Header Ads



இலங்கையரின் படுகொலை குறித்து, பாக்கிஸ்தானிலிருந்து ஒரு குரல்


பாக்கிஸ்தானில் நேற்று (03) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கையர்களின் உணர்வுகளை பாக்கிஸ்தான் மக்கள் பகிர்ந்துகொள்கின்றனர் என தெரிவித்துள்ள அந்த நாட்டின் பத்திரிகையாளர் வஹாப் ஜட்எக்ஸ் இஸ்லாமிய மதத்தில் இவ்வாறான கொலைகளிற்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்

டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

அன்பான இலங்கையர்களே உங்களின் துயரம் ஏமாற்றம் விரக்தி உட்பட அனைத்து உணர்வுகளையும் நாங்கள் தற்போது பகிர்ந்துகொள்கின்றோம்- உணர்கின்றோம்

நாங்கள் தற்போது மிகவும் துன்பகரமான தருணத்தில் இருக்கின்றோம்.

உங்கள் ஏமாற்றத்தையும் விரக்தியையும் துயரத்தையும் பகிர்ந்துகொள்ளும் நிலையி;ல் உள்ள பலரின் அன்பை நீங்கள் உணரும் நிலையில் இருப்பீர்கள் என நாங்கள் நம்புகின்றோம்.

எங்கள் மதம்வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சகிப்புதன்மையை போதிக்கின்றது.

இஸ்லாம் என்பது அமைதியின் மார்க்கம்.

தனியொருவரை கொலை செய்வது என்பது மனித குலத்தை கொலை செய்வதற்கு ஒப்பானது.

இவ்வாறான ஈவிரக்கமற்ற தன்மைக்கு எந்த இடமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. உண்மை தெரிய வருமாயின் இந்தியா முழுவதும் நெருப்பு பற்றி எரியும். ஆனால் ஏப்ரல் தாக்குதல் போல உண்மை தெரிந்தும் உலகம் அதை அலட்சியம் செய்யுமாயின் கொரோனா மட்டும் அல்ல நரகமே உலகை காப்பாற்ற வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.