Header Ads



பசில் ராஜபக்ஷ பிரதமரானவுடன் பிரச்சினைகளைத் தீர்ப்பார் என சிலர் எதிர்பார்த்துள்ளனர்


பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிலிருந்து வந்தவுடன் அவரை, நிதியமைச்சராக்கி எரிபொருள் விலையைக் குறைப்பதாக அரசாங்கத்தின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட போதிலும் அவ்வாறு இடம்பெறவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு சென்று நிதியமைச்சராக்கி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எதிர்பார்த்தனர். ஆனால் 5 மாதங்களின் பின்னர் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்தது.

விலை அதிகரிக்கும்போது மற்றுமொரு தடவையும் அவர் இலங்கையில் இல்லை.

இந்நிலையில் தற்போது இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஓய்வு பெற்றதன் பின்னர், பிரதமர் பதவிக்குச் சத்திய பிரமாணம் ஏற்பதற்காக அவர் மீண்டும் இலங்கைக்கு வருவார் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ஷ பிரதமரானதுடன் இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பார் என சிலர் எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.