அதி­க­மாக எதிர்­பார்க்­கின்றேன். அத்­துடன் அவர்­களால் இதனை விட சிறந்த ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்த முடியும் என நம்­பு­கின்றேன்’’ என்றார்.

‘‘சிறந்த புரிந்­து­ணர்­வு­டன்­கூ­டிய தொடர்­பா­டல்கள், சாது­ரி­ய­மான நெகிழ்­வு­ப்போக்கு, சிறந்த சுற்­றுச்­சூழல் என்­ப­னவே இலங்கை சகல தொடர்­க­ளிலும் வெற்­றி­பெ­று­வ­தற்­கான பிர­தான கார­ணிகள்’’ எனவும் அவர் குறிப்­பிட்டார்.

‘‘இந்த அணி­யினால் இன்னும் அதி­க­மான முன்­னேற்­றத்தை அடை­ய­மு­டியும். நான்கு சிறந்த வீரர்கள் உபா­தைக்­குள்­ளாகி தற்­போது ஓய்­வாக இருக்­கின்­றனர். இவர்கள் அனை­வரும் அணிக்கு திரும்­பி­யதும் பெரிய அணி­க­ளுடன் போட்­டி­யி­டக்­கூ­டி­ய­தாக இருக்கும். எமது நாட்டில் நிறைய ஆற்­றல்கள் மிக்க வீரர்கள் இருக்­கின்­றனர்.

வர்­க­ளுக்கு சரி­யான வாய்ப்­ப­ளிக்­க­வேண்டி இருக்­கின்­றது. சர்­வ­தேச அரங்கில் அதிக விக்­கெட்­களை வீழ்த்­திய வலது கை பந்­து­வீச்­சா­ளரும் (முத்­தையா முர­ளி­தரன்), இடது கை பந்­து­வீச்­சா­ளரும் (ரங்­கன ஹேரத்) நமது நாட்­டி­லேயே உள்­ளனர்’’ என ஹத்­து­ரு­சிங்க மேலும் கூறினார்.

இரு­வகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் போட்­டி­களில் திசர பெரே­ராவின் ஆற்­றலை மெச்­சிய ஹத்­து­ரு­சிங்க, சிரேஷ்ட வீரர் ஜீவன் மெண்­டி­ஸையும் பாராட்டத் தவ­ற­வில்லை.

இதே­வேளை, ‘‘இலங்கை அணி வெற்­றி­பெ­று­வதை வெளி­யி­லி­ருந்து பார்க்க நேரிட்­டமை ஏமாற்­ற­ம­ளிக்­கின்­றது. ஆனால் வீரர்கள் அனை­வரும் துணிச்­ச­லுடன் விளை­யாடி வெற்­றி­பெற்­றமை பாரட்­டத்­தக்­கது. சீடர்­க­ளுடன் மேய்ப்பர் மீண்டும் இணைந்­ததன் பல­னாக சக­ல­து­றை­க­ளிலும் நாங்கள் பிர­கா­சிக்­கின்றோம்’’ என மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர்கள் அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் தெரி­வித்தார்.

மெத்­யூ­ஸுக்குப் பதி­லாக இரு­வகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் போட்­டி­களில் தலை­வ­ராக விளை­யா­டிய டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்­திமால், ‘‘வெற்­றி­க­ளுடன் நாடு திரும்­பி­ய­தை­யிட்டு மகிழ்ச்சி அடை­கின்றேன். ஓர் அணி என்­ப­தை­விட ஒரு குடும்­ப­மா­கவே விளை­யா­டினோம். ஹத்­து­ரு­சிங்­கவின் வருகை எங்­களை வெகு­வாக மாற்­றி­யுள்­ளது.  முன்­னேற்­றப்­பா­தையில் செல்­வ­தற்கு அவர் ஓர் உந்­து­சக்­தி­யாக விளங்கு கின்றார்’’ என்றார்.

மகிந்தவை பிரதமர் பதவியை வழங்க அழைத்தால், 114 Mp களை பெற்றுக்கொள்ளும் விதத்தை காணமுடியும்

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட்டு எதிர்க்கட்சி சந்தர்ப்பத்தை கேட்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதியை சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று -21- நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை அமைக்கும் தேவை ஜனாதிபதிக்கு இருந்தால், அதற்கு கூட்டு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியை நீக்கி விட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை அமைக்க போவதாக ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கூறினார். எனினும் தற்போது அந்த நிலைப்பாடு மாறியுள்ளது.

எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்க அழைத்தால், அரசாங்கத்தை அமைக்கும் விதத்தையும் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளும் விதத்தையும் காண்பிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்களுக்கு பேரிடி, பிரதிநிதித்துவத்திற்கு விழுந்தது அடி

மாகாண சபை எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை, முஸ்லிம்களது முன்மொழிவுகளை புறக்கணித்துள்ளதாக நம்பகமான தகவல்.

புதிய தேர்தல் முறையில் மாத்திரமன்றி எல்லை நிர்ணயத்தினாலும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கு பாரிய அடி விழுந்துள்ளது.

இருப்பதையும் இழக்கின்ற நிலையில் சமூகம், தலைவர் யாரெனும் சர்சையில் முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் அரசியல் சூதாட்டம், அரசியல் தலைமைத்துவமின்றி சமூகம் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எனும் நிர்க்கதி நிலையில்.

Inamullah Masihudeen

பேராசை பிடித்தவர் ரணில் - மஹிந்த சாடுகிறார்

மக்கள் நிராகரித்துள்ள போதும் பேராசை காரணமாகவே பிரதமர் அந்த பதவியை தொடர்ந்தும் வகிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை – ரஜமல்வத்த விபஸ்ஸனா தியான மண்டபத்திற்கு விஜயம் செய்த அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் நாளாந்தம் வீழ்ச்சி போக்கிற்கே முகங்கொடுத்து வருகிறது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒவ்வொரு கோணங்களிலிருந்து செயற்படுகின்றனர்.

தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்த காலம் காலாவதியாகியுள்ளது.

இது தொடர்பில் சபாநாயகர் உரிய தீர்மானம் ஒன்றை எட்ட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

தேசிய அரசு என்பது, கணவன் - மனைவி குறித்த விடயமல்ல, பாராளுமன்றில் சுவாரசிய விவாதம்


தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து முன்கொண்டு செல்வதில் எந்த சிக்கலும் இல்லை என்று பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று -21- தேசிய அரசாங்கம் தொடர்பில் விளக்கமளிக்கும்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் இணைந்து தொடர்ந்து தேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விலகவில்லை என்று, கூட்டமைப்பின் பொதுசெயலாளர், அமைச்சர் மகிந்த அமரவீர சபையில் விளக்கமளித்தார்.

இதன்படி ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் இடையில் தேசிய அரசாங்க உருவாக்கத்துக்காக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்ந்தும் செல்லுபடியாகும் என்று அவர் கூறினார்.

இதனை அடுத்து எழுத்த ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தேசிய அரசாங்கத்துக்கான ஒப்பந்தம் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்துடன் காலாவதியாகியுள்ள நிலையில், மீண்டும் ஒப்பந்தம் செய்துக் கொள்ளாமல் தற்போதைய அமைச்சரவையை அங்கீகரிக்க முடியாது என்று கூறினார்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் பைசர் முஸ்தபா, உடன்படிக்கையுடன் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பு சபையில் குறித்த உடன்படிக்கையை நீடிப்பதாக அறிவித்ததன் பின்னர் அது குறித்து மூன்றாம் தரப்பு கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து எழுந்த அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல, ஒப்பந்தம் செய்து கொண்ட இரண்டு கட்சிகளும் ஒப்பந்தத்தை நீடிப்பதாக அறிவித்துள்ள நிலையில் இது குறித்து மேலும் விவாதிக்க வேண்டியதில்லை என குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இது கணவன் மனைவி குறித்த விடயம் அல்லவென்றும் அரசாங்கம் சம்பந்தப்பட்டது என்பதால் தற்போது தேசிய அரசாங்கத்தின் பங்குதாரிகள் இணக்கம் கண்டுள்ளநிலையில், எதிர்வரும் தினங்களிலேனும் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்து, நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு அவர் கோரினார்.

இதற்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு எந்த விதமான ஆவணங்களும் அவசியமில்லை என்று குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கான எந்த ஆவணங்களும் இல்லை.

இலங்கையில் முதன்முறையாக அவ்வாறான அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டதாலேயே தாம் ஒப்பந்தம் செய்துக் கொள்வதற்கு அனுமதித்தாக பிரதமர் குறிப்பிட்டார்.

இதன்போது எழுந்த பிவித்துரு ஹெல உறுமயவின் செயலாளர் உதயகம்மன்பில, தேசிய அரசாங்கத்தை உருவாக்க ஆவணங்கள் தேவையில்லை என்ற பிரதமரின் கூற்று, பிழையான முன்னுதாரணமாக பின்பற்றப்படக்கூடும் என்று சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் அரசாங்கங்கள் தேசிய அரசாங்கத்தை உருவாக்கிவிட்டதாக வாய்மூலம் அறிவித்து விட்டு, தமக்கு ஏற்றாற்போல அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

எனவே இந்த விடயத்தில் அரசியல் யாப்புக்கு அமைவாக பிரதமர் செயற்பட வேண்டும்என்று கம்மன்பில கோரினார்.

இதற்கு பதில் வழங்கிய பிரதமர், தாம் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தை உதாரணமாக மேற்கோள்காட்டியது, தேசிய அரசாங்கத்தை உருவாக்க ஆவணங்கள் அவசியம் இல்லை என்பதை எடுத்துக்காட்ட மாத்திரமே என்றும், அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பாக இல்லை என்றும் விளக்கமளித்தார்.

எவ்வாறாயினும், இந்த விடயத்தில் சட்டரீதியான பிரச்சினைகள் இருப்பின் அது குறித்து ஆராய்ந்து அறிவிப்பதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

குண்டு வெடிப்பால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: மஹிந்த அணி எச்சரிக்கை

தியத்தலாவ - கஹகொல்ல பகுதியில் பஸ்ஸில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால் இலங்கையில் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் டி சொய்ஸா எச்சரித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் கொழும்பில் இன்று -21- நடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் பஸ் குண்டு வெடிப்பு என்ற கலாச்சாரம் இலங்கையில் இருந்தது.

9 வருடங்களுக்கு முன்னர் கெப்பித்திகொல்லாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பிற்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின் அந்த சத்தம் நிறுத்தப்பட்டது.

ஆனால் இன்று அதிகாலை தியத்தலாவ - கஹகொல்ல பகுதியில் தனியார் பஸ் ஒன்றில் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பதை நாட்டின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பாதுகாப்பு பிரதானி வெளிப்படுத்த வேண்டும்.

இது யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பயணிகள் பேருந்து என கூறப்படுகிறது.

இந்த அபாய நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கான ஒரே வழி நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்வதேயாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Older Posts