Header Ads



இதயங்களை கலங்கடிக்கும் ஒரு தாயின் உயிரிழப்பும், இரட்டை குழந்தைகளின் பரிதவிப்பும், தந்தையின் ஏக்கமும்...!!!


இலங்கையின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்த இரட்டை குழந்தை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

மாத்தளை, மடவல, உல்பத்தை பிரதேசத்தில் இரட்டை குழந்தைகளை பெற்ற தாய் ஒருவர் 14 நாட்களில் உயிரிழந்துள்ளார்.குழந்தைகளை பிரவசித்த தாய் 14 நாட்கள் உடல் நலத்துடன் இருந்த நிலையில் திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 32 வயதான சுமித் குமார கருணாரத்ன என்ற தந்தையே குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

சுமித் குமார, நிரோஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கூலி வேலை செய்யும் சுமித்திற்கும் நிரோஷாவுக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

சிஸேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்துள்ளது. 4 நாட்கள் மருத்துவமனை சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

வீட்டிற்கு வந்த பின்னர் இரவு திடீரென ஏற்பட்ட உடல் நல பாதிப்பு காரணமாக தாய் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சுயநினைவின்றி இருந்த பெண் உயிரிழந்துள்ளார். தனது மனைவி உயிரிழந்ததனை தன்னால் இன்னமும் நம்ப முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குழந்தைகளை வளர்ப்பதற்கு அவருக்கு போதுமான வருமானம் இன்மையால் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளுக்ளு பால் பக்கட்கள் கொள்வனவு செய்வதற்கு கூட வசதி இல்லாத அவருக்கு அயலவர்கள் உதவி வருகின்றனர்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை அவரை இன்னும் பாதிப்படையச் செய்துள்ளது. இந்நிலையில் இதன் உண்மையை அறிந்த ஊடக நண்பர்கள் தமது சமூக வலைத்தளங்களில் உதவி கோரி தகவல்களை பரிமாறி வருகின்றனர். TW

No comments

Powered by Blogger.