Header Ads



பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், இலங்கையர்கள் எதிர்ப்பை வெளியிடக்கூடும் - மேர்வின் எச்சரிக்கை


பாகிஸ்தானின் சியால்கொட்டில் இலங்கையரை படுகொலை செய்த நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமானமற்ற வகையில் பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தக் பாதகச்செயலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இந்த கொலை வழக்கு நீண்டு கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி இடமளிக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் இலங்கை மக்கள் அதற்கான எதிர்ப்பை வெளியிடக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மக்கள் பொறுமையுடன் இருக்கின்றார்கள் எனவும் அது பாராட்டுக்குரியது எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. Does he mean the people of Sri lanka will invade Pakistan to take revenge?

    ReplyDelete
  2. ​செத்த பாம்பு தலையாட்ட முயற்சி செய்வதாகத் தெரிகின்றது. புதைத்துவிட வேணடியவர்கள் அதனை பாதையில் அப்படியே விட்டு வைத்தது தான் மக்கள் செய்த தவறு.

    ReplyDelete
  3. பயங்கரவாத நாடான பாக்கிஸ்தானில் இப்படியான கொலைகள் தினசரி நடப்பவை தான்

    ReplyDelete
  4. they dont practice "wal laws" your respectful country people can kill foreigners and gang rape their wives then sit in parliament to make the country also as Mp. did that country people people protest for this against your country or a single tweet on social media? bcos they are in very hight of human revolution, since you are yet in 17th centuary. fortunatly british ruled this country since 1948 atleast, if they were not, imagine how this country would be.. like amazon tribes or the andaman island tribes...
    pakistan will punnish the suspects very soon, may be with in a month. unlike srilankan law (wal law) system

    ReplyDelete
  5. போடா லூசா 22 கோடி அப்பு 22 கோடி

    ReplyDelete

Powered by Blogger.