Header Ads



"தற்கொலைச் சுற்றுலா - அல்லாஹ்விற்கு நன்றி கூறுவோம், நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்காக" (படங்கள்)


ஒரு வேலைப்பளு நிறைந்த புதன்கிழமை நாளில் மாலை நேரத்தில் ஒரு குடும்ப அங்கத்தவர்கள் அவர்களுக்கு மிக நெருக்கமான ஆண் பெண் நண்பர்கள் ‘பேர்த்’ விமான நிலையத்தில் வழியனுப்பும் கருமபீடத்தில் குழுமியிருந்தார்கள். ஆனால் அது வழமையான வழியனுப்பும் பிரியாவிடைக்காக அல்ல.

அவர்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு பலவீனமான தோற்றமுடைய ஒரு மனிதனைச் சுற்றி சிறு குழுக்களாக சூழ்ந்திருந்து அவருடன் நகைசுவையாக  சிரித்துப்பேசி அரவணைத்து ‘அவர்களின் அன்பை’ பகிர்ந்து கொள்வதைப்போல நடித்தனர்.  முடிவில் அம்முதியவர்  தனது விமானத்தில் ஏறத் தயாராகிறார்.

 இது Dr.David Goodall - ‘டேவிட் குடால்’- உலகில் மேற்கொள்ளும் இறுதிப்பயணமும் இறுதிப்பயணத்திற்கான பயணமும் ஆகும். ‘டேவிட் குடால்’  இறக்கப் போகிறார்.

‘டேவிட் குடால்’ ( 1914- 2018) ற்கு 104  வயது கடந்து ஒரு சில மாதங்களும் ஆகின்றது. வயது மூப்பு அவரை சிறுபிள்ளைபோல இன்னொருவரில் தங்கி வாழும் நிலைக்கு தள்ளியிருக்கின்றது. ‘இனியும் தான் வாழத் தகுதியில்லை வாழ்ந்தது போதும்’  என வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ள,அதாவது ‘தற்கொலை’செய்து கொள்ள சுவிட்சர்லாந்திற்குச்  செல்கிறார்.

இந்த வயதில் எங்களுக்கு இப்படி ஒரு தாத்தா இருந்தால் எப்படி எல்லாம் அவரை கொண்டாடுவோம் என்ற எண்ணம் மனதில் மின்னிக்கொண்டிருக்கின்றது.இப்படி அநியாயம் செய்யமாட்டோம், அல்லாஹ்விற்கு நன்றி,நாங்கள் முஸ்லிம்களாக இருக்கின்றோம்.

டாக்டர் ‘டேவில் குடால்’ ற்கு ஒரு மரியாதைக்குரிய கல்வியாளர், கவிஞர், நடிகர், தந்தை, தாத்தா,கொள்ளுத்தாத்தா  என உலக வாழ்வின் சிறப்பு நாமங்களை இறைவன் வழங்கி அழங்கரித்தான். 

பிரித்தானியா,அமெரிக்கா,கானா,அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் பேராசிரியராக பணிபுரிந்தவர். மூன்று திருமணம், நாங்கு பிள்ளைகள்,12 பேரப்பிள்ளைகளைக்கண்டவர், இருந்தும் மனிதனுக்கு மிகச்சிறந்த அருளான இறைவழிகாட்டல் தூரமானதாக இருந்தது ஏன் எனப்புரியவில்லை.

2016 ஆம் ஆண்டில், குடாலின் 102 வது வயதில்,தாவர சூழலியல் மற்றும் இயற்கை வள மேலாண்மைத் துறையில் ஒரு கல்வியாளராக, ஆராய்ச்சியாளராக மற்றும் ஆசிரியராக அறிவியலுக்கான மனித குலத்திற்கு ‘டேவிட் குடால்’ ஆற்றிய சேவைக்காக Member of the Order of Australia எனும் விருது அவரை தேடிவந்தது. அதே ஆண்டில் அவர் கௌரவப் பேராசிரியராகப் பணியாற்றிய பல்கலைக்கழகம்   அவரது மூப்பு எனும் பலவீனத்தை காரணம் காட்டி அவரது அலுவலகத்தை காலி செய்யும்படி உத்தரவிட்டது. 100க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை தயாரித்து, அறிவியலுக்கு அர்ப்பணிப்புடன் செலவழித்து முழு வீச்சுடன் வாழ்ந்த ஒரு மனிதனின் வாழ்க்கை இவ்வாறு முடியக்காரணம் என்ன?

‘சடவாதம்’,பணத்தை மட்டும் மையமாகக்கொண்டு சிந்திக்கவும் செயற்படவும் கற்பிக்கும் மேற்கத்தேய கல்வியும் வாழ்க்கை முறையும் அன்றி வேறு காரணம் இல்லை.

தனியாக வாழும் கலாச்சாரத்தினால் தனிமையில் வாழ்ந்த ‘டாக்டர் குடால்’ 103 வது வயதில் கட்டிலில் இருந்து கீழே வீழ்ந்தவரால் எழுந்திருக்கமுடியவில்லை. அவரின் உதவிற்காக அவரின் அழைப்புக்களுக்கு பதிலளிக்கப்படவில்லை.இரண்டு நாட்கள் தரையிலேயே கிடந்தவரை துப்புரவு ஊழியர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார்.

பின்னொருநாள்;

“அன்று தொட்டு நான் என்னையே கவனித்துக் கொள்ள இயலாதவனாகக் கருதப்பட்டேன். அது எனக்கு மிகவும் கவலையளித்தது” 

“இனியும் வாழ்வதற்கு என் வாழ்விற்கு மதிப்பு இல்லை, 90 வயது வரை வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்தேன், அது என்னைக் கடந்து விட்டது. இதற்குமேல் நான் வாழ்வதினால் எந்த நன்மையையும் எதிர்பார்ப்பது கடினமே” எனக்கூறினார்.

அப்போதுதான் தன் வாழ்க்கையை எப்படி முடித்துக் கொள்வது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார் டாக்டர் டேவிட் குடால்.

இதன்பின்னர் எக்சிட் இன்டர்நேஷனல் - Exit International – எனும் கருணைக்கொலை வக்கீல் குழுவைத் தொடர்புகொண்டு  அவர்களின் ஆதரவுடன், தற்கொலைக்கு உதவக்கூடிய சுவிஸ் மருத்துவமனைக்கான விண்ணப்பத்தை கண்காணிக்கும் பணி தொடங்கினார். தனது விஞ்ஞான மனதில் கூர்மையான பகுத்தறிவை ஒருங்கிணைத்து தனது வாழ்நாளைக் கழித்த ஒரு மனிதனின் செயல் இது. "நான் இந்த வழியில் விஷயங்களை முடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்”. என்றார் குடாலின்.

டாக்டர் குடாலின் முடிவுக்கு அவரது குடும்பத்தினரின் முழு ஆதரவு சந்தேகத்திற்கு இடமின்றி இருந்தது என்பது மெய்சிலிர்க்கவைக்கும் யதார்த்தம் ஆகும்.

டேவிட் குடாலினை சுமந்த விமானம் சுவிச்சர்லாந்தை நோக்கி இன்னொரு பயணத்தை பறக்க மேலெழுந்தது.

சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை கிளினிக்குகள் செயல்பட்டு வருகின்றன. தற்கொலை சுற்றுலா என்ற பெயரில் மக்களிடையே அவற்றை பரப்பும் அளவிற்கு அவை பரவி வருகின்றன. அவை தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கைக்கு நிகரான பலரின் உயிரை எடுக்கின்றன. அவர்களில் பெரும்பாலோர் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படும் வயதானவர்கள்.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தினாலும் மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாகவேண்டும் என்றிருந்தால், 'இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து போய்விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின் எனக்கு இறப்பைத் தருவாயாக!' என்று கேட்கட்டும் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். [ஆதாரம்: புகாரி 5671,6351]

- AKBAR   RAFEEK -




No comments

Powered by Blogger.