Header Ads



மதீனா (கியாஸி) ஹஸ்ரத் மறைந்தார்


அஷ்ஷைக் எம்.ஆர்.எம். மதீனா (கியாஸி) ஹஸ்ரத் அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - நீர்கொழும்பு பிரதேசக் கிளை விடுக்கும் அனுதாபச் செய்தி

பம்மான்னையைச் சேர்ந்த அஷ்ஷைக் எம்.ஆர்.எம் மதீனா (கியாஸி) ஹஸ்ரத் அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நாட்டு மக்களுக்கு பெரும் சேவை செய்த ஹஸ்ரத் அவர்கள் 01/12/2021 ஆம் திகதி மாலை வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - நீர்கொழும்பு பிரதேசக் கிளை செயற் குழு உறுப்பினராக மிக நீண்ட காலம் சிறப்பாக சேவையாற்றியுள்ளதோடு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - நீர் கொழும்பு பிரதேசக் கிளையில் சமூக சேவைப் பிரிவின் செயளாலராகவும் பல காலங்கள் சேவையாற்றியுள்ளார்கள். மேலும், அவர்கள் நீர் கொழும்பு பெரிய பள்ளிவாசல் (மர்கஸ்), பலகத்துரை ஜும்மா பள்ளிவாசல், இரத்துனபுரி ஜன்னத் ஜும்மா பள்ளிவாசல், மற்றும் தும்மோதரை ஜும்மா பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கதீபாக  சேவையாற்றினார். பலநூறு ஆலிம்கள் உருவாக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்ததோடு, தீனின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை கழித்துள்ளார்கள். இதன் மூலம் மார்க்கத்திற்கும், இந்நாட்டில் நற்பிரஜைகளை உருவாக்குவதற்கும் இவர் செய்த பங்களிப்பு பாரியதொன்றாகும்.

இவ்வேளேயில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா - நீர் கொழும்பு பிரதேசக் கிளையின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, தவறுகளை மன்னித்து, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله

(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக.)

2 comments:

Powered by Blogger.