Header Ads



பிரியந்தவின் மரணத்தை இலங்கையின் நெருடிக்கடியை திசைதிருப்ப இனவாத சக்திகள் பயன்படுத்தலாம், ஆத்திரமூட்டல் குறித்து மிக விழிப்புடன் இருங்கள் - சஜித்


பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் பிரியந்த குமார என்ற இலங்கையர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஐக்கிய மக்கள் சக்தியை அதிர்ச்சியடைய செய்துள்ளது. குமாரவின் துயர மரணத்தால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். குமார சியால்கோட்டில் தொழிற்சாலை முகாமையாளராக பணிபுரிந்ததோடு,அவர் பாகிஸ்தானில் சுமார் ஒரு தசாப்தங்களுக்கு கிட்டிய காலம் பணிபுரிந்தார் என்றும் அறியப்படுகிறது.

செய்தி அறிக்கைகளின் படி,தனது மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் திரு. குமார வன்முறை கும்பல் ஒன்றால் கொடூரமாக தாக்கப்பட்டு கொள்ளப்பட்டார். இந்த குற்றத்தை நாங்கள் வன்மையாகவும் வெளிப்படையாகவும் கண்டிப்பதோடு, இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக் கொடுப்பதனை விரைவு படுத்துமாறு பாகிஸ்தான் அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம்.

கௌரவ பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பாகிஸ்தான் தலைமை,தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன்,திரு.குமாரவின் படுகொலைக்கு நீதி வழங்குவதாகவும், வெளிநாட்டவர் மீதான  தாக்குதலின் பின்னனி குறித்து விசாரணை நடத்த  உறுதியளித்துள்ளதை கவனத்தில் கொள்கிறோம்.

இத்தகைய கொடூரமான தாக்குதல்கள் மற்றும் அவற்றின் அடிப்படையிலான கொடூரமான தீவிரவாத சித்தாந்தங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படக்கூடாது.

இந்த விடயத்தில் இலங்கை முழுவதும் அனுதாபமும்  கோபமும் வெளிப்படுவதை ஐக்கிய மக்கள் சக்தி நன்கு அறியும் எனவும்,இந்த சம்பவத்திற்கு பதிலளிப்பதில் நிதானத்தை கடைப்பிடிக்குமாறும், நாட்டு மக்கள் மத்தியில் குரோத உணர்வுகளை தீவிரப்படுத்த முயலும் இனவாத அரசியல் சக்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் ஒட்டு மொத்த இலங்கை மக்களையும் ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக் கொள்கிறது.

இந்தச் சக்திகள் தற்போது இலங்கையில் அனுபவித்து வரும் தற்போதைய சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்ப இந்த நிகழ்வை பயன்படுத்தப்படலாம்.

ஆத்திரமூட்டலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், இதற்கு பதிலளிக்கும் வகையில் சாத்தியமான தாக்குதல்களில் இருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ள இலங்கையில் உள்ள சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும்,சம்பவம் குறித்து விரைவான விசாரணை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி பாகிஸ்தானுக்கான இராஜதந்திர தகவல் தொடர்புகளை தொடர்ந்து வழங்கும்.

மேலும்,இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கையில் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதற்கு பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் கட்சி தொடர்ந்தும் பணியாற்றும்.


சஜித் பிரேமதாச 

எதிர்க்கட்சித் தலைவர்

1 comment:

Powered by Blogger.