Header Ads



இலங்கையின் முன்னாள் அரச தலைவர்கள் எப்படியெல்லாம் அழைக்கப்பட்டார்கள் தெரியுமா..? ஆளும் கட்சி உறுப்பினரின் ஆச்சரியமிக்க வர்ணிப்பு

நாட்டுக்கு எப்படியான நன்மையை செய்தாலும் அந்த நன்மை பற்றி கேட்க வேண்டுமாயின் அதனை செய்தவர் மரணிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

உயிருடன் இருக்கும் காலத்தில் ஒருவர் எவ்வளவு நன்மைகளை செய்தாலும் அது பேசப்படுவதில்லை எனவும் கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் மாத்தளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கருத்து வெளியிடும் போதே தென்னகோன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் முன்னாள் தலைவர்கள் நாட்டுக்கு எத்தனையோ நன்மைகளை செய்திருந்தாலும்


மக்கள் அவர்களை அவதூறுக்கும் கேலிக்கும் உள்ளாக்கினர். சி.டப்ளியூ. கன்னங்கர இலவச கல்வியின் தந்தை. அவருக்கு தற்போது மலர் அஞ்சலி செலுத்தி வணங்கிறோம்.

எனினும் அவர் நாடாளுமன்றத்தில் இலவச கல்வி தொடர்பான சட்டத்தை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் நடந்த தேர்தலில் தோற்றுப் போனார். நாட்டு மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பினர்.

கலுகல்ல என்பவர் நாட்டுக்காக முதலில் கப்பலை கொள்வனவு செய்தவர், அவருக்கு கிடைத்த பெயர் கப்பல் திருடன். சிறிமாவே பண்டாரநாயக்க காணி சீர்த்திருந்த சட்டத்தை கொண்டு வந்து, காணிகள் இல்லாத வறிய மக்களுக்கு காணிகளை வழங்கினார். அவருக்கு இட்டப் பெயர் பிந்து குமாரி, காணி கொள்ளைக்காரி.

காமனி திஸாநாயக்க மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்தார். அவருக்கு கிடைத்த பெயர் மகாவலி திருடன்.

மகிந்த போரை வெற்றிக்கொண்டார், வீதிகளை நிர்மாணித்தார். அவருக்கு கிடைத்த பெயர் மகிந்த திருடன்.

எமது நாட்டில் நற்பெயர் கிடைக்க வேண்டுமாயின் தலைவரோ நபரோ இறந்தே ஆக வேண்டும். உயிருடன் இருக்கும் வரையில் திருடன், மோசடிக்காரன், கொலைகாரன் என அவதூறுக்கு உட்படுத்தும் நாடு இது. அனாகாரிக தர்மபாலவுக்கு சிலையை நிர்மாணித்து நினைவஞ்சலிகளை நடத்துகிறோம்.

உயிருடன் இருக்கும் போது நாட்டையையும் கைவிட்டு சென்று விட்டார். நாடு இருக்கும் திசையில் தலைவைத்து உறங்கவும் விரும்பவில்லை எனக் கூறினார்.

இப்படியான சமூக நிலைமையே நாட்டில் காணப்படுகிறது. இவை நாம் உருவாக்கிக்கொண்டவை எனவும் பிரமித்த தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.