Header Ads



பாகிஸ்தானில் இலங்கை நபர் அநியாயமாகப் படுகொலை - முஸ்லிம் சமூகம் மிக அவதானமாகவே செயற்பட வேண்டியுள்ளது


(குறித்த சடலம் இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் அது தகனம் செய்யப்படுகின்ற வரை எமது இலங்கை முஸ்லிம் சமூகம் மிகவும் அவதானமாகவே செயற்பட வேண்டியுள்ளது). 

உண்மையில் குறித்த நபர் அடித்துத் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட பின்பே எரியூட்டப்பட்டுள்ளார். 

அது மிகவும் கொடூரமான கொலையாகும். அதனை சில வார்த்தைகளில் அடக்கி விட முடியாது. 

குறித்த கொடூரச் செயலுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். 

குறித்த செயலால் பிராந்தியத்தில்   பாகிஸ்தான் மீது விரல் நீட்டப்படுகின்ற அதே அளவு அல்லது அதை விடவும் அதிகமாக இஸ்லாத்தின் மீது வெறுப்புற்றிருக்கும்   பேறினவாதிகளால்  இஸ்லாத்தின் மீது  விரல் நீட்டப்பட்டு வருகின்றது. 

இந்தியாவின் ஒரு முக்கிய இராஜதந்திரி பாகிஸ்தான் சென்ற வேலை  பாகிஸ்தானியர்கள் அவரைச் சித்திரவதைக்கு உற்படுத்தி, கொடூரமாக கொலை செய்து விட்டால் எப்படியிருக்குமோ அதனை ஒத்ததாகவே இந்தியாவின்  இந்துத்துவத் தீவிரவாதம்  குறித்த இலங்கை நபர் பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டதை சித்தரித்து, தொடர்ந்தும் செய்தி வெளியிட்டு வருகின்றது. 

மறுபுரம் குறித்த சடலத்தை வைத்து அரசியல் இலாபம் அடையவும், இலங்கை முஸ்லிம் சமூகத்தை சீண்டிப் பார்க்கவும், இஸ்லாத்திற்கு சேறு பூசவும் இலங்கைப் பேரினவாதம் கடும் எத்தனிப்புக்களைச் செய்து வருவதாகத் தெரிக்கின்றது.  

குறித்த படுகொலை விடையத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அவரின் அரசு மற்றும் அங்குள்ள பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகள் மிகவும் திருப்பதிகரமாகவுள்ளன. 

படுகொலையுடன் ஏதேனுமொரு வகையில் சம்பந்தப்பட்டார்கள் என்ற காரணத்திற்காக பாகிஸ்தான் காவல் துறையினால் இதுவரை 230 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 13 பேர் கடும் குற்றவாளிகளாக இனங்கானப்பட்டுள்ளனர். தலைமறைவாகி இருந்த மிகப் பிரதான குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான் பிரதமர் இலங்கை உயர் மட்டத்துடன் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்திருப்பதுடன் குறித்த படுகொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்குத் தேவையான, பிள்ளைகளின் கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.  படுகொலை இடம்பெற்ற தினத்தை முழு பாகிஸ்தானுக்கும் வெட்ககரமான தினமாகும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்திருந்தார்.  மேலும் குறித்த படுகொலை செய்யப்பட்டவரைத் தனியாளாக நின்று காப்பாற்றப் போராடிய பாகிஸ்தான் நபருக்கு   பாகிஸ்தான் அரசினால்  வழங்கப்படுகின்ற இரண்டாவது அதி உயர் விருது வழங்கப்படவுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

06இற்கும்  மேற்பட்ட பாகிஸ்தானிய சிவில் சமூக அமைப்புக்கள் அந்நாட்டின் முக்கிய சில நகரங்களில்  Sorry Sri Lanka   (இலங்கையிடம் மன்னிப்புக் கோறுகின்றோம்) என்ற வாசகத்தை ஏந்தியவர்களாக, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற முழக்கத்துடன் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பாகிஷ்தானிய வணிக சமூகமானது படுகொலை செய்யப்பட்ட இலங்கை நபரின் குடும்பத்திற்கு வழங்கவென இது வரை ஒரு இலட்சம் டொலர்களை (இலங்கை மதிப்பில் சுமார் இரண்டு கோடி பத்து இலட்சம் ரூபாய்களை) சேகரித்துள்ளது. கொலையுண்ட இலங்கை நபரின் மாதச் சம்பளத்தை அவரது மனைவி ஆயுட்கால இழப்பீடாக பாகிஸ்தானிடமிருந்து தொடர்ந்து பெறுவார் என இன்று (07. 12. 2021) பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். (அநியாயக் கொலைக் குற்றத்தின் போது கொலையுண்டவரின் குடும்பத்திற்கு கொலை செய்தவரால் வழங்கப்பட வேண்டும் என இஸ்லாம் வழியுறுத்திருக்கும் அதி கூடிய தெண்டப் பணத்தை ஒத்ததான ஒரு சிறந்த அறிவிப்பு போல் இது நோக்கப்படக் கூடும்). 

குற்றத்திற்காக வருந்தியுள்ள பாகிஸ்தான் அரசும் அந்நாட்டு மக்களும் படுகொலை விடையத்தில் தம்மாலான சிறந்த, முன்மாதிரிமிக்க பல்வேறு செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர் என்பதையே மேலே குறிப்படப்பட்ட செய்திகள் எடுத்துச் சொல்கின்றன. 

இதற்கு மேலும் இலங்கைப் பேரினவாதமும்,  இலங்கைப் பேரினவாத மீடியாக்களும் பாகிஸ்தானியர்களை ஒட்டுமொத்தமாகவும், இஸ்லாத்தைப் பொதுவாகவும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சிப்பதைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்றால் அதில் பாரிய உள்நோக்கங்கள் இருப்பதாகவே தெரிகின்றது. குறித்த சடலம் இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் அது தகனம் செய்யப்படுகின்ற வரை எமது இலங்கை முஸ்லிம் சமூகம் மிகவும் அவதானமாகவே செயற்பட வேண்டியுள்ளது.  

அள்ளாஹ் முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாப்பானாக. இஸ்லாத்தை கண்ணியப்படுத்துவானாக. எமது நாட்டில் சுபீட்சத்தையும், உலகில் அமைதியையும் ஏற்படுத்துவானாக.

ஷfபீக் zஸுபைர். 

07. 12. 2021.

2 comments:

  1. Shafeeq Zubair.
    Now irikkira tension enough.
    Please don't make more.

    ReplyDelete
  2. முதலில் இந்திய அரசின் முழு ஆசியா மீதான அத்துமீறல் அராஜக ஆட்சிக்கு எதிராக பிரார்த்தனை செய்து வாருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.