December 04, 2021

ரணசிங்க பிரேமதாசவின் அரசியல் பயணத்தின் போது, அவருக்கு நிழலாக அவருக்கு செயற்பட்டவர் சிறிசேன குரே - இம்தியாஸ் Mp


அவர் தனது மனதில் நம்பிக்கை வைத்திருந்த தலைமையின் வெற்றிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் ஏதேனுமொரு எச்சரிக்கையை எதிர்கொண்ட போதிலும், அவரால் நிறைவேற்றப்பட்ட அர்ப்பணிப்பான பணி எனது நினைவுக்கு வருகிறது. 

ரணசிங்க பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் பிரதானியாக இவரே இருந்தார்.நாட்டின் அன்றைய நிலைமையை புரிந்து கொண்டு ,அன்றைய நடவடிக்கையில் அவரது வகிபாகத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். 

அன்று எமது நாட்டின் ஜனநாயகம் பாரதூரமான வகையில் பாதிக்கப்பட்டிருந்த நிலைமையே காணப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் கலந்துகொண்டவர்கள்  படுகொலை செய்யப்பட்டு அவர்களது சடலங்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிலைமை கூட காணப்பட்டது. படுகொலைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கையை சிறிசேன குரே வழிநடத்தினார்.

சவால்கள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொண்டு தனது அணியின் பாதுகாப்பில் விடாமுயற்சியுடன் செயல்பட்ட அவர், நம் நாட்டில் ஜனநாயக அமைப்பு நிலைத்திருப்பதற்கு ஆற்றிய விலை மதிப்பற்ற பங்களிப்பை நான் நினைவுபடுத்துகின்றேன். 

அவரது நடத்தைகளில் மதிபெண்களை இட்டுக் கொள்தற்கான முயற்சிகளை நான் எங்கும் காணவில்லை. அவர் எப்போதும் திரைக்குப் பின்னால் தனது பொறுப்புகளையும் கடமைகளையும் சரியாக நிறைவேற்றிருக்கின்றார். 

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் தலைமையின் கீழ், வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்திக்கான அமைச்சரவை அமைச்சு அவரிடம் ஒப்படைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சின் இராஜாங்க அமைச்சர் பதவிக்கு நான் தெரிவு செய்யப்பட்டேன். அமைச்சர் சிறிசேன குரேயின் கீழ் இராஜாங்க அமைச்சராக நான் பெற்ற அனுபவமும் எனது அரசியல் வாழ்க்கைக்கு பலமாக அமைந்தது.


அன்றைய காலகட்டத்தில் இருந்த பல இராஜாங்க அமைச்சர்கள் தங்கள் அமைச்சரவை அமைச்சர்களை கையாள்வதில் இருந்த சிரமங்களையும், முரண்பாடுகளையும், ஏமாற்றங்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் எனது அமைச்சருடனான எனது தொடர்புகளில் அவ்வாறான விரும்பத்தகாத அனுபவங்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படவில்லை என்பதை நான் நேர்மையாகக் குறிப்பிடுகிறேன்.

அவர் தன்னுடன் பணியாற்றும் அரசியல் சகாக்களுக்கு பொறுப்புகளை ஒப்படைத்து அவர்களின் சாதனைகளுக்கு பெருமை சேர்க்கும் அளவுக்கு பணிவானவர். பல்வேறு நடவடிக்கைகளுக்கு தகுந்த அதிகாரிகளை கண்டறிந்து, அவர்களுக்கு பொறுப்புகளை வழங்குதல் மற்றும் தேவையான வசதிகளை வழங்குதல், அவர்கள் சரியானதைச் செய்யும்போது உயர் நிர்வாகத்தின் மத்தியில் அவர்களுக்கு மதிப்பினைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் செயற்பட்டுள்ளார். 

தன் தலைவரிடம் கூட சொல்ல வேண்டியதை நேரடியாகச் சொல்லும் வலிமை அவருக்கு இருந்தது. தலைமையும் அவரது நம்பகத்தன்மையை நன்கு உணர்ந்திருந்தது.

சிறிசேன குரே அவர்கள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் வாழ்நாளில் மகிழ்ச்சியான தருணங்களைப் போலவே சோகமான தருணங்களிலும் உற்ற நண்பராகவும் இருந்தார். அத்தகைய பார்வை தற்போது அரிதாகவே உள்ளது. குறிப்பாக அரசியலில் இத்தகைய பார்வை அரிதாகவே உள்ளது.

அவர் நம்பிய கொள்கைகள் மற்றும் அவர் நம்பிய தலைமைத்துவத்துடன் அவர் மேற்கொண்ட பயணம் அரசியலில் எமக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்தது.

அவரது மறைவால் துக்கத்தில் இருக்கும் அவரது அன்பான பிள்ளைகளுக்கும்,   பேரக்குழந்தைகள் உட்பட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் Mp

0 கருத்துரைகள்:

Post a Comment