Header Ads



பொரித்த மீன் சாப்பிட்டு வாந்தி எடுத்த குழந்தைகளுக்கு, மருத்துவ பரிந்துரையின்றி மருந்து வாங்கிக்கொடுத்ததால் குழந்தைகள் வபாத்


தெருவோர கடைகளில் மாமிச உணவுகள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

பொரித்த மீன் சாப்பிட்டு வாந்தி எடுத்த குழந்தைகளுக்கு மருத்துவ பரிந்துரையின்றி மருந்து வாங்கிக்கொடுத்ததால் அக்குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

வேலூர் கஸ்பா பஜார் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அன்சர் - சுரேயா தம்பதிக்கு 4 வயதில் ஆஃப்ரீன் என்ற பெண் குழந்தையும் 3 வயதில் அசேன் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.

இந்நிலையில் ஆட்டோ ஓட்டி முடித்து மாலை வீடு திரும்பிய அன்சர், சைதாப்பேட்டை பகுதியில் எண்ணெயில் பொரித்த மீன் துண்டுகளை குழந்தைகளுக்காக வாங்கி வந்துள்ளார்.

அதனை சாப்பிட்ட 2 குழந்தைகளும் தொடர்ந்து வாந்தி எடுத்ததால் அருகில் இருந்த மருந்தகத்தில் மருந்து வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு உடல் மேலும் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தனர். 

இதன் பின்னர் குழந்தைகளை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து இது நிச்சயம் ஃபுட் பாய்சன் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் "உடற்கூராய்வுக்கு பின்னர்தான் குழந்தைகளின் இறப்புகான உண்மையான காரணம் தெரியவரும்"  என்றார் அம்மருத்துவமனையின் மருத்துவர்.

No comments

Powered by Blogger.