Header Ads



இலங்கையர் உயிருடன் படுகொலை - இந்த நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமானது என இம்ரான் கான் சீற்றம்


பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள இந்த நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

ட்விட்டர் பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

அவர் தனது பதிவில்.... 

சியல்கோட்டில் உள்ள தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் இலங்கை மேலாளர் உயிருடன் எரிக்கப்பட்ட இன்றைய நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள். நான் விசாரணைகளை மேற்பார்வையிட்டு வருகிறேன். இதற்கு காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. 

பாகிஸ்தானில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறித்த இலங்கையர் பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றியுள்ளார். 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியல்கோட் நகரில் வைத்து அவர் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். 

பெரும் எண்ணிக்கையிலான நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டு அவரது உடல் எரிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. 

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் அரசு உரிய விசாரணைகளை மேற்கொள்ளும் என எதிர்ப்பார்ப்பதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

4 comments:

  1. பயங்கரவாத நாடான பாக்கிஸ்தானில் இது தினசரி நடப்பவை தானே

    ReplyDelete
  2. எவ்வளவு நல்ல பிரதமரும் ஆட்சியாளர்களும் இருந்த போதிலும்,இந்தக் காட்டு மிராண்டிகளைத் திருத்தி சரியான வழிக்கு கொண்டு வருவது என்பது வெறும் பகல் கனவு.

    ReplyDelete
  3. இந்தியா வுக்கு பக்கத்து நாடான தால தான் முழு தென் ஆசியாவுக்கும் அவமானம். ஏன் மோடிக்கு இடம் கொடுத்து வரும் நிலையில் முழு உலகமும் இவ்வாறு அக்கிரமத்தை ஏற்று கொள்ள வேண்டும். இதன் உண்மையான தந்திரம் அநேகருக்கு ஏனோ புரியுதில்லை. அக்கிரமம் இருப்பதைவிட அக்கிரமக்காரர்கள் இருப்பது மிகவும் ஆபத்தானது இதை இன்னும் இந்த உலகம் உணரவில்லை என்பதை நினைக்க மிகவும் வேதனை தருகிறது.

    ReplyDelete

Powered by Blogger.