Header Ads



250 கடைகளின் உரிமையும், கட்டுப்பாடும் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் வசமாகியது - வழக்கில் சமரச உடன்பாடு


(ஏ.ஆர்.ஏ.பரீல்)


கொழும்பு – அத்தர் மஹால் விவ­கா­ரத்­துக்கு கொழும்பு பிர­தான மாவட்ட நீதி­மன்றம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை தீர்ப்பும், தீர்­வையும் வழங்­கி­யது. இத­னை­ய­டுத்து கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வாக சபை­யினால் தனியார் ஒரு­வ­ருக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்கு முடி­வுக்கு வந்­தது.


இரு தரப்­பி­னரும் சம­ரச முயற்­சி­யி­னை­ய­டுத்து தீர்ப்­பினை நிறை­வேற்ற இரு தரப்பும் ஏற்­றுக்­கொண்­ட­த­னை­ய­டுத்து சம­ரச உடன்­பாட்டின் பிர­காரம் தீர்ப்பு வழங்க நீதி­மன்றம் இணங்­கி­யது. கொழும்பு பிர­தான மாவட்ட நீதி­மன்றின் நீதி­பதி பூர்­ணிமா பர­ண­க­மகே முன்­னி­லையில் சம­ரசம் எட்­டப்­பட்டு தீர்ப்பு வழங்­கப்­பட்­டது.


இதன் அடிப்­ப­டையில் அத்தர் மஹால் கடைத்­தொ­கு­தியின் உரி­மையும், கட்­டுப்­பாடும் உட­மையும் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தினால் மீளப்­பெ­றப்­பட்­டுள்­ளது.

அத்தர் மஹாலில் ஏற்­க­னவே வாட­கைக்கு அமர்ந்­துள்ள சுமார் 250 கடைக்­கா­ரர்கள் கொழும்பு பெரிய பள்­ளி­வா­ச­லுடன் புதிய வாடகை ஒப்­பந்­தங்­களை செய்து கொள்­வ­தற்கு உடன்­பட்­டுள்­ளனர்.


நீண்­ட­காலம் 3 ஆம் தரப்­பி­னரால் கொழும்பு பெரிய பள்­ளி­வா­ச­லுக்குச் சேர வேண்­டிய வரு­மா­னங்கள் அனு­ப­விக்­கப்­பட்டு வந்­தமை, இத்­தீர்ப்பின் மூலம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.


2016 தொடக்கம் எவ்­வித உடன்­ப­டிக்­கையும் இன்றி சட்­ட­வி­ரோ­த­மாக அத்தர் மஹாலின் வரு­மா­னத்தை அனு­ப­வித்து வந்த பிர­தி­வாதி அக்­காலப் பகு­திக்­கு­ரிய அதா­வது 2016ஆம் ஆண்டு முதல் நீதி­மன்றம் சம­ரச தீர்ப்பு வழங்­கி­யது வரை­யி­லான காலத்­துக்கு நிலுவை வாட­கையை கொழும்பு பெரிய பள்­ளி­வா­ச­லுக்கு நீதி­மன்றில் வழங்­கினார்.

ஒரு கோடி 14 இலட்­சத்து 95 ஆயிரம் ரூபா காசோலை மூலம் வழங்­கப்­பட்­டது.


நீதி­மன்றம் தீர்ப்பு வழங்­கிய அன்று வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையின் பின்பு குறிப்­பிட்ட தீர்ப்பு பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தினால் ஜமா­அத்­தா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது.

இதே­வேளை, குறிப்­பிட்ட DLM/00015/19ஆம் இலக்க வழக்கு விசா­ர­ணைகள் முற்­றுப்­பெ­றும்­வரை அத்தர் மஹால் கடைத்­தொ­கு­தியை மூடி­விடும் படி பிர­தி­வா­தி­யான குத்­த­கைக்­கா­ருக்கு கொழும்பு பிர­தான மாவட்ட நீதி­மன்றின் நீதிவான் ஆர்.எம்.ஒகஸ்டா அத்­த­பத்து உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்தார். இவ்­வுத்­த­ரவு 2022.05.25ஆம் திகதி பிறப்­பிக்­கப்­பட்­டது. இந்த இடைக்­கால தீர்ப்­புக்கு எதி­ராக பிர­தி­வாதி மேன்­மு­றை­யீடு செய்­தி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.


பிர­தி­வா­தி­யான குத்­த­கைக்­கா­ர­ருக்கு எதி­ரான வழக்கு பள்­ளி­வாசல் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி ஹிதா­யத்­துல்லா மூலம் தாக்கல் செய்­யப்­பட்டு கொண்டு நடத்­தப்­பட்­டது. மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் பள்­ளி­வாசல் தரப்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி இக்ரம் மொஹமட் ஆஜ­ரா­கி­யி­ருந்தார். பிர­தி­வாதி சார்பில் சட்­டத்­த­ரணி சித்தீக் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.


மேலும் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் சார்பில் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளான தெளபீக் சுபைர், சட்­டத்­த­ர­ணி ருஷ்தி ஹபீப் மற்றும் நிஹார், பாரிஸ் சஹ்மி ஆகியோர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். பிர­தி­வா­தியும் நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.– Vidivelli

1 comment:

  1. ​மேன்மை தங்கிய கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்களுக்கு எமது பணிவான மரியாதையும் நன்றிகளும் உரித்தாகட்டும். பள்ளிவாயலின் சொத்துக்களை பலாத்காரமாக அனுபவிப்பவர் யாராக இருந்தாலும் அவர் அல்லாஹ்வுக்கு மிகவும் தூரமாகவும் அவனைப் படைந்த இரட்சகனின் கட்டளைகளை முற்றிலும் புறக்கணிப்பவனாகவும் இருக்கின்றான் என்பது தௌிவாகப் புலனாகின்றது. உண்மையில் ஒவ்வொருநாளும் அந்த நபர் முட்கள் நிறைந்த கள்ளிமரத்தைச் சாப்பிட்டு நரக நெருப்பில் சூடாக்கிய கடும் சூடான கொதி நீரையும் மறுமையில் உற்கொள்ள முன்னர் உலகிலேயே அனுபவித்து வருகின்றார். அவருடைய இறுதி முடிவு எவ்வாறு அமையும் என்பதை அவருக்கு அண்மையில் இருப்பவர்கள்,அடுத்தவர்களுக்குப் படிப்பினையாக அவதானித்து பொதுமக்களுக்கு அறிவுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். இது போன்ற பொதுச் சொத்துக்களை பலாத்காரமாக சொந்தம் கொண்டாடுபவர்கள் உடனடியாக அந்த பாவத்திலிருந்து தவிர்ந்து உரிய சொத்துக்களை சொந்தக்காரர்களான பள்ளிவாயல்கள், தனியார்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் ஒப்படைக்குமாறு பணிவாக வேண்டிக் கொள்கின்றேன். இத்தகைய பெரும் பாவங்களில் முஸ்லிம்கள் யாரும் ஈடுபடக்கூடாது எனவும் அன்புடன் வேணடிக் கொள்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.