Header Ads



நாமல் எப்படி எதிர்காலத்தில், ராஜாவாக முடியும் என்று பார்ப்போம்..? தயாசிறி


அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) அண்மையில் தெரிவித்த கருத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara) இன்று (15) பதிலளித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் இது இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட மாநாடு இன்று கட்சியின் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தலைமையில் அங்குனகொலபெலஸ்ஸ நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர உரையாற்றுகையில்,

நான் அரசாங்கத்தை விட்டு வெளியேறுகிறேனா என்று என்னிடம் தொடர்ந்து கேட்கப்படுகிறது. மகிந்த ராஜபக்ச அவ்வாறு கூறவில்லை. சிங்கள ஊடகம் ஒன்றுடனான மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa)நேர்காணலைக் கவனியுங்கள். தனது ஆட்சியின் போது லங்கா சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்டுகளும் தன்னுடன் இருந்ததாக அவர் கூறுகிறார். அவர்களும் எதிர்த்தனர். அத்தகைய பிரச்சினைகள் எதுவும் எழவில்லை என்று அவர் கூறுகிறார்.

“ஆனால் வருங்கால மன்னர்கள் எப்படி பேசுகிறார்கள்? அரசாங்கத்திலிருந்து அழாமல் வெளியேறுங்கள் என அவர் எங்களைப் பார்த்து கூறுகிறார்.அப்படி என்றால் எதிர்காலத்தில் அவர் எப்படி ராஜாவாக முடியும் என்று பார்ப்போம் எனத் தெரிவித்தார்.

1 comment:

  1. ஆட்சிக்கு என்ன அரசாங்கம் வந்தாலும் இந்த ராஜாக்கள் இந்த நாட்டில் களவாடிய மக்களின் சொத்துக்களை அப்படியே துருவி எடுத்து அரசாங்கத் திறைசேரியில் சேர்க்கும் ஒரு திட்டத்தை துரிதமாக முன்வைக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.