Header Ads



ஆட்டோவில் வீடு திரும்பிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் - நாளை முதல் தனது பணி ஆரம்பம் என்கிறார்


இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, தனக்கு வழங்கப்பட்ட சொகுசு வாகனங்கள் அனைத்தையும் கையளித்து விட்டு முச்சக்கர வண்டியில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார்.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அதிரடியாக பதவி நீக்கியிருந்தார். அண்மைய நாட்களாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை சுசில் பிரேமஜயந்த கடுமையாக விமர்சித்து வந்தார்.

இதனையடுத்து அவர் இன்று பதவி நீக்கப்பட்டிருந்தார். இதனிடையே, பதவி நீக்கம் செய்யப்பட்டமையானது தனது அரசியல் எதிர்காலத்திற்கு கிடைத்த வரம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

2

தான் சில நாட்களுக்கு முன் எடுத்த சீட்டிழுப்பில் தற்போது வெற்றி பெற்றுள்ளதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தாம் நாளை முதல் தனது பணியை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இன்று (04) காலை கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு அமைச்சில் இருந்து வெளியேறிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

2 comments:

  1. PRESIDENT IS GOING TO APPOINT S.B.DISSNAYAKE IN PLACE OF SUSIL PREAMJAYNTHA.THIS PLACE SHOULD HAVE BEEN GIVEN TO GUARDIAN GOD OF BATTICALOA DR.HARRIS OR EASTERN LION OF BATTICALOA NAZEER AHAMED.

    ReplyDelete
  2. உண்மை யான உரோசம் இவருக்கு இருக்கிறது. மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப் அவர்களுக்கு பிறகு உண்மையில் இதய சுத்தியுடன் இப்படி நம்மவர்கள் யாரும் செய்யாத இராஜினாமா. பாராட்டபடவேண்டியவர்.

    ReplyDelete

Powered by Blogger.