Header Ads



கிண்ணியா படகு விபத்தில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சஜித் நிதியுதவி


நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனில் எதிர்கால பார்வை கொண்ட திட்டங்கள் அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு.

அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்,மிகவும் உணர்திறன் வாய்ந்த தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அது தொடர்பாக கவனம் சொலுத்தப்படாத போது பேரிழப்பே ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

பல உயிர்களை காவு கொண்ட கிண்ணியா பாலத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் அவ்வாறே உள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது "இருபதாவது திருத்தத்தின் பாலம்" என்றும் தெரிவித்தார்.

கிண்ணியா குறஞ்சாக்கேணி கலப்பில் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (04) நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 

இந் நாட்களில் வடக்கு,கிழக்கில் ''பிரபஞ்சம்” நிகழ்ச்சித் திட்டம், “ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மூச்சு’ நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சித் தொடரின் போதே அவர் இந் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

அன்மையில் இடம் பெற்ற படகு விபத்தில் பலர் உயிரிழந்தனர் என்பதோடு மற்றும் பலர் காயமடைந்தனர் என்பதும் நினைவு கூரத்தக்கது.


No comments

Powered by Blogger.