Header Ads



பரகாதெனிய ஜம்மியத்துல் அன்ஸாரி உயர் நீதிமன்றத்தை நாடியது, சட்டமா திணைக்கள கோரிக்கை நிராகரிப்பு - அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணைக்கு ஏற்பு


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 11 முஸ்லிம் அமைப்புக்களை தடை செய்து 13.ஏப்ரல் 2021 வர்த்தமானி ஊடாக பாதுகாப்பு அமைச்சு  அறிவித்திருந்தது.  

அதில் பரகாதெனிய ஜம்மியத்துல் அன்ஸாரி சுன்னத்தல் முஹம்மதியா அமைப்பும் உள்ளடக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது இதற்காக இவ் அமைப்பு உயா் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு  விசாரணைக்கு ஏற்பதாக உயா் நீதிமன்றத் அறிவித்துள்ளது.

SUPREME COURT GRANTS LEAVE TO PROCEED AGAINST THE GAZETTE DATED 13TH APRIL 2021 REGARDING THE PROSCRIPTION OF ALL CEYLON JAM-E-ATHU ANSARIS SUNNATHIL  MOHAMMADIA.

மனுதாரருக்காக வாதங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கே. கனக ஈஸ்வரனின் வாதத்தை ஏற்றுக் கொண்ட உயா் நீதிமன்றம் குறித்த மனுவை விசாரணைக்கு எற்காது தள்ளுபடி செய்ய வேண்டும்  என சட்டமா அதிபா் திணைக்களத்தின் கோரிக்யையும் நிராகரித்தது.

நீதியரசா் காமினி அமரசேகர தலைமையிலான நீதியரசா்கலான அச்சலன் வெங்கப்புலி, மற்றும் அர்ஜூன் ஒபேசேகர் ஆகியோரை உள்ளடிக்கிய நீதியரசா்கள் குழாமே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் மனு மீதான விசாரணை எதிா்வரும் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 05ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ் பராகாதெனியாவில் இயங்கும்   அன்ஸாரி சுன்னதுல் முஹம்மதியா அமைப்பு 1947 ஆம் ஆண்டு முதல் செயற்படும்  ஒரு நிறுவனம் என்பதை ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் சுட்டிக்காட்டினாா். இந் நிறுவனம் குர்ஆணை போதிக்கும் நிறுவனம், அத்துடன் இலங்கையின் சட்டங்களுக்கு உட்பட்டு நிறுவப்பட்ட நிறுவனம், வெளிநாட்டு மற்றும் உள்ளுர்் நன்கொடையாளா்களிடமிருந்து நிதியை அந்த நிறுவனம் பெற்றுக் கொள்கின்றது. குவைட் நாட்டின் அரச நிறுவனமான ஸகாத்  ஹவுஸ் ஒப் ஸ்டேட் உள்ளிட்ட அமைப்புக்கள், சவுதி அரேபியாவிலிருந்து தனிப்பட்ட நன்கொடையாளா்கள் உள்ளிட்ட பலரிடம் இருந்து நன்கொடை பணம் இந்த அமைப்புக்கு கிடைக்கின்றது. 

இந் நிறுவனம்  ஏழைகளுக்கு ஆதரவற்றோா்கள், பெற்றோா்களை இழந்த வறுமையான பாடசாலை ,உயா்கல்வி, பல்கழைக்கழக மாணவா்களுக்கு புலமைப்பரிசில் வழங்கிவருகின்றது. அனா்த்தமுகாமைத்துவம், இரத்தானம், வீடுகள், கினறுகட்டிக் கொடுத்தல், தொழுகை அறைகளை நிறுவுதல் புனித அல்குர்ஆணை சிறாா்களுக்கு கற்பித்தல் போன்ற விடயங்களில் இலங்கை சமூகத்திற்கு சேவையாற்றி வருகின்றது.

மனு மீதான விசாரணை எதிா்வரும் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 05ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

(Ashraff A Samad)


No comments

Powered by Blogger.