Header Ads



ஆட்சியாளர்கள் சுகபோகம் - மக்கள் வீதிகளில் வரிசைகளில் நின்று துன்பம் அனுபவிப்பு - எதிர்க்கட்சி தலைவர்


இரண்டு வருடங்களுக்கு முன்பு இருமுறை மக்கள் வழங்கிய தீர்ப்புகளில் தான் பின்னடைந்ததாகவும் துரதிஷ்ட வசமாக  அதன் விளைவை  எதிர்கொள்ள வேண்டிய நிலை அப்பாவி மக்களுக்கே ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சஜித் பிரேமதாச இன்று(15) இரத்தினபுரியில் நடைபெற்ற ஐக்கிய    ஒழுங்கமைப்பு படையணியின் மாநாட்டில் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

மக்கள் வழங்கிய மாற்றத்தின் ஊடாக ஆட்சியாளர்களுக்கு எந்த நட்டமும் ஏற்படவில்லை என்று தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், அவர்கள் சுகபோகங்களை அனுபவித்து வருவதாகவும் மக்கள் வீதிகளில் வரிசைகளில் நின்று துன்பத்தையும் துயரத்தையும் அனுபவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கத்தின் பொருளாதார வழிமுறை தவறானது என உலக பொருளாதார நிபுணர்கள் கூறும் போது அரசாங்கம் அதனை ஒருபோதும் கணக்கில் எடுக்கவில்லை என்றும் தொடர்ந்தும் தவறான பாதையில் பயணித்ததின் ஊடாக கடன் மீள்வழங்கல் தரப்படுத்தலில் இலங்கை பின்னடைவை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் இதன் காரணமாக உலகில் எந்த நாட்டில் இருந்தும் கடன் பெற முடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

தற்போது உலக தரப்படுத்தல்களில் இலங்கை கீழ் மட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் நாட்டுக்கு எந்தவொரு முதலீட்டாளர்களும் வரமாட்டார்கள் என்றும் குறைந்த வட்டிக்கு கடன் பெறமுடியாத நிலை உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன் இவ்வாறான நிலையில் அத்தியாவசிய மருந்துகள்,உணவுகள்,தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வீரமிக்க அரசாங்கத்தின்  அமைச்சர்கள் தான் செய்வது என்னவென்று கூட தெரியாமல் செயற்படுவதாகவும் தற்போது நாட்டை இருளுக்குள் மூழ்கடிக்கவே குறித்த அமைச்சர்களினால் முடிந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.