Header Ads



ஆங்கிலேயரின் காலத்தில் கூட அனுபவிக்காத கஷ்டங்கள் - நாட்டைக் காப்பாற்ற புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்


நாடு எதிர்கொண்டுள்ள சிக்கலான நிலமையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

தற்போதைய அரசாங்கம் கூட்டு அரசாங்கம் எனவும் பாராளுமன்றத்தில் மூன்றாவது பிரதான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீள முடியாத ஒரு நிலைக்குச் சென்றுவிட்டதாக சிலர் கருதினாலும், அவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்ததுள்ளார். 

1977 ஆம் ஆண்டு தேர்தலிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அரசாங்கம் 2022 ஆம் ஆண்டிலாவது மக்களின் குறைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை முன்னெடுத்தால் மாத்திரமே வரப்போகும் ஆபத்தை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

விவாசாயிகள் தற்போது அனுபவிக்கும் கஷ்டங்களை போன்று ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் கூட அனுபவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


1 comment:

  1. போர்த்துக்கேயர் காலத்தில் கூட ஏற்படாத அக்கிரமம் உங்க காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த நாட்டில் ரணில் பிரதமர் ஆக இருந்தபோது ஏற்பட்டதே. இதை எப்படி நீங்கள் முஸ்லிம்கள் வாக்கு பெற்ற நிலையில் ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி ஆக இருந்தீர்கள்? இந்திய உளவு பிரிவின் அக்கிரம வேலையை உலகிற்கு வெளிப்படுத்தாமல் உண்மையான விடயத்தை ஏன் மறைக்க வேண்டும்?

    ReplyDelete

Powered by Blogger.