Header Ads



தௌபீக்கை தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து உடனடியாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை


வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மற்றைய பாராளுமன்ற உறுப்பினரையும் கட்சியில் அவர் வகித்த பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது வாசிப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த எம்.எஸ். தௌபீக்கை தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து உடனடியாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க விளக்கம் கோரப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர் நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.