December 05, 2021

கொடூரமான இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க நாட்டுமக்கள் ஒன்றினைய வேண்டும் - பிரியந்தவின் கொலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது


உலகில் உள்ள ஏனைய அடிப்படைவாதங்களை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பயங்கரமானது. அறிவியல்,கலாசாரம், மனித நேயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மனித குலம் பெற்றுக்கொண்ட வெற்றியின் பெறுமதியை பலவீனப்படுத்தும் தன்மை இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு உண்டு.

எமது நாட்டிலும் புரையோடி போயுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க நாட்டு மக்கள் ஒன்றுப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாக்கிஸ்தான் நாட்டில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறோம். மத அடிப்படைவாதம் மாத்திமல்ல ஏனைய அடிப்படைவாத செயற்பாடுகளின் பிரதிபலன் பாரதூரமானதாக காணப்படும்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது உலகில் உள்ள ஏனைய அடிப்படைவாதங்களை காட்டிலும் கொடூரமானது. அறிவியல், தொழினுட்பம், மனித நேயம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகள் பெற்றுக் கொண்ட வெற்றியின் பெறுமதியை பலவீனப்படுத்தும் தன்மையை இஸ்லாமிய அடிப்படையாதம் கொண்டுள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் செயற்பாடுகள் மனித குலத்திற்கு அப்பாற்பட்டது.ஒருவரை துன்புறுத்தும் போது அதனை ஏனையோர் சுற்றியிருந்து காணொளி ஊடாக காட்சிப்படுத்தி மகிழ்வுறும் குறுகிய மனநிலையினை கொண்ட சிந்தனைகள் அவர்கள் வசம் காணப்படுகிறது.

அந்தளவிற்கு இஸ்லாமிய  அடிப்படைவாதம் அவர்களை ஈர்த்துள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை சாதாரணமாக கருத கூடாது.

மனித நேயத்திற்கு முன்னுரிமை வழங்கி இப்பிரச்சினையை ஆழமாக நோக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் எவருக்கும் இனி ஏற்பட கூடாது என்று பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

எமது நாட்டில் காணப்படும் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்காமல் இருப்பதற்கு இச்சம்பவத்தை ஒரு எடுத்துக்காட்டாக கருத வேண்டும்.

துன்புறுத்தல்களுக்காக்கப்பட்டு கொல்லப்பட்ட இலங்கையரின் நிலை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.எமது நாட்டிலும் புரையோடிபோயுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்றார்.

(வீரகேசரி)

6 கருத்துரைகள்:

அரபு நாடுகள் இலங்கைக்கு பிச்சை வழங்க முன் இவனுடைய பேச்சுக்களை உன்னிப்பாக அவதாணிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இலங்கையை அரபு நாடுகள் கை விட்டால் நிலைமை எப்படியிருக்கும்?

இந்த அநியாயக்கார அராஜக மோடிக்கு சாடி தூக்கி சதிகார அரசியல் செய்து வரும் மத வெறி பிடித்த நாயை முதலில் ஒழித்து விட்டால் இந்த நாட்டில் அக்கிரமத்திற்கு தலைமை தாங்க மற்ற மத வெறி பிடித்து ஆடும் இரத்த சாக்கடை கூட்டம் ஓட்டம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட வழி பிறக்கும்.

அண்மையில் இலங்கைஹில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் அது என்ன தஹ்கொலைய

Beruwala Digana hettipola galle incident?????

Look who is talking? What about the Sinhala Buddhist Racism he has been openly unleashing against the Muslims in Sri Lanka for more than 10 years now?

Was he not the sponsor of attacks against Muslims in Dambulla, Kandy, Aluthgama, Ampara, Minuwangoda etc. since 2013?

Is the so-called Islamic Fundamentalism any worse than the Sinhala-Buddhist Racism that he is leading?

HATS OFF TO BRIGADIER GANASARA THERO.AT THE RATE YOU RECEIVED THE WELCOME FROM SHAMELESS BRAINLESS MUSLIMS IN KATHANKUDY VERY SOON YOU WILL BECOME THE NATIONAL LEADER OF MUSLIMS LEAVING RAUF HOOKEEM AND RISHARD BRIYNIDEEN IN THE MIDDLE OF THE ROAD.JAYAWEEWA ALLA HOO AKBAR.

Post a Comment