Header Ads



முஸ்லிம் பிள்ளைகள் இப்படித்தான் நடப்பார்களா என்ற கேள்வி எழக்கூடாது, ஆண்கள் எங்கே போய் விட்டார்கள்..?


- இக்பால் அலி -

முஸ்லிம்  சமூகத்தின்  பல சவால்களை   வெற்றி கொள்ளக் ஆண் மார்கள் கட்டாயம் படித்து பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்று முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தெரிவித்தார்

அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஒன்றியத்தின் பொதுக் கூட்டமும் சமூகச் செயற்பாட்டார்களுக்கான விருது வழங்குநிகழ்வு கொலன்னாவ  நாஸ் மண்டபத்தில் இடம்பெற்றது அந்நிகழ்வில் கலந்து கொண்ட முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

உண்மையிலேயே நாங்கள் அண்மைக்காலமாக மிக நெருக்கடியான ஒரு கால கட்டத்திலேயே வாழ்கிறோம். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் உங்களுடைய ஒவ்வொரு செயலும் அவதானிக்கப்படும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள  ஒவ்வொரு செயலையும் விமர்சனத்திற்குள் உட்படுத்தப்படாமல் முஸ்லிம் பிள்ளைகள் இப்படித் தான் நடப்பார்களா என்ற கேள்வி எழுப்பப்படாத வகையில் உங்களுடைய பல்கலைக்கழக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப்பழக வேண்டும்.

நாங்கள் படிக்கும் சூழலை விட இன்று எமது சமூகத்தை கேள்விக் குறியோடு பார்க்கின்ற என்ற ஒரு சூழலிலேயே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்களது இளமைப் பருவம். அருமையான சந்தர்ப்பம் இது. உலகைக்காண்பதற்கான சந்தர்ப்பம்.

இலட்சக் கணக்கானவர்கள் பல்கலைக்கழகம் செல்ல முடியாமல் உள்ள சூழ்நிலையில் நீங்கள் பல்கலைக்கழகம் சென்று இருக்கின்றீர்கள். இலங்கையில் 35000 பேருக்குத் தான் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் தான் பல்கலைக்கழகம் நுழைய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 

அந்த வகையில் உண்மையிலேயே உங்களுக்கு மகத்தான பொறுப்பு இருக்கிறது. உங்கள் தனி வாழ்க்கையில் மட்டுமல்ல நீங்கள் இந்த சமூகத்தின் தலைவர்கள்.  எதிர்கால சமூகத்திற்கு நாங்கள் யாரை நம்புவது. எங்களுடைய தலைவர்களாக நீங்கள் தான் வர வேண்டியவர்கள். அதற்கான தகுதியைப் பெற்றுக் கொள்ளும் இடமாக பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

உண்மையில் நாங்கள் ஆரம்பத்தில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது எங்களுக்கு உதவி செய்வதற்கு அமைப்புக்கள் இருக்கவில்லை. நீங்கள் செய்ய வேண்டி அத்தனை வேலைகளுக்கும்  பொது அமைப்புக்கள் தனவந்தர்கள் இருக்கின்றார்கள். நீங்கள்  அவற்றைப்பயன்படுத்த வேண்டும். 

நான் விசேடமாக கேட்பது நீங்கள் பேசுகின்ற எழுதுகின்ற நீங்கள் சொல்லுகின்ற விடயங்களையும் மிகப் பெறுமதியாக நோக்குகின்றது. ஏதாவது ஒரு பணியை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் செய்தாக வேண்டும். எமது சமூகத்தின் அதிகளவிலான பிரச்சினைகள் இருக்கின்றன. நீங்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆலோசனையைப் பெற்று இதுதான் இந்த சமூகத்தினுடைய நிலைப்பாடு  என்று முன் வைக்க வேண்டும். 

இன்று ஆக கூடுலான சகோதரிகள் பல்கலைக்கழகம் செல்லுகின்றனர். முன்னர் ஒரு கிராமத்தில் பெண்களின் பல்கலைக்கழக நுழைவு 3 அல்லது 4 பேர்  செல்வார்கள். இன்று ஒரு கிராமத்தில் பெண்கள் நூற்றுக்கணக்கானவர்கள் செல்கின்றனர். நூற்றுக்கு 68 சத விகிதமான பெண்கள் பல்கலைக்கழகம் செல்கின்றார்கள்.  அதிலே  72 சத விகிதமான  முஸ்லிம் பெண்களாக இருக்கின்றார்கள். 

அதில் மறுபக்கம் ஆண் சகோதரர்கள் எங்கே போய் விட்டார்கள். உண்மையிலேயே   வேறு நாடுகளில் பல்கலைக்கழகங்களுக்குப் போய் படிக்கிறார்களா? ஏனைய இடங்களில் சிறு சிறு இடங்களில் தொழில்களைச் செய்து தங்களுடைய பொருளாதாரச் சுமையை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றார்களா? என்ற கேள்வி இருக்கிறது.

இ;ந்தக் காலட்டத்தில் எல்லா விடயங்களுக்கும் பெண் சகோதரிகளால் ஒரு தலைமை தாங்க முடியாது.  எங்களுடைய ஆண் சகோதரர்களிடத்தில் அறிவாற்றல் இல்லா விட்டால் நாங்கள் எப்படி எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வோம். எமது சமூகம் பல சவால்களை எதிர்நோக்கிக் கொண்டு இருக்கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் இந்த சவாலை வெற்றி கொள்ளக் கூடிய வகையில் கல்வித் துறையில் நாட்டம் கொள்வது கட்டாயமாகும். 

நீங்கள் படித்து விட்டு வெளியே வந்தால் உலகில் உங்களுக்கான பல நாடுகள் திறந்து இருக்கின்றன.  இன்று சிங்களம் இல்லாமல் நாங்கள் இந்த நாட்டில் வாழ முடியாது.  இலகுவாக எங்களுடைய விடயங்களை வென்றெடுக்க வேண்டுமாயின்  நாங்கள் சிங்களத்தையும்  கட்டாயம் படிக்க வேண்டும்;.  சர்வதேசத்தை வென்றெடுப்பதற்கு ஆங்கிலத்தைப் படிக்க வேண்டும். நாங்கள் அரபு மொழியையும் ஓரளவு பொருள் விளங்க கற்க வேண்டும் என்பது முக்கியம். 

எங்களை நாங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் தனித்து இருந்து விட வேண்டாம். மாற்று மத சகோதரர்களுடன் நல்ல உறவைப் பேணுங்கள். அது உங்களுக்கு மிகப் பிரயோசமான அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

1 comment:

  1. What the country, and also the world at large NEED today is NOT qualified people but EDUCATED people - Educated in Values in LIFE.

    The Muslims Need to Learn Islamic Values and LIVE by them. That is the ONLY Way to SUCCESS in this Life and the Hereafter.

    ReplyDelete

Powered by Blogger.