Header Ads



சம்பளத்தை அதிகரிக்க முடியாது, குறைக்கத் தான் வேண்டும் - போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானது


போராட்டம் தலைதூக்கினால் நாட்டை முன்னேற்ற முடியாது என்கிறார் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த எஸ்.பி.திஸாநாயக்க, சம்பளம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் அரசாங்கம் இடமளிக்க கூடாது எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

“தற்போதைய நிலையில் சம்பளத்தை எத்தரப்பினருக்கும் அதிகரிக்க முடியாது. சம்பளத்தை குறைக்கத் தான் வேண்டும்.

கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் செல்வந்த நாடுகளே அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவில்லை. அந்நாட்டு மக்களும் சம்பள அதிகரிப்பிற்காக வீதிக்கிறங்கி போராடவுமில்லை.

தற்போதைய சூழ்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமான செயற்பாடாக கருதி போராட்டங்களை முடக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். 

3 comments:

  1. உண்மைதான். நாட்டில் பொருள்களின் விலைகளை கண்மண் தெரியாத அளவிற்கு அதிகரித்துவிட்டு பணத்தின் பெறுமதியைக் கீழ்மட்டம்வரை குறைத்து அவற்றின் தரத்தை சாதாரண பேப்பரின் பெறுமதி அளவிற்கு உள்வாங்கியதன் பிறகும் அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்பிற்காக சண்டை பிடித்து மண்டையை உடைப்பது அபத்தமானதுதான்.

    ReplyDelete
  2. பல்வேறு களவுகளையும் மோசடிகளையும் செய்துவிட்டு இப்போது பொதுமக்களின் குரலை அடக்குவதற்கு வக்காளத்து வாங்கும் இந்த மந்தி(ரி)யை உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி நிரந்தரமாக சிறையில் அடைக்க இந்தநாட்டின் பொதுமக்கள் உடனடியாக நடவடிக்ைக எடுக்கவேண்டும்.

    ReplyDelete
  3. Iya antha naduhalil avarhal perum sambalam avarhalin selavuhalai Vida 10 madangu varumanam so avarhal veethikku iranga vendiya avasiyamillai

    ReplyDelete

Powered by Blogger.