Header Ads



இந்தியர்களை வியப்பில் மூழ்கடித்த இலங்கைப் பெண்


பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்ற முதுமொழி சில வேளைகளில் நிஜமாகி விடுகின்றது. ஆனால் அதற்கு எதிராக உண்மை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


கோயம்புத்தூரில் அமைந்துள்ள புனர்வாழ்வு மையம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளார் 55 வயதுடைய இலங்கையை சேர்ந்த ராஜேஸ்வரி, கடந்த வெள்ளிக்கிழமை வீதியில் கிடந்த பொதி ஒன்றினை மீட்டுள்ளார்.


மீட்டெடுத்த பொதியினை பரிசோதித்த போது, அதற்குள் இந்திய மதிப்புள்ள 40 ஆயிரம் ரூபா பணம் இருப்பதனை அவதானித்துள்ளார்.


இந்நிலையில் அங்கு எழுமாறாக வருகை தந்த கோகுல் என்ற நபரிடம் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு செல்வதற்கு வழிகாட்டுமாறு கோரியுள்ளார்.


கோகுல் என்பவர் சத்தியமங்கலம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார். வீதியில் பொதியொன்றை கண்டெடுத்ததாகவும், அதில் பணம் காணப்பட்ட விடயத்தையும் கோகுலிடம் தெரிவித்து, இதனை உரிய நபரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


சத்தியமங்கலம் பொலிஸ் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்ததும், பொலிஸார் வட்ஸ் அப் வாயிலாக தகவலை வெளியிட்டுள்ளனர். உரிய ஆதாரங்களுடன் வருகை தந்தால் பணம் மீளச்செலுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.


இந்நிலையில் பணத்திற்கு உரிமைக்கோரி ஒருவர் வருகை தந்துள்ளார். அவரிடம் விசாரணைகளை நடத்திய பொலிஸார். குறித்த பணமானது பிரசவ தேவைக்காக எடுத்துச்சென்ற வேளையில் தவறவிடப்பட்டதாகவும், அதனை மீட்டுத்தந்த பொலிஸார் மற்றும் இலங்கை பெண்ணுக்கும் பணத்தின் உரிமையாளர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், இலங்கையை சேர்ந்த ராஜேவரியின் நேர்மையையும் மனிதாபிமானத்தையும் பாராட்டியதோடு, கோகுல் என்பவருக்கும் பொலிஸார் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. ராஜேஸ்வரியுடன் பெரும்பாலான இலங்கையர்கள இத்தகைய நல்ல பழக்கங்களையுடையவர்கள், அவர்கள் ஒருபோதும் மற்றவர்களின் பொருட்கள் பணத்தின் மீது ஆசைவைப்பதில்லை. நல்லாட்சியினர் செய்த சட்டம் சார்ந்த நல்ல சில விடயங்களை அமல் நடாத்தியதன் விளைவாக வியாபாரங்களில் ஓரளவு நீதியும் நேர்மையும் பின்பற்றப்பட்டது. இந்த மக்கள் விரோத ஆட்சிவந்ததும் குறிப்பாக கபுடாஸ் நிதியமைச்சரானதும் பெரிய பணக்காரர்கள் முதல் சாதாரண வியாபாரிகளிடமும் இலஞ்சமும் கப்பமும் எடுத்து நீங்கள் எப்படி வியாபாரம் செய்தாலும் பரவாயில்லை எங்களுக்கு கப்பம் தந்தால் எல்லாம் சரி எனக்கூறி சட்டவிரோதமாகக் கபுடாஸுக்கு கப்பம் கொடுத்துவி்ட்டு வியாபாரத்தில் மங்கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். தற்போது பொருட்களின் விலை பலமடங்கு அதிகரிக்கக் காரணம் ராஜபக்ஸ,கபுடாஸ் உற்பட பேராசை பிடித்த மெதமுலான குடும்பம் மக்களுக்கும் நாட்டுக்கும் செய்த அநியாயமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.