Header Ads



நாட்டில் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்குமாறு கோரிக்கை


கோவிட் தடுப்பூசியை கட்டாயமாக்குமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தடுப்பூசியை இலங்கையில் கட்டாயமாக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரியுள்ளது.

ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana)  தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களே நோய்த் தொற்றினால் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள் என இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவிட் நோய் தொற்று அறிகுறிகள் காணப்படுவோர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார தரப்பினர் கோரியுள்ளனர்.

நேற்றைய தினம் 746 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளதுடன் இதில் நான்கு பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் 21 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 14461 ஆக உயர்வடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.