Header Ads



இலங்கையில் ஒமிக்ரான் அலை ஏற்படும் அபாயம் - விசேட வைத்தியர்கள் சங்கம்


கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு பரவுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் அடுத்த சில வாரங்களில் இலங்கையில் பாரிய தொற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக விசேட வைத்தியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் டொக்டர் லக்குமார் பெர்னாண்டோ, செயலாளரும் சிறப்பு வைத்தியருமான ஆர். ஞானசேகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மாறுபாடுகளை அடையாளம் காணும் திறன் குறைவாக இருந்தாலும், நாட்டில் ஏற்கெனவே 47 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இது டெல்டா மாறுபாட்டை விட அதிகமாகப் பரவுவதாகத் தோன்றுகிறது என்று சங்கம் குறி
ப்பிடுகிறது.

இதன் விளைவாக, பூஸ்டர் டோஸ்கள் உடனடியாக பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் சரியான சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் மாறுபாடு நாட்டில் பரவிக்கொண்டிருந்தாலும் பண்டிகைக் காலங்களில் கடைகள், பார்கள், இரவு விடுதிகள், டிசெம்பர் 31 இரவு போன்றவற்றில் ஏற்பட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தொற்றுநோய்களின் பெரும் அலை தவிர்க்க முடியாதது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் பல பகுதிகளிலும் வேகமாகப் பரவிவரும் ஒமிக்ரான் மாறுபாடு,  இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த டெல்டா வகையை விஞ்சி பரவுவதற்கான அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அது நாட்டின் சுகாதார அமைப்பையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.