Header Ads



லிட்ரோ தலைவர் பதவி விலக வேண்டும், இல்லாவிட்டால் விலக்க வேண்டும்

- Ismathul Rahuman -

மக்களுக்கு தரமான கேஸ் சிலிண்டர்களை வழங்க முடியாவிட்டால் லிட்ரோ நிறுவனத் தலைவர் பதவி விலகவேண்டும் இல்லாவிட்டால் விலக்க வேண்டும் 

என கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா புது வருட திண வைபவத்தின் பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கூறினார்.    நிமல் லான்சா அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

  இன்று ஏற்பட்டுள்ள கேஸ் நெருக்கடிகளால் கேஸ் சிலிண்டரை கொள்வனவு செய்ய நீண்ட வரிசைகளில் காத்துநின்று அலைக்களிகின்றனர். அப்படியான நிலையில் எடுத்துச் சென்றாலும் அவை வெடிக்கின்றன.

   லிட்ரோ தலைவர் சிரித்தபடி  ஊடக மகாநாட்டை நடத்துகிறார். அப்படி சிரிக்கமுடியாது. வீடுகளில் தீபற்றியுள்ளன. மக்கள் பாரிய பிரச்சிணைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

  தலைவர் ஒவ்வொரு கதைகளை சொல்கிறார்.  டிசம்பரில் குறைந்த விலைக்கு கேஸை தருவதாக வாக்குறுதி அளித்தார். சட்டவிரோதமான கேஸை கொள்வனவு செய்ததாக கூறுகிறார். இதனை ஊடகங்களில் சொல்லி பலனில்லை. குற்றப்  புலனாய்வுப் பிரிவிற்குச் சென்று முறையிடவேண்டும். அதற்கெதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அப்படியல்லாமல் நாட்டுமக்களுக்கு பரிகாசம் காட்டி சரிவறாது. பந்தை ஒவ்வொருவர் பக்கம் தல்லி பயனில்லை. மக்கள் அச்சமின்றி பாவிக்கக் கூடிய கேஸை வழங்கியே தீரவேண்டும். இந்தப் பிரச்சிணையை தீர்க்க முடியாவிட்டால் தலைவர் பதவி விலகி வீட்டுக்குச் செல்ல வேண்டும். அப்படியில்லாவிட்டால் அவரை வீட்டிற்கு அனுப்புமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம். 

 இவ்வாறான பதவிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை நியமிக்கவேண்டும். காரணம் அவர்கள் தேர்தலுக்கு முகம்கொடுக்க வேண்டுமென்பதனால் பொதுமக்கள் தொடர்பாக பாரிய உச்சாகத்துடன் உள்ளச்சத்துடன் வேலைசெய்வார்கள். அப்படிஇல்லாவிட்டால் அரச உயர் அதிகாரிகளை இப்பதவிகளுக்கு நியமிக்க வேண்டும். அப்போது தவறுசெய்தால் ஒழுக்காற்று நடவடிக்கை அல்லது சேவை நிறுத்தம் செய்யமுடியும். வெளியாட்களை நியமிப்பதினால்  மக்கள் தொடர்பான கவலையும் இல்லை. கவலை ஏற்படுவதுமில்லை. இவர்கள் இவ்பதவியிருந்து வெறொன்றுக்கு செல்லமுடியும்.

 இவ்வாறான நியமனங்களை வழங்கும் போது மக்களுக்கு பொறுப்புக்கு கூறக்கூடிய மக்கள் பிரதிநிதிகள் அல்லது அரச உயர் அதிகாரிகளை நியமிப்பதே சிறந்தது என்பதே எனது கருத்தாகும்.

 சில நிறுவனங்களில் எந்தவொரு பொறுப்பையும் கவணத்தில் கொள்ளாத பொறுப்புக்கூறாதவர்களை நியமித்துள்ளதை நாம் கான்கிறோம் எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.