Header Ads



முஸ்லிம் பெண் பட்டதாரிகள் ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழைப் பெற்றனர் - மத குருக்களுக்கு மரியாதை செய்வதா நோக்கமாக இருந்தது..?


ஏ எல் ஜுனைதீன்

மேடையில் வைத்து முருத்தெட்டுவே ஆனந்த தேரரை  பட்டதாரிகள் புறக்கணித்து சான்றிதழை வாங்க மறுத்துள்ள நிலையில்,  முஸ்லிம் பெண் பட்டதாரிகள் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சம்பிரதாய பட்டமளிப்பு விழாவில் பல்கலையின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரை பட்டதாரிகள்  பொது மேடையில் வைத்து புறக்கணித்தள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் முஸ்லிம் பெண் பட்டதாரிகள் மதகுருக்களுக்கு மரியாதை செய்யவேண்டும் என்ற மத கொள்கையை மதித்து வேந்தர் முருத்தெட்டுவே தேரரிடமிருந்து சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரரை நியமித்தமைக்கு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரதான மாணவர் ஒன்றியம் என்பன அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.

முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழைப் பெற சிலர் மறுத்துள்ள நிலையில், மாணவர்கள் சிலர் கையில் கறுப்புப் பட்டியை அணிந்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முகாமைத்துவ பீடம் மற்றும் நிதி ஆசிரியர் சங்கமும் (FMFTA) இந்த நிகழ்வைப் புறக்கணித்துள்ளன.

1 comment:

  1. தவறு, ஏதாவது மாற்று வழியைக் கடைப்பிடித்திருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.