Header Ads



18 அதிகாரிகளுடன் சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைவு - நாமல் வரவேற்றார்


இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ,  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைத்தினூடாக நாட்டை வந்தடைந்தார். 

சீன அமைச்சருடன் 18 அதிகாரிகள் அடங்கிய குழுவும் வருகை தந்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சரை வரவேற்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோர் விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சரின் விஜயம் கவனம் செலுத்துவதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை விஜயத்தின் பின்னர், நாளை பீஜிங் நோக்கி அவர் பயணமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. ஆட்சியாளரின் இரத்தஉறவினர்கள்,தாய் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள். போர்ஸிடி,ஏனைய முக்கிய கட்டடங்கள் உற்பட இன்னும் திருகோணமலை எண்ணெய்த்தாங்கிகள் உற்பட இன்னம் என்னவெல்லாம் இரத்த உறவினர்களுக்கு பங்குவைக்கப்போகின்றார்களோ பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  2. ஆட்சியாளரின் இரத்தஉறவினர்கள்,தாய் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள். போர்ஸிடி,ஏனைய முக்கிய கட்டடங்கள் உற்பட இன்னும் திருகோணமலை எண்ணெய்த்தாங்கிகள் உற்பட இன்னம் என்னவெல்லாம் இரத்த உறவினர்களுக்கு பங்குவைக்கப்போகின்றார்களோ பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.