Header Ads



யொஹானிக்கு காணி, பிரதமர் மஹிந்த முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம்


சர்வதேச ரீதியாக இலங்கைக்குப் புகழ் சேர்த்த பிரபல பாடகி யொஹானி டி சில்வாவை பாராட்ட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், பாராளுமன்றத்திலும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், 9.68 பேர்ச்சர்ஸ் காணித்துண்டொன்றை யொஹானி டி சில்வாவுக்கு அரசாங்கத்தால் பரிசாக வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பத்தரமுல்ல ரொபர்ட் குணவர்த்தன வீதியில் அமைந்துள்ள காணி , யொஹானி டி சில்வாவுக்கு வழங்கப்படவுள்ளது.

இது,  1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கட் குழுவுக்கு 99 வருடகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள காணித்துண்டுகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள இடமாகும்.

புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


No comments

Powered by Blogger.