Header Ads



ஆட்டோ கட்டணம் குறைக்கப்படுமா..?


முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் பெட்ரோல் ஒதுக்கத்தை அதிகரித்தால் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்கத் தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


முச்சக்கரவண்டிகளுக்கு தற்போது வாராந்தம் வழங்கப்படும் 5 லீட்டர் பெட்ரோல் ஒதுக்கத்தை  மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாயின் இவ்வாறு பயணக் கட்டணத்தை குறைக்க தயாராக உள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அண்மையில் பெட்ரோல்  ஒரு லீட்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டது. எனினும் பயண கட்டணத்தை குறைக்க முடியாத நிலை காணப்படுவதாக முச்சக்கரவண்டி சாரதிகள் அறிவித்திருந்தனர்.


வாராந்தம் வழங்கப்படும் பெட்ரோல் ஒதுக்கம் போதுமானதாக இல்லை என தெரிவித்து அவர்கள் கட்டணத்தை குறைக்க முடியாதென தெரிவித்திருந்தனர்.


இந்தநிலையில் முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கத்தை அடுத்த வாரம் முதல் அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று அறிவித்திருந்தார்.


இவ்வாறு எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்படுமாயின் பயண கட்டணத்தை குறைக்க முடியும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.