Header Ads



பிரியந்த குமார கொலை: விசாரணையை துரிதமாக்க நீதிபதி உத்தரவு - சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராக வேண்டாம் என அறிக்கை


பிரியந்த குமார தியவடனவின் கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர்கள் 85 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து, அதன் அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கடந்த செவ்வாய்க்கிழமை (28) லாஹூர் மேல் நீதிமன்றம் சியல்கோட் மாவட்ட பொலிஸாருக்கு உத்தரவிட்டது.

கடும்போக்குவாத இஸ்லாமிய கட்சியான TLP கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட 800 பேரால், கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி சியல்கோட்டிலுள்ள தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தி, அதன் பொது முகாமையாளராக கடமையாற்றிய 49 வயதான பிரியந்த குமாரவை கொடூரமாகக் கொலை செய்தனர்.

பிரியந்த குமாரவை கொலை செய்யும் காணொளியை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், மேலும் நூற்றுக்கு மேற்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராக வேண்டாம் என சியல்கோட் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.