Header Ads



டீ விற்பனையை நிறுத்த தீர்மானம்


பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக பால் தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

உணவகங்களில் டின் பாலை பயன்படுத்தி பால் தேநீர் தயாரிக்க உத்தேசித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

பால் மாவின் விலை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ஒரு கோப்பை பால் தேநீரின் விலையும் அதிகரிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு மேலும் சுமை ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சம்பத் கூறியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் பால் மா பொதியின் விலையை 150 ரூபாயாலும், 400 கிராம் பொதியின் விலையை 60 ரூபாயாலும் உயர்த்துவதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, 400 கிராம் பாக்கெட்டின் புதிய விலை ரூ.540 ஆகவும், 1 கிலோகிராம் பொதியின் விலை ரூ.1,345 ஆகவும் உயரும்.

No comments

Powered by Blogger.