Header Ads



முஸ்லிம்களை குறிவைத்து தடை...! கலாசார ஆடைகளை அணிவது தவறா..? திருகோணமலையில் அநீதி


திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோணேசர் ஆலய வளாகத்திற்கு உள்நுழையும் வாயிலில் போடப்பட்டிருக்கும் அறிவித்தல் பலகை இது.

கோணேசர் ஆலயத்தை வழிபட செல்பவர்களை தாண்டி, அந்த வரலாற்றுச் சின்னங்களையும் அதன் இயற்கை வனப்பையும் பார்க்க செல்லும் பல்வேறு மதங்களை பின்பற்றும் பலரும் ஏன் மத நம்பிக்கையற்ற நாஸ்திகர்கள் கூட சென்று வரும் இடம் இது.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தத்தமது மத, கலாச்சார உடைகளை அணிந்து வருகின்றனர் இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இஸ்லாமிய கலாசார ஆடைகளை அணிந்து வருவது மட்டும் ஏன் தடை செய்யப்படுகிறது என்பது புரியவில்லை.

இவ்வாறான ஆடைகளை அணிந்து ஆலயத்திற்குள் செல்வதை தடை செய்தால் பரவாயில்லை, ஆனால்,, ஆலய வளாகத்திற்குள் செல்வதையே தடைசெய்வது எந்த விதத்தில் நியாயம்?

நேற்று நான் அங்கு சென்ற சமயம் போயா தினம் என்பதால் பல பௌத்த மத சகோதரர்கள் தமது கலாச்சார ஆடைகளுடன் வந்திருந்தனர் அவர்கள் ஆலயத்திற்கு உள்ளே போய் வருவதையும் அவதானிக்க முடிந்தது.

மூவின மக்களும் இணைந்து வாழும் திருகோணமலை போன்ற பிரதேசங்களில் இவ்வாறான சிறு விடயங்கள் சமூகங்களுக்கிடையே பாரிய விரிசலை ஏற்படுத்தும் என்பதற்காகவே இந்தப் பதிவை இடுகிறேன்.

முடியுமான நண்பர்கள் இந்தப் பதிவை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள்

Sangama Hisham

8 comments:

  1. OMG. New new design restrictions, it shows srilanka will not develop for more 100 years. Rather than finding way to reconciliation and harmony we are newly inventing Road to how we can be separated and cornered each other.

    ReplyDelete
  2. இலங்கை பல்லின, பல மத,கலாசாரங்கள் கொண்ட நாடு. இங்கு எந்த மதத்தினரும் அவரவர்களுடைய கலாசார உடையுடன்,மதஸ்தலங்களில் சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளமை இலங்கை சட்டயாப்பின் ஒரு அம்சமாகும். எனவே, நாட்டின் சட்டத்தை மதித்து அவற்றை உரிய முறையில் பின்பற்றுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்புமாகும். அதற்கு மாற்றமாக அரை நிர்வாணமாக அல்லது அதைவிடக் கேவலமான முறையில் ஆடையணிந்து யாரும் எந்த மதஸ்தலங்களிலும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் இதுவும் இலங்கையின் சட்டமாகும்.

    ReplyDelete
  3. இந்த இனத்துவேசிகளோடு எப்படி இனைந்து ஒரு காரியத்தை பார்ப்பது.முனாபிக்குகள் உள்ளொன்று புறமொன்று வெளியே எதைப் பேசினாலும் உள்ளுக்குள் நெருப்பை வைத்துக் கொண்டு தான் செயல் படுகின்றனர் இது எல்லாம் எங்களுக்கு எச்சரிக்கை கவனமாக செயல்பட வேண்டும்

    ReplyDelete
  4. Burqa is banned in SriLanka. You can't anywhere in SL with Burqa

    ReplyDelete
  5. Burqa is banned in SriLanka. You can't anywhere in SL with Burqa

    ReplyDelete
  6. நிறுவனத்தின் விட்டுத்தள்ளுங்களேன் 🤝

    ReplyDelete
  7. MR Anush,
    when burqa is banned? where its banned?

    ReplyDelete

Powered by Blogger.