Header Ads



முஸ்லிம் கட்சிகளை தள்ளிவைக்க தீர்மானமா..? நாளை முக்கிய சந்திப்பு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நாளை (31) கொழும்பில் நடைபெறவுள்ளது.

இரா. சம்பந்தன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூட்டமைப்பின் சார்பிலும், ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்கள் மு.கா. சார்பிலும் பங்கேற்கவுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் மனோ கணேசனும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை - இந்திய ஒப்பந்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும், இதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு இந்தியா பிரயோகிக்க வேண்டும் எனக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கூட்டு ஆவணமொன்றை அனுப்பிவைப்பதற்குத் தமிழ் பேசும் கட்சிகள் முயற்சித்தன.

இதுவரை மூன்று சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. எனினும், சில அரசியல் காரணங்களால் கூட்டு ஆவணத்தில் கையொப்பமிட முஸ்லிம் கட்சிகள் இழுத்தடிப்பு செய்து வருகின்றன.

அக்கட்சிகளின் தலைவர்களுக்கு கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே நாளை ஹக்கீமை, சம்பந்தன் தரப்பு சந்திக்கவுள்ளது.

முஸ்லிம் தரப்புகள் தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யும் பட்சத்தில், தமிழ்க் கட்சிகள் மட்டும் இணைந்து கையொப்பமிடுவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. TW

3 comments:

  1. அரசு பணம்-பதவிகள் கொடுத்தால், எந்நேரமும் முஸ்லிம் கட்சிகள் மாறிவிடுவார்கள் என்பது இலங்கை வரலாறு.

    எனவே வடகிழக்கு-மலையக தமிழ் கட்சிகள் மட்டும் கையெழுத்து வைத்தால் போதுமானது.

    ReplyDelete
  2. இந்த நயவஞ்சகதனமான சூழ்ச்சி கூட்டணியை விட்டு முஸ்லிம்கள் உடனடியாக விலகிக்கொள்ள வேண்டும். இந்தியா என்பது ஒரு கேவலமான நாடு. அதனால் என்றுமே முஸ்லிம்களுக்கு நியாயமான தீர்வை வழங்க முடியாது.இந்த தமிழ் இனவாதிகள் முஸ்லிம்களை ஏதோ முட்டாள்கள் என்று எண்ணிக்கொண்டு வடக்கு கிழக்கு இரண்டையும் விழுங்கப்பார்கின்றார்கள். முஸ்லிம்கள் விழிப்போடு செய்யற்பட வேண்டும். ஆயிரக்கனக்கான முஸ்லிம்களை கொன்று குவத்த கடும்போக்கு இந்து மத தீவிரவாத நாய்கள் ஆட்சி செய்யும் இந்தியாவிடம் முஸ்லிம்கள் நியாயத்தை எதிர்பார்ப்பது பாம்பிடம் பாசத்தை எதிர்பார்ப்பதை போன்றதாகும்

    ReplyDelete
  3. இலங்கையின் ஏனைய இரண்டு சமூகங்களை மட்டுமன்றி கிழக்கு தமிழர்களையும் மிதித்து அன்றைய ஐரோப்பிய ஆட்சியாளர்களது எலும்புத் துண்டுகளுக்காக இடம்பெற்ற காட்டிக் கொடுப்புக்கு இணையாக இந்தியாவுக்கு கூட்டிக் கொடுக்கும் செயலை இன்றைய சம்பந்தன் கூட்டணி ஹக்கீமுடன் இணைந்து அரங்கேற்றப் பார்க்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.