Header Ads



குப்பை மலையைப் போன்றவர்கள், சுதந்திரக் கட்சியினர் - பொதுஜன பெரமுன கடும் தாக்குதல்


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த, அனைத்து சிறு கட்சிகளும் அழிந்தே வரலாறாகும் எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னக்கோன், அக்கட்சியுடன் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றார்.

அரசாங்கத்தை அமைக்க, 70களில்   இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்தன. அதன் பின்னர் சகல கட்சிகளும் இல்லாமற் போய்விட்டன என்றார். 

நாட்டில் மிகவும் பழமையான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்தது. அக்கட்சி எங்கே? எத்தனை வருடங்கள் இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து பயணித்தன? என்றும் வினவிய அவர், கைக்கு அரவணைக்கும் பழக்கமில்லை. அழிக்கும் பழக்கம்தான் இருக்கிறது ஆகையால்,   ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தொடர்பில் கதைத்து எவ்வித பலனும் இல்லை என தெரிவித்த அவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் மீதொட்டுமுல்ல குப்பை மலையைப் போன்றவர்கள் என்றார்.

அரசியல் வாதிகளுக்கு விரக்தி ஏற்படும் போது பதவி விலகப் போவதாகத் தெரிவிப்பார்கள். ஆனால், பதவி விலக மாட்டார்கள். வீடுகளில் சிறு பிரச்சினை ஏற்படும் போது விவாகரத்து செய்வதாக தெரிவிப்பார்கள். ஆனால அவ்வாறு விவாகரத்து செய்பவர்கள் உண்மையில் எத்தனை பேர் உள்ளனர் என கேள்வி எழுப்பினார்.

No comments

Powered by Blogger.