Header Ads



நல்ல மனசு


42,100 ரூபாய் பணத்தோடு தவறவிட்ட பணப்பையை பாதுகாப்பாக வைத்திருந்து  இரண்டு மாதங்களின் பின்னர் பாதுகாப்பாக  பணத்தொகையுடன் பயணியிடம் ஹட்டன்- கொழும்பு தனியார் பஸ்   சாரதி கையளித்துள்ளார்.


சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது பஸ்ஸில் கொழும்பிலிருந்து ஹட்டன் வந்த பயணியொருவர் பொதியொன்றை தவற விட்டு சென்றுள்ளார்.


தேடி வருவார் என பாதுகப்பாக பொதியை வைத்திருந்த பஸ் சாரதி  பொதியை,   பிரித்து பார்த்தபோது அதில் ஒருத்தொகை பணமும் மருத்துவ சிகிச்சைக்கான அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருப்பதை கண்டு உடனடியாக ஹட்டன் பஸ் தரிப்பிட நிலைய அதிகாரிகளிடம் உரியவரை தேடி ஒப்படைக்குமாறு பொதியை கையளித்துள்ளார்.


அதன் பின்னர் அதிகாரிகள் பொதியின் உரிமையாளரை தேடி  வரவழைத்து  ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் முன்னிலையில் 42100 ரூபாய் பணத்தையும் ஆவணங்களையும் புதன்கிழமை (26)  கையளித்துள்ளனர்.


ஹட்டன்- கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ்ஸின் உரிமையாளரும் சாரதியுமான ஜயம்பதி மற்றும் நடத்துனர் ஆகியோரை பலரும் பாராட்டியுள்ளனர்.


எஸ்.கிருஸ்ணா

No comments

Powered by Blogger.