Header Ads



எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் - சைக்கிள் தூரமே பயணிக்கவேண்டிய நிலை வரும் - கம்மன்பில


ஜனவரி மூன்றாம் வாரத்திலிருந்து எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஆபத்து உள்ளது; ஆனால் அது உடனடியாக நடக்காது. எரிபொருள் இறக்குமதிக்குத் தேவையான டொலர்களை வழங்க முடியாவிட்டால் இந்த நிலை ஏற்படும் என்றார்.

ஏனைய அத்தியாவசியப் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்ட போதிலும், எரிபொருளுக்கு அவ்வாறான மாற்று எதுவும் இல்லை எனவும் தாம் இது தொடர்பில் அமைச்சரவைக்கு பல தடவைகள் அறிவித்துள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டால் மக்கள் சைக்கிளில் செல்லக்கூடிய தூரம் வரை மட்டுமே பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். TL

1 comment:

  1. இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு. வேறு எப்படி இருக்கும்.

    தற்போது, இலங்கையுடன், பாக்கிஸ்தான், துருக்கி, லெபனான், அப்கானிஸ்தான்ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் தோல்வி கண்டு, வங்குரோத்து ஆகி வருகின்றன

    ReplyDelete

Powered by Blogger.