Header Ads



பிரதமரை பதவி விலகுமாறு, அழுத்தம் கொடுப்பது யார்..?


பிரதமர் மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் என்பதை கண்டறிய வேண்டும் என கொழும்பு  பல்கலைக்கழக வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்( Muruththettuwe Ananda)தெரிவித்துள்ளார்.

நாராஹென்பிட்டிய அபயராம விகாரையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அபயராம விகாரைக்கு சென்று தேரரை சந்தித்து விட்டு வெளியேறிய பின்னர், ஆனந்த தேரர் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஆனந்த தேரர், பிரதமர் பதவி விலகி விட்டதாக நாட்டில் செய்தி பரவுகிறதே என கேட்டேன். அப்படி எதுவும் இருக்கின்றதா என நான் பிரதமரிடம் கேட்டேன்.

அது பற்றி பிரதமருக்கு தெரியவில்லை. பதவியில் இருந்து விலக எதிர்பார்க்கவும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை என பிரதமர் கூறினார்.

அப்படியானால், பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் என்ற உண்மையை நாம் கண்டறிய வேண்டும்.

யார் அழுத்தம் கொடுத்தாலும் அச்சுறுத்தினாலும் பிரதமர் பதவி விலக மாட்டார். அவர் பதவி விலகினால், எம்மிடம் கூறிய பின்னரே விலகுவார்.

பிரதமர் பதவி விலக வேண்டும் என எதிர்பார்க்கும் நபர்கள் இருப்பார்கள் என்றால், ஒழிந்து மறைத்து செயற்படாது, பதவி வகித்தது போதும் விலகி விடுங்கள் என நேரடியாக கூறுங்கள்.

எனினும் நாட்டு மக்கள் மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து விலக விடமாட்டார்கள். அவர் விலகவும் மாட்டார் என ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.