Header Ads



நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரு குழுவிடம், அரசாங்கத்தை ஒப்படைத்து விட்டு வெளியேறுவது தான் தயங்காது மேற்கொள்ள வேண்டியதாகும்.


நாட்டின் ஒட்டு மொத்த செயற்பாடுகளையும் நொடிக்கு கணம் அப்பட்டமாக இருண்ட பாதாளத்தை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கும் தற்போதைய அரசாங்கம்,

மேற்கொண்டு இந்த நாட்டை மேலும் பாதுகாப்பதற்கான எந்தவொரு திறமையுமோ விருப்பமோ இல்லை என்பதை இந்த குறுகிய காலத்தில் தேவைக்கு அதிகமாகவே அரசாங்கத்தாலயே நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் நமது நாட்டை எத்தளவு அவல நிலைக்குத் தள்ளியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள,இவர்களது ஆட்சியின் ஒரு வருடத்திற்கு மேல் மட்டுமல்ல,இந்த ஒரு வார,இரண்டு வார காலப் பேரழிவுகளே போதுமானதாகும்.

⏺ மின்சாரம் இல்லாத, தண்ணீர் இல்லாத, எரிவாயு இல்லாத,இத்தனைக்கும் மத்தியில் இந்த அரசாங்கம் ஒரு துரதிஷ்டமான தலைவிதியை நாட்டில் மீதப்படுத்தியுள்ளது.

⏺ எல்லையற்ற விதமாக பணவீக்கம் உயர்ந்தது, மூவேளை சாப்பிடுவதற்குப் பதிலாக ஒரு வேளையாவது உண்ண முடியாது என்ற அளவுக்கு,தாங்க முடியாத வாழ்க்கைச் செலவில் தவிக்கும் நாட்டை தற்போதைய அரசாங்கம் விட்டுச் சென்றிருக்கிறது.

⏺ கல்வி வீழ்ச்சியடைந்து,குழந்தைகளின் எதிர்காலத்தை இருள் சூழ்ந்ததாக ஆக்கி, இளைய தலைமுறையின் கனவுகளை எல்லாம் சிதைத்து,வேலையின்மை சார்ந்த மன அழுத்தம் மற்றும் அமைதியின்மை ஆகியவற்றால் ஆளப்படும் சமூகத்தை தற்போதைய அரசாங்கம் விட்டுச் சென்றுள்ளது.

⏺ தேசிய பாதுகாப்பு தொடர்பாக பெருமையாகப் பேசி பதவிக்கு வந்த அரசாங்கம், சுகாதார பாதுகாப்பான முறையில் கேஸ் சிலிண்டரைக் கூட பொதுமக்களுக்கு வழங்க முடியாத நிலைக்கு நாடு ஆளாக்கப்பட்டுள்ளது என்பதோடு, இந்த அரசாங்கம் நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கையை எந்தளவு சீரழித்துள்ளது என்பதன் அளவை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

⏺ எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவுகளால் இந் நாட்டின் ஒட்டுமொத்த விவசாயமும் பெரும் பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது என்பதோடு, அரசாங்கம் வேண்டுமென்றே பஞ்சத்தின் பக்கம் கையைக் காட்டியுள்ளது.

⏺ சிறிய மற்றும் நடுத்தர  தொழில்முனைவோர் முதல் மாபெரும் தொழில்முனைவோர் மற்றும் வியாபாரிகள் வரை இருண்ட எதிர்காலத்திற்கு முன்னறிவிப்புச் செய்த வன்னம்,அவற்றைத் தீர்ப்பதில் அரசாங்கத்திற்கு எத்தகைய அக்கறையும் இல்லை போன்று செயற்படுகிறது.

⏺ அனைத்து அரச ஊழியர்களும்,தனியார் துறை ஊழியர்களும், நாளாந்த கூலித் தொழிலாளர்கள் உட்பட ஒட்டுமொத்த முழு தலைமுறையினரையும் விரக்தியில் தள்ளும் துரதிர்ஷ்டவசமான சகாப்தத்தை தற்போதைய அரசாங்கம் நாட்டிற்கு விட்டுச் சென்றுள்ளது.

⏺ இன்றளவில் நாடு முழுவதும் வரிசைகளின் சகாப்தம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதோடு, மறுபுறம், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பதினான்காயிரத்தைத் தாண்டும் நிலையை நாடு எட்டியுள்ளது.

⏺ ஆரம்பத்திலிருந்தே நாம் விடுத்த அனைத்து முன் எச்சரிக்கைகளையும் அரசாங்கம் பொருட்படுத்தாமலயே ஆபத்தை நாட்டிற்குள் கொண்டு வந்தது.

⏺ நாட்டு மக்களின் உயிருடன் விளையாடும் அரசாங்கம், தனது நெருங்கிய நண்பர்களின் பாதுகாப்பிற்காக இடைவிடாது முன் நிற்கும் அதே வேளை,சிறிய கும்பலுக்காக ஒட்டுமொத்த நாட்டின் எதிர்காலமும் பலிகடாக ஆக்கப்பட்டுள்ளது.

⏺ வெளிநாட்டு சக்திகள் நாட்டைச் சுற்றியுள்ள கடல்களை ஆக்கிரமிப்பதன் மூலம் இந் நாடு விளையாட்டு மைதானமாக மாறும் வரை,கண்ணையும் காதையும் மூடிக் கொண்டிருக்கும் அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளதோடு,எக்ஸ்பிரஸ் பேர்லினால் நாட்டிற்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கோருவதற்குக் கூட அரசாங்கத்திற்கு வலிமை இல்லை.

⏺நாட்டின் ஒட்டு மொத்த முழு சுற்றுச்சூழல் அமைப்பும்,அனைத்து தேசிய வளங்களும் நண்பர்களின் நலனுக்காக, அதை அழிக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளதோடு, இந் நாட்டை பாலைவனமாக்குவதற்கான அனைத்துத் திட்டங்களையும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது

கொரோனா பேரிடல் காரணமாக பாதிக்கப்பட்ட பல நாடுகள்,தனது மக்களுக்காக குறுகிய கால,மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை தொடங்கியுள்ளது என்பதோடு,இது சார்ந்த எந்த திட்டமும் இலங்கை அரசாங்கத்திடம் காண்பதற்கு இல்லை. மாறாக தினமும் சில தலைப்புகளை முன்னிலைப்படுத்தி 'அன்றைய நாளுக்கான' திட்டத்தை மட்டும் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. அவை இன்று தங்கள் நண்பர்களை போஷிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் மட்டுமே.

தனது அதிகார திட்டத்திற்காக மேன்மை மிக்க நாடாளுமன்றத்தைக் கூட வன்முறையின் மையமாக மாற்றிய வன்னம், அரசாங்கம் காட்டும் பாசிசவாத இருப்பு கேவலமானது. நாட்டில் இவ்வளவு அழிவுகள் நடந்து கொண்டிருக்கும் போது, தற்போதைய அரசாங்கத்தை சிறிதளவும் நம்புவதற்கு நாட்டு மக்கள் இனிமேலும் தயாராக இல்லை.

எனவே,இந்த நெருக்கடியான நேரத்தில் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சாத்தியமும்,திறனும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு,இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரு குழுவிடம் அரசாங்கத்தை ஒப்படைத்து விட்டு வெளியேறுவது தான் தயங்காது மேற்கொள்ள வேண்டியதாகும்.

சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர்

No comments

Powered by Blogger.