Header Ads



நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன..? இட்டுக்கட்டப்பட்ட போலியான குற்றச்சாட்டு என்கிறார் ஹிஜாஸ்


- புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா -

கடந்த 21 மாதகாலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புள்ளாவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேல் நீதிமன்றம் தீர்ப்ப வழங்கியதுடன் அவரது பிணை கோறிக்கையினையும் நிராகரித்தது.

புத்தளம் மேல் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புள்ளா சார்பில் ஆஜராண ஜனாதிபதி சட்டத்தரணி நலிந்த இந்திரதிஸ்ஸ மற்றும் ஹபீல் பாரிஸ் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாமினர் ஹிஜாஸ் தரப்பில் வாதங்களை முன் வைத்ததுடன்,சட்டமா அதிபர் ஏற்கனவே பிணை வழங்கலுக்கு தமது ஆட்சேபணையினை தெரிவிப்பதில்லை என்பதற்கிணங்க தமது கட்சிக்காரருக்கு பிணை வழங்குமாறு வேண்டுகோளினை முன் வைத்தார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இது தொடர்பில் தமது எதிர்ப்பினை தெரிவிக்காத நிலையிலும்,தற்போதைய இந்த மேல் நீதிமன்றிற்கு பிணை வழங்குவதற்கான அனுமதி இல்லையென்பதால் மேன்முறையீட்டுமன்றிலேயே இதற்கான பிணையினை கோறமுடியும் என்றும் நீதவான்  இதன் போது குறிப்பிட்டார்.

இதே வேளை மேற்படி வழக்கினை எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதவான் அன்றைய தினம் குறுக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கான அனுமதியினை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஹிஜாஸ் ஹிஸ்புள்ளாவிற்கு பினை கோறும் மனு மீதான விசாரணை இடம் பெறவுள்ள நிலையில் அன்றைய தினம் பிணை மனு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில்  புத்தளம் மேல் நீதிமன்றிலும் பிணையினை பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்குமென மன்றில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டார்.இதே வேளை நீதிமன்றிற்கு அழைத்து செல்லும் வழியில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புள்ளா கருத்துரைத்த போது, -

இட்டுக்கட்டப்பட்ட போலியான குற்றச்சாட்டில் தான் தடுத்து வைக்கப்பட்டுளதாகவும்,தனக்காக குரல் எழுப்பிய மற்றும் உதவி புரிந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் இதன் போது அவர் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Alhamdulliah He will be released before March this year. The secret behind is UNHR inquiry against Srilanka is scheduled in March

    ReplyDelete
  2. This is utter waste country

    ReplyDelete

Powered by Blogger.